திமுக என்னை கறிவேப்பிலையாக தூக்கிப்போட்டு விட்டது: டி.ராஜேந்தர் குற்றச்சாட்டு

திமுக என்னை கறிவேப்பிலையாக  தூக்கிப்போட்டு விட்டது: டி.ராஜேந்தர் குற்றச்சாட்டு
பல ஆண்டுகாலம் உழைத்த என்னை கறிவேப்பிலையாக பயன்படுத்திவிட்டு திமுக தூக்கிப்போட்டு விட்டது என்று நடிகரும் இலட்சிய திமுக நிறுவனரு மான டி.ராஜேந்தர் குற்றம்சாட்டியுள்ளார்.

டி.ராஜேந்தர் இலட்சிய திமுகவை புதிய எழுச்சியோடு தொடர்ந்து நடத்தும் விதமாக பல திட்டங்கள் வைத்திருப்பதாகவும், அதற்கான அறிவிப்பை நேற்று வெளியிடுவதாகவும் முன்பே தெரிவித்திருந்தார். இந்நிலையில் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் இன்றைய அரசியல் களத்தில் எம்ஜிஆர் இல்லை. அவரது கொள்கைகளை தாங்கிப்பிடித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் இல்லை. திமுக தலைவர் கருணாநிதி உடல்ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார். இன்றைக்கு அவரை சந்தித்து ஆசி பெற்று சிலர் கட்சி தொடங்குகிறார்கள். இது காலத்தின் கட்டாயம்.

மதிமுகவால் திமுக உடைந்தபோது அரும்பாடுபட்டு வளர்த்த என் தாயக மறுமலர்ச்சி கழகத்தை திமுகவோடு இணைத்தேன். அதன்பிறகு திமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக பல ஆண்டுகள் பணியாற்றினேன்.

உப்பு சப்பில்லாத காரணத்தைச் சொல்லி திமுகவில் இருந்து நீக்கியதால் 2004-ம் ஆண்டு லட்சிய திமுகவை தொடங்கினேன். அதன்பிறகு 2006-ம் ஆண்டு கருணாநிதி முதல்வர் ஆவதற்காக உழைத்தவன் நான்.

 என் பார்வையில் இன்றைக்கு திமுக, ஸ்டாலின் திமுக என்று ஆகிவிட்டது. நான்தான் கருணாநிதியின் தத்துப்பிள்ளை. ஆனால் இன்று நான் திமுகவால் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட கறிவேப்பிலை. பரவாயில்லை.

பெரியாருக்கும், அண்ணாவுக்கும், எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் பெற்றெடுத்த பிள்ளைகள் இல்லை.அவர்களின் ஆன்மாக்களின் நல்ல கொள்கைகளுக்கு, நான் ஒரு தத்துப்பிள்ளை.

அதனால்தான் நான் பின்பற்றும் தலைவர்கள் பட வரிசையில் ஜெயலலிதாவின் படத்தையும் தற்போது இணைத்துள்ளேன் என்றார்.
https://goo.gl/iU5dJZ


18 Dec 2018

வீடு கட்ட லஞ்சம் கொடுக்க வேண்டுமா?- அதிகாரியிடம் போனில் பேசிய கமல்

14 Dec 2018

நான் உழைத்து முதல்வரானேன்: நீங்கள் அப்பாவின் தயவால் உயர்ந்துள்ளீர்கள்: ஸ்டாலின்மீது எடப்பாடி பாய்ச்சல்

14 Dec 2018

புயலால் 8 மீட்டர் வரை அலை எழும்பும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

14 Dec 2018

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வாய்ப்பு என தகவல்

13 Dec 2018

பள்ளியில் 5 மாணவிகள் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி

13 Dec 2018

கழிவறை கேட்டு தந்தை மீது புகார் தந்த 7 வயது சிறுமி.. ஆம்பூர் தூய்மை இந்தியா தூதுவரானார்

13 Dec 2018

காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் : வட தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு

13 Dec 2018

தினகரனை தவிர பிரிந்து சென்றவர்கள் யார் வேண்டுமானாலும் திரும்பி வரலாம் - முதல்வர் பகிரங்க அழைப்பு

11 Dec 2018

குடும்ப வறுமையில் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை

11 Dec 2018

கூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு: கல்லூரி மாணவி பரிதாப மரணம்