திருமலையில் மூன்று நாட்களில் 2.5 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

திருமலையில் மூன்று நாட்களில் 2.5 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்
திருப்பதியில் ஏழுமலை யானை தரிசிக்க கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது.

நேற்று தர்ம தரிசனம் செய்யும் பக்தர்கள் தரிசனத்துக்கு நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்து நின்றனர். 64 கம்பார்ட்மெண்டுகளும் நிரம்பி வழிந்த நிலையில் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.

தரிசனம் செய்ய 36 மணி நேரம் ஆனது. 56 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய முடிந்தது. இதேபோல் பாத யாத்திரையாக வந்த பக்தர்கள் 13 கம்பார்ட்மெண்டுகளில் நிரம்பி வழிந்தனர்.

கட்டுக் கடங்காமல் திரண்ட கூட்டத்தால் காலை 9.30 மணிக்கே பாதயாத்திரை வரிசை மூடப்பட்டது. மறுநாள் வரும்படி அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். இதனை கண்டித்து அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

தர்ம தரிசன வரிசையில் பல இடங்களில் பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தலைமுடி காணிக்கைக்கு பக்தர்கள் 4 மணி நேரம் காத்து நின்றனர்.

கடந்த 3 நாட்களில் மட்டும் 2.5 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து உள்ளனர். 3 நாள் உண்டியல் மூலம் மட்டும் ரூ.7.14 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

திருவிழா காலங்களில்தான் கூடுதல் தொகை கிடைக்கும். ஆனால் சாதாரண நாட்களில் அதிக அளவு உண்டியல் வருமானம் கிடைத்துள்ளது சாதனையாக கருதப்படுகிறது.

திருப்பதி கோவிலுக்கு வந்தவர்கள் ஸ்ரீகாளகஸ்தி கோவிலுக்கும் சென்றதால் அங்கும் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

நேற்று மட்டும் 65 ஆயிரம் பக்தர்கள் வாயு லிங்கேஸ்வரரை தரிசனம் செய்தனர். மேலும் இடைவிடாமல் ராகு, கேது பரிகார பூஜையும் நடந்தது. நேற்று ஒரே நாளில் மட்டும் கோவிலுக்கு ரூ.25 லட்சத்து 80 ஆயிரம் வருமானம் கிடைத்தது.
https://goo.gl/txK4qw






28 Oct 2014

இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் விழா குவியும் பக்தர்கள்

21 Sep 2014

மகாளய அமாவாசை -பாவ வினைகள் போக்கும் புண்ணிய வழிபாடு

21 Jul 2014

அற்புத பலன் தரும் ஆடி அமாவாசை

24 Sep 2013

மகிமை நிறைந்த மகாளய அமாவாசை

08 Jun 2013

திருமலையில் மூன்று நாட்களில் 2.5 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

23 Apr 2013

மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்

17 Apr 2013

ஆன்மீக செய்திகள்

11 Apr 2013

சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் நடை 10 மணி நேரம் அடைக்கப்படும்

07 Apr 2013

அகஸ்தீஸ்வரர் கோவிலில் லிங்கம் மீது சூரியஒளி விழும் அதிசயம்

25 Mar 2013

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு