tamilkurinji logo
 

தாயை கொலை செய்து தப்பியோடிய குற்றவாளி தஷ்வந்த் மும்பையில் கைது,tamil news ,tamilseithigal , indiaseithigal,indianews, tamilcinemanews,தமிழ்செய்திகள்,இந்தியசெய்திகள், தமிழ் சினிமாசெய்திகள்

tamil,news,,tamilseithigal,,,indiaseithigal,indianews,,tamilcinemanews,தமிழ்செய்திகள்,இந்தியசெய்திகள்,,தமிழ்,சினிமாசெய்திகள்


செய்திகள் >>> தமிழகம்

தாயை கொலை செய்து தப்பியோடிய குற்றவாளி தஷ்வந்த் மும்பையில் கைது

First Published : Thursday , 7th December 2017 01:58:28 PM
Last Updated : Thursday , 7th December 2017 01:58:28 PM


தாயை கொலை செய்து  தப்பியோடிய குற்றவாளி தஷ்வந்த் மும்பையில் கைது,tamil news ,tamilseithigal , indiaseithigal,indianews, tamilcinemanews,தமிழ்செய்திகள்,இந்தியசெய்திகள், தமிழ் சினிமாசெய்திகள்

சிறுமி ஹாசினியை கொலை செய்த வழக்கில் ஜாமீனில் பெற்று வீட்டிலிருந்த தஷ்வந்த் கடந்த சனிக்கிழமை தனது தாயையும் அடித்துக் கொன்றார்.


பின்னர் நகைகளுடன் தலைமறைவான தஷ்வந்தை மும்பையில் வைத்து தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹாசினி திடீரென காணாமல் போனார். விளையாடச் சென்ற குழந்தை வீடு திரும்பவில்லை.


எங்கு தேடியும் கிடைக்கவில்லை. போலீஸ் விசாரணையில் ஹாசினியை அவரது பக்கத்து வீட்டில் வசித்த தஷ்வந்த் என்ற இளைஞரே கடைசியாக அழைத்துச் சென்றது உறுதியானது.

இதன் அடிப்படையில் தஷ்வந்திடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

இதில், தஷ்வந்த் ஹாசினியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றது தெரியவந்தது. சிறுமி கொலை, பலாத்காரம் வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனால், அவர் மீதான குண்டர் சட்டம் தொடர்பாக போலீஸார் விளக்கமளிக்காததால் நீதிமன்றம் குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்தது. இதனையடுத்து சிறையில் இருந்து வெளியேவந்த தனது பெற்றோருடன் வசித்துவந்தார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை காலை தஷ்வந்தின் தாயார் சரளா படுகாயங்களுடன் அவரது வீட்டில் பிணமாக கிடந்தார்.


அவரது தலையில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட காயம் இருந்தது. வீட்டிலிருந்த நகை, பணமும் காணாமல் போயிருந்தது. மகன் தஷ்வந்தும் தலைமறைவாகியிருந்தார்.

இதனால், தஷ்வந்தே சரளாவை கொலை செய்திருக்க அதிக வாய்ப்பிருப்பதாக போலீஸ் தரப்பு சந்தேகித்தது.

தஷ்வந்தை பிடிக்க போலீஸார் பல்வேறு கோணங்களில் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். தஷ்வந்தின் செல்போனையும் போலீஸார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.


அவரது நண்பர்களிடமும் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தஷ்வந்த் மும்பையில் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து மும்பை விரைந்த போலீஸார் தஷ்வந்தை கைது செய்தனர்.

தஷ்வந்த் கைது செய்யப்பட்டதை சென்னை போலீஸார் உறுதிப்படுத்தி உள்ளனர். விரைவில் தஷ்வந்தை சென்னை அழைத்து வர உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தாயை கொலை செய்து  தப்பியோடிய குற்றவாளி தஷ்வந்த் மும்பையில் கைது,tamil news ,tamilseithigal , indiaseithigal,indianews, tamilcinemanews,தமிழ்செய்திகள்,இந்தியசெய்திகள், தமிழ் சினிமாசெய்திகள் தாயை கொலை செய்து  தப்பியோடிய குற்றவாளி தஷ்வந்த் மும்பையில் கைது,tamil news ,tamilseithigal , indiaseithigal,indianews, tamilcinemanews,தமிழ்செய்திகள்,இந்தியசெய்திகள், தமிழ் சினிமாசெய்திகள் தாயை கொலை செய்து  தப்பியோடிய குற்றவாளி தஷ்வந்த் மும்பையில் கைது,tamil news ,tamilseithigal , indiaseithigal,indianews, tamilcinemanews,தமிழ்செய்திகள்,இந்தியசெய்திகள், தமிழ் சினிமாசெய்திகள்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 காதல் திருமணம் செய்த மகளை மொட்டையடித்து சித்ரவதை செய்த தந்தை கைது
மதுரை அருகே உள்ள நாகமலை புதுக்கோட்டை தட்டனூரைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் அபிநயா (வயது 19). அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார்.அப்போது ஆட்டோ டிரைவர் வெங்கடேஸ்வரன் (25) என்பவருடன் அபிநயாவுக்கு காதல் ஏற்பட்டது. இது பற்றி

மேலும்...

 எஸ்.எஸ்.எல்.சி ,பிளஸ் 2 பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு
பிளஸ்2, பிளஸ்1, மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.தேர்வு அட்டவணை விவரம்:தேர்வு அட்டவணைபிளஸ்2 பொது தேர்வுமார்ச் 1 : மொழிப்பாடம் முதல் தாள்02: மொழிப்பாடம் 2ம் தாள்05 ஆங்கிலம் முதல் தாள்06 மொழிப்பாடம் 2ம் தாள்09: வணிகவியல், ஹோம்

மேலும்...

 நாமக்கல் அருகே வடமாநில கொள்ளையர்கள் 5 பேர் கைது
கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் ரோடு, டைடல் பார்க் அருகே ஆக்சிஸ் வங்கி உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்துக்குள் கடந்த 10-ந்தேதி அதிகாலையில் கொள்ளையர்கள் நுழைந்து ஏ.டி.எம். எந்திரத்தை கியாஸ் வெல்டிங் மூலம் உடைத்து ரூ. 26 லட்சத்து 70 ஆயிரத்து

மேலும்...

 திருச்செந்தூர் கோயில் மண்டபம் இடிந்து பெண் பலி
திருச்செந்தூர் முருகன் கோயிலில் வள்ளி குகை அருகே பிரகார மண்டபத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது.இதில் மோர் வியாபாரியான ரவி என்பவரது மனைவி பேச்சியம்மாள் என்பவர் மரணமடைந்தார்.2 பேர் காயமடைந்தனர். தொடர்ந்து தீயணைப்பு துறையினர், வருவாய் துறையினர், போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in