tamilkurinji logo
 

தன்னை கருணைக் கொலை செய்ய கோரி திருநங்கை உருக்கமாக கடிதம்,


செய்திகள் >>> இந்தியா

தன்னை கருணைக் கொலை செய்ய கோரி திருநங்கை உருக்கமாக கடிதம்

First Published : Wednesday , 14th February 2018 07:39:08 PM
Last Updated : Wednesday , 14th February 2018 07:39:08 PM


தன்னை கருணைக் கொலை செய்ய கோரி திருநங்கை உருக்கமாக கடிதம்,

தன்னை கருணைக் கொலை செய்ய உத்தரவிடக் கோரி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் உருக்கமான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஏர் இந்தியா விமான நிறுவனம் பணி வழங்க மறுத்ததால் தன்னை கருணைக் கொலை செய்ய உத்தரவிடக் கோரி அவர் குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பியுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கை ஷானவி பொன்னுசாமி. குடும்பத்தின முதல் பட்டதாரி. அதுவும் பொறியியல் பட்டதாரி. மாடலிங், நடிப்பு என பல திறமைகளையும் கொண்டவராக இருக்கிறார். ஆனால், இவை ஏதும் அவர் விண்ணப்பித்த வேலைக்கு தகுதி சேர்க்கவில்லை.

திருநங்கை என்பதால் அவரை பணிக்கு சேர்க்க முடியாது என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துவிட்டது. தங்கள் பணிநியமனக் கொள்கையில் மூன்றாம் பாலினத்தவரை வேலைக்குச் சேர்த்துக் கொள்ள இடமில்லை எனக் கூறி அவருக்கு பணி வழங்க மறுத்துள்ளது.

இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஷானவி பொன்னுசாமி உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். பாலின பேதத்தால் ஏர் இந்தியா தனக்கு பணி வழங்க மறுப்பதாகக் கூறியிருந்தார்.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றமும் ஏர் இந்தியா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அந்த நோட்டீஸுக்கும் இதுவரை எந்தவித விளக்கமும் இருதரப்பிலிருந்துமே அளிக்கப்படவில்லை.

இந்நிலையில், ஷானவி பொன்னுசாமி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், "பாலின பேதத்தால் எனக்கு ஏர் இந்தியா நிறுவனம் பணி அளிக்க மறுக்கிறது.

இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்த என்னால், ஏர் இந்தியா நிறுவனத்தையோ அல்லது விமான போக்குவரத்து அமைச்சகத்தையோ பேச வைக்கமுடியவில்லை.

அதனால், இந்திய அரசின் கைகளாலேயே உயிர் துறப்பதை பெருமிதமாகக் கருதுகிறேன். என்னை கருணைக் கொலை செய்துவிடுங்கள். எனது அன்றாட உணவு செலவவுக்கே என்னிடம் பணம் இல்லை.

அப்படியிருக்க, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு எப்படி வழக்காடுவதற்கு கட்டணம் கொடுக்க முடியும். என்னை கருணைக் கொலை செய்ய உத்தரவிடுங்கள்" என உருக்கமாக வேண்டியுள்ளார்.


தன்னை கருணைக் கொலை செய்ய கோரி திருநங்கை உருக்கமாக கடிதம், தன்னை கருணைக் கொலை செய்ய கோரி திருநங்கை உருக்கமாக கடிதம், தன்னை கருணைக் கொலை செய்ய கோரி திருநங்கை உருக்கமாக கடிதம்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 போலீஸ் மீது மிளகாய் பொடியை தூவி கொலை குற்றவாளியை மீட்டுச் சென்ற கூட்டாளிகள்
டெல்லியில், கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட கைதி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டபோது, போலீஸார் கண்களில் மிளகாய் பொடியை தூவி தாக்குதல் நடத்தி அந்த நபரை கூட்டாளிகள் மீட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   ஹரியாணா மாநிலம் குர்கான் பகுதியை சேர்ந்தவர் சந்தீப். கிழக்கு

மேலும்...

 3வது திருமணம் செய்து கொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான்
முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் பாகிஸ்தான் தெஹ்ரீக் ஈ இன்சாப் கட்சி தலைவரான இம்ரான் கான் 3வது முறையாக திருமணம் செய்து கொண்டார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் இம்ரான் கான்.  கடந்த 1992ம் ஆண்டு உலக கோப்பையை இவரது

மேலும்...

 காதல் திருமணம் செய்த இளம் பெண் வங்காளத்தில் மர்மமான முறையில் மரணம்
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவருடைய மகள் பூர்ணாதேவி (வயது 19). இவர் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.அப்போது அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த வங்காளதேசத்தை சேர்ந்த ரிமுஷேக்

மேலும்...

 ஆந்திராவின் வனப்பகுதி ஏரியில் 7 தமிழர்கள் உடல்கள் மீட்பு
ஆந்திர மாநிலத்தில் செம்மரம் வெட்டுவதற்காக தமிழர்கள் அடிக்கடி சென்று வருகின்றனர். செம்மரங்களை மடக்கி பிடிக்கும் ஆந்திர மாநில போலீசார் தமிழர்களை சிறைபிடித்து வைத்து வருகின்றனர். இந்நிலையில், ஆந்திரா மாநிலத்தின் கடப்பா அருகே ஒண்டிமிட்டா வனப்பகுதியில் உள்ள ஏரியில் 7 தமிழர்கள் உடல்கள் இன்று

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in