தி.நகர் திருப்பதி தேவஸ்தானத்தில் நாளை அதிகாலை 2 மணி முதல் தரிசனம்

தி.நகர் திருப்பதி தேவஸ்தானத்தில் நாளை அதிகாலை 2 மணி முதல் தரிசனம்
தி.நகர் திருப்பதி தேவஸ்தானத்தில் புத்தாண்டு தினத்தில் அதிகாலை 2 மணி முதல் இரவு 10.30 மணி வரை சுவாமி தரிசனம் செய்யலாம் என்றும் மாற்றுத்திறனாளிகள் உடனடியாக தரிசனம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தி.நகர் திருமலை திருப்பதி தேவஸ்தானம் உள்ளூர் ஆலோசனை குழு தலைவர் கே.ஆனந்த குமார் ரெட்டி, துணை தலைவர் சுதந்திரன் ஆகியோர் நேற்று அளித்த பேட்டி:

புத்தாண்டு தினத்தில், தி.நகர் திருப்பதி தேவஸ்தானத்தில் சுவாமி தரிசனம் செய்ய பொதுமக்கள் அதிக அளவில் வருவார்கள். எனவே அதிகாலை 2 மணி முதல் இரவு 10.30 மணி வரை சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொது மக்கள் அரை மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்வதற்கான சிறப்பு வசதிகள் செய்துள்ளோம்.
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைக்குழந்தைகளுடன் வருபவர்கள் காத்திருக்காமல் நேராக சுவாமி தரிசனம் செய்ய வசதி செய்துள்ளோம். திருப்பதியில் உள்ள அதே நடைமுறை கடைப்பிடிக்கப்படும்.

பக்தர்களுக்கு தீர்த்தம், சிறிய லட்டு மற்றும் பிரசாதம் வழங்கப்படும். மேலும், 25 விலையில் லட்டு விற்பனை செய்யப்படும். மேலும் பாக்கெட் காலண்டர், திருப்பதி புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும். போக்குவரத்து நெரிசலை சரிசெய்யவும், விரைவாக சாமி தரிசனம் செய்யவும் போலீசாரும் தன்னார்வலர்களும் உதவுவார்கள். கடந்த புத்தாண்டில் சுமார் 90 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்தனர். இந்த ஆண்டு 1 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். உள்ளூர் ஆலோசனை குழு உறுப்பினர்கள் பிரபாகர் ரெட்டி, மோகன்ராவ், கிருஷ்ணாராவ், கிருஷ்ணா, ராகவன், ஸ்ரீஹரி, சத்தியநாராயணா, கார்த்திக்கேயன் உடன் இருந்தனர்.
https://goo.gl/cFFdqo


28 Oct 2014

இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் விழா குவியும் பக்தர்கள்

21 Sep 2014

மகாளய அமாவாசை -பாவ வினைகள் போக்கும் புண்ணிய வழிபாடு

21 Jul 2014

அற்புத பலன் தரும் ஆடி அமாவாசை

24 Sep 2013

மகிமை நிறைந்த மகாளய அமாவாசை

08 Jun 2013

திருமலையில் மூன்று நாட்களில் 2.5 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

23 Apr 2013

மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்

17 Apr 2013

ஆன்மீக செய்திகள்

11 Apr 2013

சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் நடை 10 மணி நேரம் அடைக்கப்படும்

07 Apr 2013

அகஸ்தீஸ்வரர் கோவிலில் லிங்கம் மீது சூரியஒளி விழும் அதிசயம்

25 Mar 2013

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு