தயவுசெய்து செயல்படுங்கள்..!' - பிரதமர் மோடிக்கு கமல் கோரிக்கை

தயவுசெய்து செயல்படுங்கள்..!' - பிரதமர் மோடிக்கு கமல் கோரிக்கை
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு வகையான போராட்டங்கள் நடந்து வருகிறது.


விவசாயிகள், பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரலங்கள் பலரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ராணுவ கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று காலை சென்னை வந்துள்ளார். பல்வேறு தரப்பினரும் மேதடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏந்தி போராட்டங்கள் நடந்து வருகிறது.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் பிரதமர் மோடிக்கு வீடியோ வடிவில் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அந்த வீடியோவில்,

ஐயா வணக்கம், இது கமல்ஹாசன், நான் உங்கள் குடிமகன், இது என் மாண்புமிகு பிரதமருக்கு நான் அனுப்பித் தரும் ஒரு திறந்த வீடியோ, தமிழகத்தில் நிலவும் இந்த நிலை தாங்கள் அறியாததல்ல, தமிழக மக்கள் நீதிக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். நீதி வழங்கப்பட்டாகிவிட்டது.

 
ஆனால் செயல்படுத்த வேண்டியது உங்கள் கடமை. பாமரர்களும், பண்டிதர்களும் இந்த காலதாமதம் கர்நாடக தேர்தலுக்காகத் தான் என்று நம்பத் துவங்கி விட்டார்கள். அது ஆபத்தானது.


அவமானகரமானதும் கூட, இதை நீங்கள் மாற்றுவீர்கள் என்று நம்புகிறோம். தமிழர்களுக்கும், கர்நாடக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நீதி கிடைக்க காவிரி மேலாண்மை வாரியத்தை நீங்கள் அமைத்தே ஆக வேண்டும். அது உங்கள் கடமை. நினைவுறுத்த வேண்டியது என் உரிமை.

இங்கே இந்த வீடியோவில் சொல்ல மறந்த வார்த்தைகளை கடித வடிவிலும் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். தயது செய்து செயல்படுங்கள். இன்றலை மாற வழி செய்யுங்கள். வணக்கம். வாழ்க இந்தியா. நீங்களும். இவ்வாறு கோரிக்கை வைத்துள்ளார்.

https://goo.gl/pasGGD


14 Dec 2018

நான் உழைத்து முதல்வரானேன்: நீங்கள் அப்பாவின் தயவால் உயர்ந்துள்ளீர்கள்: ஸ்டாலின்மீது எடப்பாடி பாய்ச்சல்

14 Dec 2018

புயலால் 8 மீட்டர் வரை அலை எழும்பும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

14 Dec 2018

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வாய்ப்பு என தகவல்

13 Dec 2018

பள்ளியில் 5 மாணவிகள் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி

13 Dec 2018

கழிவறை கேட்டு தந்தை மீது புகார் தந்த 7 வயது சிறுமி.. ஆம்பூர் தூய்மை இந்தியா தூதுவரானார்

13 Dec 2018

காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் : வட தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு

13 Dec 2018

தினகரனை தவிர பிரிந்து சென்றவர்கள் யார் வேண்டுமானாலும் திரும்பி வரலாம் - முதல்வர் பகிரங்க அழைப்பு

11 Dec 2018

குடும்ப வறுமையில் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை

11 Dec 2018

கூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு: கல்லூரி மாணவி பரிதாப மரணம்

10 Dec 2018

கிராமங்களுக்கு மின்சாரம் கிடைத்த பின்னர் தான் சென்னை செல்வேன்- அமைச்சர் விஜயபாஸ்கர்