தாயின் கண்ணீரை பார்த்து, மனம் மாறிய பயங்கரவாதி

தாயின் கண்ணீரை பார்த்து,  மனம் மாறிய பயங்கரவாதி
தாயின் கண்ணீரை பார்த்து, பயங்கரவாத அமைப்பிலிருந்து விலகிய இளைஞர் ஒருவர் வீடு திரும்பியுள்ளதாக காஷ்மீர் மாநில போலீஸ் டிஜிபி கூறியுள்ளார் 

ஜம்மு - காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தளபதி புர்கான் வானி கொல்லப்பட்டதை அடுத்து இளைஞர்கள் பயங்கரவாத இயக்கங்களில் இணைந்து வருவது கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பாகிஸ்தானில் இருந்து வரும் நிதியின் துணைகொண்டு இவர்களை தவறான பாதையில் வழிநடத்தும் சம்பவமும் அதிகரித்து காணப்பட்டது.

இதையடுத்து, படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்த இளைஞர்களை வீடு திரும்புமாறு பாதுகாப்பு படை மற்றும் அரசு தரப்பிலும், அவர்களது பெற்றோரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், காஷ்மீரில் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த வாலிபர் ஒருவர் தாயாரின் கோரிக்கையை ஏற்று குடும்பத்தாரிடம் இணைந்துள்ளார்.

இதுதொடர்பாக, போலீஸ் டி.ஜி.பி. எஸ்.பி. வெய்த் டுவிட்டரில் கூறுகையில், தாயாரின் கோரிக்கையை ஏற்று வன்முறை பாதையில் இருந்து விலகி மற்றொரு இளைஞர் வீடு திரும்பி உள்ளார். உறவினர்களுடன் இணைந்த அந்த இளைஞருக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு முதல் இதுபோன்ற சம்பவங்களில் 12-க்கும் அதிகமான இளைஞர்கள் சரணடைந்து வீடு திரும்பி உள்ளனர் என பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
https://goo.gl/7mbjDQ


18 Dec 2018

ஐபிஎல் ஏலம் : அதிக விலை போன இந்திய பந்து வீச்சாளர்கள்

14 Dec 2018

4 வது மாடியில் இருந்து குதித்து பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை

13 Dec 2018

தெலங்கானா முதல்வராக தொடர்ந்து 2-வது முறையாக சந்திரசேகர் ராவ் பதவி ஏற்றார்

11 Dec 2018

பா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு

11 Dec 2018

பா.ஜ.க. செல்வாக்கு இழந்து விட்டதையே 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது - ரஜினி

10 Dec 2018

பா.ஜனதாவை வீழ்த்த 14 கட்சி கூட்டணி- டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை

10 Dec 2018

நாடு முழுவதும் செங்கல் மூலம் கட்டிடம் கட்டத் தடை: மத்திய அரசு திட்டம்

16 Oct 2018

நாளை நடைதிறப்பு - சபரிமலை கோவிலில் பலத்த பாதுகாப்பு

11 Oct 2018

மசூதியில் பெண்களை தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும்: கேரள முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு

10 Oct 2018

சிறுமி பலாத்காரம் “என்னுடைய மகனை தூக்கிலிடுங்கள், மற்றவர்களை தாக்காதீர்கள்