தீபாவளி --- சிந்தனைக்குச் சில வினாக்கள்!!

தீபாவளி --- சிந்தனைக்குச் சில வினாக்கள்!!
இரண்யாட்சதன் பூமியை பாயாகச் சுருட்டினான் என்றால், பக்தத் தமிழா! அந்தப் பூமி தமிழ்நாடு மட்டுமா? அல்லது ஆந்திரா, கேரளா, கருநாடகம் இணைந்த திராவிட நாடு மட்டுமா? அல்லது அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இணைந்த பாரத புண்ணிய பூமியாம் இந்திய நாடு மட்டுமா? அல்லது பல்வேறு கண்டங் களும், அவற்றில் அடங்கிய நாடுகளும் இணைந்த ஒருமித்த மொத்த உலகமா?


பூமி என்பது அனைத்துலகும் ஒருமித்தது என்றால், ரஷ்யாவில், ஜப்பானில், இங்கிலாந்தில், அமெரிக் காவில் இன்னபிற நாடுகளில் ஏன் இக்கருத்தும், கொள்கையும், இதற்கு ஆதாரமான தீபாவளியும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை? நம்பப்பட வில்லை? கொண்டாடப்படவில்லை?

ரஷ்யா, சீனா, சப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் நீங்கலாக, அனைத் துப் பிற நாடுகளும் நீங்கலாக தமிழ் நாட்டை-திராவிட நாட்டை- இந்தி யாவை மட்டும் பாயாகச் சுருட்டி னானோ?

உலகின் அனைத்துக் கண்டங்களையும் தன்னுள் அடக்கிய உலகப் பூமியை ஒட்டு மொத்தமாக இரண்யாட்சதன் பாயாகச் சுருட்டினான் என்றால், இக்கதைக்கு ஆதாரமான விழா மட்டும் இந்தியாவுக்கும், இந்து மதத்திற்கும் மட்டும் சொந்தம் ஆவானேன்?

எங்கும் ஞாயிறு

இன்றும் கும்பகோணத்தில் இருக் கிற எனக்கு ஞாயிற்றுக்கிழமை என் றால், அமெரிக்காவில் இருக்கின்ற மருத்துவர் சோம இளங்கோவன் அவர் களுக்கும், இலண்டனில் இருக்கின்ற தமிழ்மணி அரங்க முருகையன் அவர் களுக்கும், குவைத்தில் இருக்கின்ற ச. செல்லப் பெருமாள் அவர்களுக்கும், மலேசியாவில் இருக்கின்ற நாராண திருவிடச் செல்வன் அவர்களுக்கும் ஞாயிற்றுக் கிழமைதானே!

நாம் ஞாயிறு என்று தமிழில் சொல்வதை அவர்கள் Sunday என்று ஆங்கிலத்தில் சொல் கிறார்கள் வேறுபாடு இதுதானே ஒழிய பொருள் ஒன்றுதானே! இதில் ஒன்றும் எந்த மாற்றமும், வேறுபாடும் இல்லையே!

அனைத்து நாடுகளிலும் நேரம் மட்டுமே வேறுபடும் என்பது பூகோள ரீதியான, அறிவியல் பூர்வமான தவிர்க்க முடியாத உண்மை என்பது யாராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட செய்தி ஆனால், தீபா வளிப் பண்டிகையும், அது தொடர்பான கருத்துகளும் உலகம் தழுவிய அளவில் அனுசரிக்கப்படவில்லையே! இதிலி ருந்து தீபாவளி பற்றிய கதை பொய்-புரட்டு-பித்தலாட்டம்-கற்பனை என்பது புலப்படவில்லையா?


கேவலம் ஞாயிற்றுக் கிழமைக்கு இருக்கிற ஒற்றுமையும், ஓர்மையும், மதிப் பும், மரியாதையும், சீர்மையும், சிறப்பும் பகவான் விஷ்ணுவுக்கு இல்லாமல் போய் விட்டதே!

