தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு குறையாது புற்றுநோய் மைய வைரவிழாவில் பிரதமர் மோடி

தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு குறையாது புற்றுநோய் மைய வைரவிழாவில் பிரதமர் மோடி
தமிழகத்திற்கு நிதியை குறைத்து விட்டோம் என சிலர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர் என அடையாறு புற்றுநோய் மைய வைரவிழா கட்டட திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேசினார்.

அடையாறு புற்றுநோய் மைய வைரவிழா கட்டட திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.


விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அடையாறு புற்றுநோய் மைய வைரவிழா கட்டடத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி. பின் அவர் விழாவில்  ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்துகளை கூறி சென்னை அடையாறு புற்றுநோய் மைய வைரவிழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார்.

இந்தியாவில் புதிதாக அமைய உள்ள 14 எய்ம்ஸ் மருத்துவமனைகளில், புற்றுநோய் சிகிச்சை பிரதானமாக இருக்கும்  .

நோய் தடுப்பு வசதிகளை வீட்டின் அருகே அமைத்து தருவதே அரசின் மருத்துவக் கொள்கை; தமிழக முதல்வரோடு ஆலோசித்து மத்திய அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்படும்

தமிழகத்திற்கு நிதியை குறைத்துவிட்டோம் என சிலர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு குறையாது . நிதி ஒதுக்கீட்டில் தமிழகம் பாதிக்கப்படாமல் பார்த்து கொள்ளப்படும்.

நாம் எல்லோரும் சேர்ந்து புதிய இந்தியாவை உருவாக்குவோம்; அதுவே நம் விடுதலை போராட்ட தியாகிகளுக்கு பெருமை சேர்க்கும்

அடையாறு புற்றுநோய் மையத்திற்கு உதவ வேண்டும் என சாந்தா கோரிக்கை விடுத்திருந்தார்; அவரது கோரிக்கைகளை மத்திய அரசு கண்டிப்பாக பரிசீலிக்கும்.

புற்றுநோயை தடுக்க அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயார்; 10 கோடி குடும்பங்கள் பயன்பெற புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகம் என கூறினார்.
https://goo.gl/9ExrjJ






17 Mar 2019

2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

06 Mar 2019

தேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி

06 Mar 2019

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு

19 Feb 2019

குடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை

19 Feb 2019

அ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி

06 Feb 2019

குப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது

03 Jan 2019

கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

02 Jan 2019

கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்

30 Dec 2018

சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

30 Dec 2018

அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்