திருச்செந்தூர் கோவிலில் அய்யாக்கண்ணுவை தாக்கிய பா.ஜனதா பெண் நிர்வாகி

திருச்செந்தூர் கோவிலில்  அய்யாக்கண்ணுவை தாக்கிய பா.ஜனதா பெண் நிர்வாகி
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். மரபணு மாற்றப்பட்ட விதைகளின் மூலம் விவசாயம் செய்வதை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சங்க நிர்வாகிகள், விவசாயிகள் அடங்கிய குழுவினர் கடந்த 1-ந்தேதி கன்னியாகுமரியில் இருந்து சென்னை கோட்டை நோக்கி விழிப்புணர்வு பிரசார பயணத்தை தொடங்கினர்.

8-வது நாளாக நேற்று காலையில் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் இருந்து விவசாயிகள் பிரசார பயணத்தை தொடங்கினர். பின்னர் மதியம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விவசாயிகள் சாமி தரிசனம் செய்தனர். அதன்பிறகு அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள், கோவில் வளாகத்தில் சண்முகவிலாச மண்டபம் முன்பிருந்த பக்தர்களிடம் கோரிக்கை விளக்க துண்டுபிரசுரங்களை வினியோகம் செய்தனர்.

அப்போது அங்கு வந்த திருச்செந்தூர் வீரராகவபுரம் தெருவைச் சேர்ந்த பா.ஜனதா மாவட்ட மகளிர் அணி பொதுச்செயலாளர் நெல்லையம்மாள் (வயது 43) பக்தர்களிடம், ‘துண்டுபிரசுரங்களை வாங்காதீர்கள், இது ஏமாற்று வேலை‘ என்று கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள், நெல்லையம்மாளை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து நெல்லையம்மாள், அய்யாக்கண்ணுவின் முகத்தில் கையால் தாக்கியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், நெல்லையம்மாளை தாக்க முயன்றனர்.

உடனே அருகில் இருந்த பக்தர்கள், கோவில் காவலாளிகள் விரைந்து சென்று, அவர்களை சமாதானப்படுத்தினர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது நெல்லையம்மாள் தனது செருப்பை தூக்கி காண்பித்தார். தொடர்ந்து அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் மீண்டும் கோவில் வளாகத்தில் துண்டுபிரசுரங்களை வினியோகம் செய்தனர். அப்போது மீண்டும் அங்கு வந்த நெல்லையம்மாள் மற்றும் பா.ஜனதா நகர செயலாளர் வக்கீல் சரவணன் ஆகியோர் கோவில் வளாகத்தில் துண்டுபிரசுரம் வினியோகம் செய்யக்கூடாது. கோவிலில் சாமி தரிசனம் செய்யுங்கள், அரசியல் மேடையாக்காதீர்கள் என்று கூறினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

பின்னர் கோவில் வளாகத்தில் அய்யாக்கண்ணு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 1-ந்தேதியில் இருந்து கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பிரசாரம் செய்து வருகிறோம். ஆனால், வேண்டும் என்றே பா.ஜனதாவினர் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுகின்றனர். பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா பெரியார் சிலையை உடைப்போம் என்று கூறுகிறார். இங்கும் ஒரு பா.ஜனதா பெண் பிரமுகர் வன்முறையை தூண்டும் வகையில், கோவிலில் துண்டுபிரசுரம் வினியோகம் செய்யக்கூடாது என்று கூறுகிறார். பா.ஜனதாவினரை விட எங்களுக்கு அதிகமாக தெய்வ பக்தி உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மதித்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். மரபணு மாற்றப்பட்ட விதைகளை இறக்குமதி செய்ய அனுமதிக்கக்கூடாது என்ற நல்ல எண்ணங்களை பிரதமருக்கு தருமாறு முருகபெருமானின் பாதத்தில் கோரிக்கை மனுவை வைத்து வணங்கி வழிபட்டோம். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, 32 மாவட்டங்களிலும் பிரசாரம் மேற்கொள்வோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லையெனில், பிரதமர் வீட்டின் முன்பு உண்ணாவிரதம் இருப்போம். இவ்வாறு அய்யாக்கண்ணு கூறினார்.

இதற்கிடையே, விவசாயிகள் தள்ளி விட்டு தாக்கியதில் காயம் அடைந்ததாக நெல்லையம்மாள் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நெல்லையம்மாள் அளித்த புகாரின்பேரில், திருச்செந்தூர் கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக காலையில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள், ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் முழங்காலிட்டு தவிழ்ந்தவாறு சென்று, சுவாமியின் பாதத்தில் கோரிக்கை மனுவை வைத்து வழிபட்டனர்.
https://goo.gl/ko46sN


18 Dec 2018

வீடு கட்ட லஞ்சம் கொடுக்க வேண்டுமா?- அதிகாரியிடம் போனில் பேசிய கமல்

14 Dec 2018

நான் உழைத்து முதல்வரானேன்: நீங்கள் அப்பாவின் தயவால் உயர்ந்துள்ளீர்கள்: ஸ்டாலின்மீது எடப்பாடி பாய்ச்சல்

14 Dec 2018

புயலால் 8 மீட்டர் வரை அலை எழும்பும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

14 Dec 2018

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வாய்ப்பு என தகவல்

13 Dec 2018

பள்ளியில் 5 மாணவிகள் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி

13 Dec 2018

கழிவறை கேட்டு தந்தை மீது புகார் தந்த 7 வயது சிறுமி.. ஆம்பூர் தூய்மை இந்தியா தூதுவரானார்

13 Dec 2018

காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் : வட தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு

13 Dec 2018

தினகரனை தவிர பிரிந்து சென்றவர்கள் யார் வேண்டுமானாலும் திரும்பி வரலாம் - முதல்வர் பகிரங்க அழைப்பு

11 Dec 2018

குடும்ப வறுமையில் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை

11 Dec 2018

கூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு: கல்லூரி மாணவி பரிதாப மரணம்