தலையில் தாக்கியது பவுன்சர் பந்து நிலைகுலைந்து போனார் வாட்சன்

தலையில் தாக்கியது பவுன்சர் பந்து நிலைகுலைந்து போனார் வாட்சன்
மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான வலைப்பயிற்சியின் போது இன்று காலை பவுன்சர் பந்து தலையில் தாக்கியதால் ஆஸ்திரேலிய வீரர் வாட்சன் நிலைகுலைந்து போனார். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் பாக்சிங் டே என்று அழைக்கப்படுகிறது.

அந்த நாளில் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதை ஆஸ்திரேலிய அணி வழக்கமாக கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு மெல்போர்ன் மைதானத்தில் ஆஸ்திரேலியா&இந்திய அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி பாக்சிங் டே டெஸ்ட் போட்டியாக துவங்குகிறது.


தொடரில் 2&0 என்ற போட்டிக்கணக்கில் முன்னிலை பெற்றுள்ள ஆஸ்திரேலியா, பாக்சிங் டே டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற மும்முரமாக உள்ளது.
இதற்காக மெல்போர்ன் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியினர் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். பயிற்சியாளர் டேரன் லீமேன் முன்னிலையில் பயிற்சி நடந்து வருகிறது.

இன்று காலை ஆஸ்திரேலிய அணியின் ஆல்&ரவுண்டர் ஷேன் வாட்சன் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட அவருக்கு பிரபல ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பாட்டின்சன் பந்து வீசினார்.


அப்போது பவுன்சராக வீசிய ஒரு பந்து எகிறி வாட்சனின் ஹெல்மெட்டில் தாக்கியது. அதிவேகத்தில் பந்து ஹெல்மெட்டில் பட்டதால் வாட்சன் நிலை குலைந்தார். அருகில் பயிற்சி செய்து கொண்டிருந்த மற்ற வீரர்கள், பந்து வீசிய பாட்டின்சன், பயிற்சியாளர் லீமேன் ஆகியோர் வாட்சனை நோக்கி ஓடி வந்தனர்.


அதிர்ந்து போன வாட்சன் ஹெல்மெட்டை கழற்றி பரிசோதித்தார். அதிர்ச்சியில் இருந்து மீளாத நிலையில் வாட்சன், வலைப்பயிற்சியில் இருந்து வெளியேறி தலையை கையால் பிடித்தபடி புல்தரையில் அமர்ந்துவிட்டார். அணி டாக்டரான பீட்டர் புரூக்னர் விரைந்து வந்து, வாட்சனுக்கு காயம் ஏற்பட்டுள்ளதா என பரிசோதித்தார்.  இதில், வாட்சனுக்கு காயமேதும் ஏற்படவில்லை என தெரிய வந்தது.

வாட்சன் காயமின்றி தப்பியதை துணை கேப்டன் பிராட் ஹாடினும் உறுதி செய்தார். வாட்சனிடம் நான் பேசினேன். அவர் சிறிது அதிர்ச்சியடைந்துள்ளார். ஆனால், அவருக்கு வேறு பாதிப்பில்லை, என்று ஹாடின் தெரிவித்தார். இந்த சம்பவத்துக்குப் பின்னர் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த குடும்ப தின நிகழ்ச்சியில் பங்கேற்காமல், அணியினர் தங்கியுள்ள ஓட்டலுக்கு வாட்சன் சென்றுவிட்டார்.

கடந்த மாதம் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் பவுன்சர் பந்து தலையில் தாக்கியதில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் பிலிப் ஹியூஸ் மரணமடைந்தார். அந்த உள்ளூர் போட்டியின் போது எதிரணியான நியூ சவுத் வேல்ஸ் அணியில் வாட்சனும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹியூஸ் பந்தால் தாக்கப்பட்டு கீழே விழுந்ததை நேரில் பார்த்த வாட்சனின் மனதில் இருந்து, அந்த சம்பவத்தால் ஏற்பட்ட அதிர்ச்சி இன்னும் நீங்காமல் உள்ளது என சக வீரர்கள் கூறினர்.
https://goo.gl/B94RFH


15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்