tamilkurinji logo


 

திருவண்ணாமலை ‘மூக்குபொடி’ சித்தரிடம் ஆசி பெற்ற தினகரன்,news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்




செய்திகள் >>> தமிழகம்

திருவண்ணாமலை ‘மூக்குபொடி’ சித்தரிடம் ஆசி பெற்ற தினகரன்

First Published : Friday , 11th August 2017 10:21:33 AM
Last Updated : Friday , 11th August 2017 10:21:33 AM


திருவண்ணாமலை ‘மூக்குபொடி’ சித்தரிடம் ஆசி பெற்ற தினகரன்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்


திருவண்ணாமலையில் வாழும் ‘மூக்குபொடி’ சித்தரிடம் டிடிவி தினகரன் நேற்று ஆசி பெற்றார்.

இரட்டை இலை சின்னத்தை மீட்க தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறி அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டார். அவர், சிறையில் இருந்து விடுதலையான பிறகு, கட்சிப் பணியில் ஈடுபட போவதாக அறிவித்தார். இதையடுத்து, 2 அணியாக இருந்த அதிமுக, 3 அணிகளாக பிளவுபட்டது.

இந்நிலையில், திருவண்ணாமலையில் ‘மூக்குபொடி’ சித்தரை நேற்று சந்தித்து தினகரன் ஆசி பெற்றார்.

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் எதிரே உள்ள உணவகத்தின் முதல் தளத்தில் உள்ள வரவேற்புப் பிரிவு முன்பு தரையில் அமர்ந்து இருந்த ‘மூக்குபொடி’ சித்தரை, தினகரன் வணங்கினார். சுமார் 10 நிமிட தரிசனத்துக்குப் பிறகு, அண்ணாமலையை காரில் சுற்றி வந்து தரிசனம் செய்தார். பின்னர், தஞ்சைக்கு புறப்பட்டுச் சென்றார்


‘மூக்குபொடி’ சித்தரின் பக்தரும் உணவக உரிமையாளருமான ஆகாஷ் முத்துகிருஷ்ணன் கூறும்போது, ‘‘மூக்குபொடி’ சித்தரின் இயற்பெயர் மொட்டையக் கவுண்டர். ‘மூக்குபொடி’யை விரும்பி பயன்படுத்துவதால் ‘மூக்குபொடி’ சித்தர் என்று அழைக்கப்படுகிறார்.

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள ராஜபாளையம் என்ற கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர். அவருக்கு வயது 85-க்கு மேல் இருக்கும். ஒரு மகன் உள்ளார். மனைவி இறந்த பிறகு ஆன்மிகத்தை தேடிச் சென்றுள்ளார். வீரபத்திரசாமியை வழிபட்டு வந்துள்ளார்.

திருவண்ணாமலையில் சுமார் 40 ஆண்டுகளாக வாழ்கிறார். அவர் யாரிடமும் பற்று செலுத்துவது இல்லை. தன் மகன் மற்றும் பேரப் பிள்ளைகளிடமும் அப்படித்தான் இருப்பார். அதேபோல், அவரது ஆளுமைக்குள் யாரையும் அனுமதிப்பதும் கிடையாது.

ஒரு இடத்தில் 3 மாதங்களுக்கு மேல் இருக்கமாட்டார். சிதம்பரத்தில் அதிக காலம் தங்கியிருந்தார். பல நாட்கள் உணவு உட்கொள்ளாமல் இருப்பார். திடீ ரென சாப்பிடத் தொடங்குவார்.

ஒவ்வொரு நிகழ்வுகள் மற்றும் தனிமனிதப் பிரச்சினைகளை ‘மறைபொருள்’ மூலமாக சுட்டிக்காட்டுவார். ‘தானே’ புயல் வருவதற்கு முதல் நாள் மதியம் கடலூருக்குச் சென்று, கடலைப் பார்த்து, ‘அமைதியாக இரு, சத்தம் போடாதே’ என்று பேசினார். மறுநாள், தானே புயல் தாக்கியது.

பணம் மதிப்பு நீக்கம் செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு ரூ.500, ரூ.1000 தாள்களை கிழித்துப்போட்டார். கூடங்குளம் போராட்டம் தொடர்பான நிகழ்வையும் சுட்டிக்காட்டினார்.


அவரது அனுமதி இல்லாமல் அவரை யாரும் தரிசிக்க முடியாது. ‘மூக்குபொடி’ சித்தரை டிடிவி தினகரன் பலமுறை சந்தித்துள்ளார். ஆனால், ஒருமுறை கூட வெளியே தெரியவில்லை. இப்போது காட்சிப்படுத்துவதற்கான காரணம் புரியவில்லை. அவரை தரிசிக்க வரும் பக்தர்கள் (வெளிநாட்டினர் உட்பட) சிந்தனையில் குழப்பம் ஏதும் இல்லாமல் அமைதி ஏற்படுகிறது என்று கூறுவார்கள்’ என்றார்.

திருவண்ணாமலை ‘மூக்குபொடி’ சித்தரிடம் ஆசி பெற்ற தினகரன்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
திருவண்ணாமலை ‘மூக்குபொடி’ சித்தரிடம் ஆசி பெற்ற தினகரன்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
திருவண்ணாமலை ‘மூக்குபொடி’ சித்தரிடம் ஆசி பெற்ற தினகரன்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட்டதை எதிர்த்து சிபிஎஸ்இ மேல்முறையீடு
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மருத்துவ கல்விக்கான நீட் நுழைவு தேர்வை 24 ஆயிரம் மாணவர்கள் எழுதினார்கள். இதில் தமிழ் வினாத்தாளில் மொழிபெயர்ப்பு குளறுபடியால் தமிழில் தேர்வு எழுதியவர்களுக்கு மதிப்பெண்கள் குறைந்தது. இதையடுத்து சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் கம்யூனிஸ்டு எம்.பி. டி.கே.ரங்கராஜன்

மேலும்...

 அரசு ஒப்பந்ததாரர் செய்யாதுரை வீட்டில் இரண்டாவது நாளாக நீடிக்கும் வருமான வரி சோதனை
தமிழகத்தில் நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகளை ஒதுக்கியதில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தி.மு.க. மற்றும் தினகரன் அணியினர் புகார் கூறினர். ஆனால் அந்த விவகாரம் அப்போது அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது.இந்த நிலையில் அருப்புக்கோட்டை அருகே உள்ள

மேலும்...

 ஓபிஎஸ் மீதான சொத்து குவிப்பு வழக்கை சிபிஐ விசாரிக்க ஏன் உத்தரவிடக்கூடாது? - உயர்நீதிமன்றம் கேள்வி
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீது வழக்கு பதிவு செய்ய கோரி திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல். தி.மு.க. அமைப்பு செயலாளரான ஆர்.எஸ். பாரதி இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், ஓபிஎஸ்

மேலும்...

 சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் 12 வயது சிறுமியை மிரட்டி 7 மாதமாக பாலியல் தொந்தரவு; முதியவர்கள் 6 பேர் உட்பட 18 பேர் கைது
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் 12 வயது சிறுமியை மிரட்டி 7 மாதமாக பாலியல் தொந்தரவு செய்த முதியவர்கள் 6 பேர் உட்பட 18 பேரை போலீஸார் கைது செய்தனர்.சென்னை அயனாவரத்தில் பிரபலமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in