tamilkurinji logo
 

தமிழகத்தில் ஓரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> தமிழகம்

தமிழகத்தில் ஓரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

First Published : Sunday , 3rd December 2017 08:00:54 PM
Last Updated : Sunday , 3rd December 2017 08:00:54 PM


தமிழகத்தில் ஓரு சில  இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ''அந்தமான் பகுதியில் சனிக்கிழமை நிலவிய வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவுகிறது.

இது அடுத்து வரும் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். மேலும் இது வரும் டிசம்பர் 7-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் வடமேற்கு திசையில் தெற்கு ஆந்திரா மற்றும் வடதமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஓரிரு முறை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவர்கள் வரும் டிசம்பர் 5-ம் தேதி முதல் தெற்கு ஆந்திரம் மற்றும் வட தமிழகத்தை ஒட்டியுள்ள ஆழ்கடல் பகுதியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்'' என்று பாலச்சந்திரன் தெரிவித்தார்.


தமிழகத்தில் ஓரு சில  இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
தமிழகத்தில் ஓரு சில  இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
தமிழகத்தில் ஓரு சில  இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 திருச்செந்தூர் கோயில் மண்டபம் இடிந்து பெண் பலி
திருச்செந்தூர் முருகன் கோயிலில் வள்ளி குகை அருகே பிரகார மண்டபத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது.இதில் மோர் வியாபாரியான ரவி என்பவரது மனைவி பேச்சியம்மாள் என்பவர் மரணமடைந்தார்.2 பேர் காயமடைந்தனர். தொடர்ந்து தீயணைப்பு துறையினர், வருவாய் துறையினர், போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும்...

 கன்னியாகுமரியில் வன்முறையை தூண்ட சதி செய்ததாக 7 மீனவர்கள் கைது
குமரி மாவட்டத்தில் ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டதாக பச்சை தமிழகம் அமைப்பாளர் சுப. உதயகுமார், 17 பாதிரியார்கள் உட்பட 14,500 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வன்முறையை உருவாக்க சதி செய்ததாக வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 7

மேலும்...

 தாயை கொலை செய்து தப்பியோடிய குற்றவாளி தஷ்வந்த் மும்பையில் கைது
சிறுமி ஹாசினியை கொலை செய்த வழக்கில் ஜாமீனில் பெற்று வீட்டிலிருந்த தஷ்வந்த் கடந்த சனிக்கிழமை தனது தாயையும் அடித்துக் கொன்றார். பின்னர் நகைகளுடன் தலைமறைவான தஷ்வந்தை மும்பையில் வைத்து தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.கடந்த பிப்ரவரி மாதம் சென்னை மாங்காடு பகுதியைச்

மேலும்...

 திருச்சி அருகே விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலி
கன்னியாகுமரியிலிருந்து குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்றவர்களின் சுற்றுலா வேன் திருச்சி அருகே நின்றிருந்த லாரிமீது பின்புறமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே 10 பேர் பலியானார்கள். காயத்துடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கன்னியாகுமரி நாகர்கோவில் கீழத்தெருவை சேர்ந்தவர் நடராஜன்(44) இவர் குடும்பத்தாருடன் டெம்போ டிராவலர் வேனில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in