திருவனந்தபுரம் பகவதி அம்மன் கோவிலில் 40 லட்சம் பெண்கள் பொங்கலிட்டனர்

திருவனந்தபுரம் பகவதி அம்மன் கோவிலில் 40 லட்சம் பெண்கள் பொங்கலிட்டனர்
திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதியம்மன் கோயிலில் நடந்த பொங்கல் விழாவில் 40 லட்சம் பெண்கள் பொங்கலிட்டனர்.

திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதியம்மன் கோயில் கேரளாவில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாகும். இக்கோயிலில் வருடந்தோறும் மாசி மாதத்தில் 10 நாட்கள் பொங்கல் திருவிழா நடைபெறும்.திருவிழாவின் 9ம் நாளன்று நடக்கும் பொங்கலிடும் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பெண்கள் திரண்டு பொங்கலிடுவார்கள். இதனால் இக்கோயில் ‘பெண்களின் சபரிமலை‘ என்று அழைக்கப்படுகிறது.

இவ்வருட பொங்கல் விழா கடந்த 18ம் தேதி தொடங்கியது. 9ம் நாளான நேற்று பொங்கலிடும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக, இரு தினங்களுக்கு முன்பே கேரளாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெண்கள் வந்து குவிய தொடங்கினர். நேற்று காலை 10.45 மணியளவில் கோயில் தந்திரி தினேசன் நம்பூதிரிபாடு கோயில் கருவறையிலிருந்து தீபத்தை எடுத்து மேல்சாந்தி ஹரிஸ்குமாரிடம் கொடுத்தார். பின்னர் மேல்சாந்தி தலைமையில் பூசாரிகள் கோயில் முன் வைக்கப்பட்டிருந்த அடுப்பில் தீ மூட்டினர்.

இந்த நேரத்தில் கோயில் மணி ஒலிக்கப்பட்டதும், கோயிலை சுற்றிலும் 10 கி.மீ சுற்றளவில் குவிந்திருந்த 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே நேரத்தில் குலவை சத்தத்துடன் பொங்கலிட தொடங்கினர். அப்போது திருவனந்தபுரம் நகர் பகுதி முழுவதுமே புகை மண்டலமாக காட்சி அளித்தது.

இதைத் தொடர்ந்து பிற்பகல் 2.30 மணிக்கு கோவிலில் உச்சபூஜையும், அம்மனுக்கு பொங்கல் நிவேத்யம் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சியும், தீபாராதனையும் நடந்தது. பின்னர் சுமார் 230–க்கும் மேற்பட்ட பூசாரிகள், பெண்கள் பொங்கல் வைத்த பல்வேறு இடங்களுக்குச் சென்று, பொங்கல் பானைகளுக்கு புனித நீர் தெளித்தனர். விமானப்படை ஹெலிகாப்டர் மூலம், வானத்தில் பறந்தபடி, பொங்கல் பானைகள் மீது பல வண்ண மலர்கள் தூவப்பட்டன.

பொங்கல் வழிபாடு நிகழ்ச்சியில் சினிமா நடிகைகள் சிப்பி, சுனுலட்சுமி, சரண்யா, சீமா.ஜி.நாயர், சுதாநாயர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். கோவில் வளாகம் மற்றும் சுமார் 50–க்கும் மேற்பட்ட இடங்களில் ரகசிய கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு, பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டிருந்தது.
https://goo.gl/WcXAbi






28 Oct 2014

இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் விழா குவியும் பக்தர்கள்

21 Sep 2014

மகாளய அமாவாசை -பாவ வினைகள் போக்கும் புண்ணிய வழிபாடு

21 Jul 2014

அற்புத பலன் தரும் ஆடி அமாவாசை

24 Sep 2013

மகிமை நிறைந்த மகாளய அமாவாசை

08 Jun 2013

திருமலையில் மூன்று நாட்களில் 2.5 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

23 Apr 2013

மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்

17 Apr 2013

ஆன்மீக செய்திகள்

11 Apr 2013

சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் நடை 10 மணி நேரம் அடைக்கப்படும்

07 Apr 2013

அகஸ்தீஸ்வரர் கோவிலில் லிங்கம் மீது சூரியஒளி விழும் அதிசயம்

25 Mar 2013

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு