tamilkurinji logo


 

தமிழகம் முழுவதும் நாளை அரசு பேருந்து, ஆட்டோக்கள் ஓடாது,tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> தமிழகம்

தமிழகம் முழுவதும் நாளை அரசு பேருந்து, ஆட்டோக்கள் ஓடாது

First Published : Monday , 6th August 2018 06:24:30 PM
Last Updated : Monday , 6th August 2018 06:24:30 PM


தமிழகம் முழுவதும் நாளை அரசு பேருந்து, ஆட்டோக்கள் ஓடாது,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

மோட்டார் வாகன சட்ட மசோதாவில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் உள்ள மோட்டார் தொழில் சார்ந்த அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

மோட்டார் வாகன சட்ட திருத்தம் செய்தால் இத்தொழிலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்பதால் மத்திய தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் நாளை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.

சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யு.சி., உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள எல்.பி.எப்., பாட்டாளி, விடுதலை சிறுத்தை, மறுமலர்ச்சி, தே.மு.தி.க. போன்ற சங்கங்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றன.

தமிழகத்தில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அரசு போக்குவரத்து, ஆட்டோக்கள், கால்டாக்சிகள் போன்றவை ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளன.

லோடு ஆட்டோ, ஒர்க்‌ஷாப், டிரைவிங் ஸ்கூல் போன்ற மோட்டார் வாகன சம்பந்தப்பட்ட அனைத்து அமைப்புகளும் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.

இதுகுறித்து அரசு போக்குவரத்து தொழிற்சங்க பொதுச்செயலாளரும் சாலை போக்குவரத்து சம்மேளன தலைவருமான ஆறுமுக நயினார் கூறியதாவது:-

மத்திய அரசு கொண்டு வரும் மோட்டார் வாகன சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக நாளை ஒருநாள் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக வேலைநிறுத்தம் நடக்கிறது. ஆளும்கட்சி தொழிற்சங்கம் தவிர மற்ற அனைத்து சங்கங்களும் இதில் பங்கேற்கின்றன. அதனால் நாளை ஆட்டோ, கால்டாக்சி, உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் ஓடாது. தமிழகத்தில் 3 லட்சம் ஆட்டோக்கள் நாளை ஓடாது. சென்னையை பொறுத்தவரை 1½ லட்சம் ஆட்டோக்கள் நாளை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.

அனைத்து தொழிற்சங்கம் சார்பாக அண்ணாசாலை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

தமிழகம் முழுவதும் நாளை அரசு பேருந்து, ஆட்டோக்கள் ஓடாது,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema தமிழகம் முழுவதும் நாளை அரசு பேருந்து, ஆட்டோக்கள் ஓடாது,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema தமிழகம் முழுவதும் நாளை அரசு பேருந்து, ஆட்டோக்கள் ஓடாது,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது: சைதாப்பேட்டை நீதிமன்றம்
தேச விரோத செயலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது என்று சைதாப்பேட்டை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சென்னையைச் சேர்ந்த திருமுருகன் காந்தி. இவர் ஜெனீவாவில் அண்மையில் நடைபெற்ற ஐ.நா.வின் மனித

மேலும்...

 ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ - சந்தனபெட்டியின் மீது வாசகம்
ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ என கருணாநிதி உடல் வைக்கப்பட்ட சந்தனபெட்டியின் மீது வாசகம் எழுதப்பட்டுள்ளது.5 முறை தமிழக முதல் அமைச்சராகவும் 50 ஆண்டு காலம் திமுக தலைவருமாக இருந்தவருமான கலைஞர் கருணாநிதி நேற்று (ஆகஸ்ட் 7) காலமானார். இந்திய

மேலும்...

 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கருணாநிதி உடல் அடக்கம்
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நல குறைவால் நேற்று(செவ்வாய்க்கிழமை) மாலை காலமானார். அவருக்கு வயது 95. இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதியின் மறைவுக்கு, ஜனாதிபதி,

மேலும்...

 முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார்
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த கருணாநிதி சென்னையில் காலமானார். 95 வயதான கலைஞர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். 25ம் தேதி உடல்நிலை சரியில்லாமல்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in