ஏசு கிறிஸ்துவை முன்னிலைப் படுத்தியும், முதன்மைப் படுத்தியும், மய்யப்படுத்தியும், ஆதாரப்படுத்தியும் 2005-ஆம் ஆண்டு இன்று உலக முழுவதும் உலா வருவது போல, நமது காக்கும் கடவுள், உலக இரட்சகர், படிய ளக்கும் பரந்தாமன், மகா விஷ்ணுவை முன்னிலைப்படுத் தியும் ஆதாரப்படுத் தியும் ஏற்பட்ட தீபாவளி மட்டும் உலக உலா வராமைக்கு என்ன காரணம்? கதையும், கதைக்கு ஆதாரமான கருப்பொருளும் உண்மை அல்ல என்பது தானே யதார்த்தம்?

சரித்திரமா - அதிசயமா?

தீபாவளி என்பதும், அது பற்றிய காரணக் குறிப்புகளும் உலக வரலாற் றில் இடம் பெறுகின்ற-பெற்ற-பெற வேண்டிய சரித்திர வரலாற்றுச் சான்று செய்திகளா அல்லது ஒரு குறிப்பிட்ட ஒரு தனி மதத்திற்கும், கடவுளுக்கும் சம்பந்தப்பட்ட புராணக் கற்பனை அதிசய அற்புதச் செய்தியா?
மகாவிஷ்ணுவின் தோன்றலாகிய (தமிழில்) கண்ணனோ அல்லது (வடமொழியில்) கிருஷ்ணனோ சரித்திர வரலாற்று நாயகர்களா? அல்லது அவர்கள் மாயாஜால வித்தைக்காரர் களான வெறும் வேடிக்கை அற்புத அவதாரப் புருஷர்களா?

வரலாற்று சரித்திர நாயகர்கள் என்றால் அது உண்மைச் செய்தி அவதாரப் புருஷர்கள் என்றால் அது கற்பனை கலந்த பொய்ச் செய்தி என்பதுதானே யதார்த்தம்? அக்பரும், பாபரும், அசோகனும், நெப்போலியனும், அலெக்சாண்டரும், ஏசுநாதரும், நபிகள் நாயகமும் சரித்திரப் புகழ் பெற்ற வர லாற்று நாயகர்கள் என்றிருக்க, கண் ணணும், கிருஷ்ணனும் கற்பனையில் வரையறுக்கப்பட்ட கட்டுக்கதை நாயகர் கள்தாமே?

பூமி வேறு - கடல் வேறா?

பூமியைப் பாயாகச் சுருட்டிய தீபாவளிப் பற்றிய அறிவிப்புகள் உலக வர லாற்றில் பதிந்த உண்மைச் செய்திகள் எனில், ஏன் இவ்விழாவும், இவ்விழா பற்றிய கருத்துகளும் அனைத்து நாட்டி னராலும், அனைத்து மொழியினராலும், அனைத்து மதத்தினராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை? கொண்டாடப் படவில்லை?

இரண்யாட்சதன் பாயாகச் சுருட்டிய பூமியுடன் கடலுக்குள் புகுந்தான் என்று சொல்லுகிற ப(க்)த தமிழா! அந்தக் கடல் பூமியில் அல்லாது வேறு எங்கு இருந் தது? வேறு எங்கே இருக்க முடியும்?

கடல், ஆறு, ஏரி, குளம், குட்டை, காடு, மேடு, பள்ளம், குன்று, மலை, சமவெளி ஆகிய அனைத்தும் ஒரு சேர அமைந்த முழுப் பகுதியே உலகம்-பூமிஎன்று கொள்ளப்பட்டிருக்க-சொல் லப்பட்டிருக்க பாயாகச் சுருட்டிய பூமி யோடு கடலில் புகுந்து ஒளிந்தான் இரண் யாட்சதன் என்றால், எந்தக் கடலில் எப்படிப் புகுந்தான்? எப்படிப் புக முடியும்?

பூமியை மீறிய கடல் ஒன்று ஆகாய அந்தரங்கத்தில் தொங்குகிறதோ! கடலையும் தன்னுள் உள்ளடக்கியது தானே பூமிஎன்பது?

கிறித்தவத்திலும் மடமை

அகிலம் முழுவதும் வியாபித்துப் பரவியுள்ள மிகப் பெரிய மதமான கிறித் துவின் மத நூலான, மறை நூலான, வேத நூலான விவிலியத்தில்-பைபிளில் உலகம் தட்டை என்று கருத்து உரைக்கப் பட்ட நேரத்தில் கிறித்தவ மதத்தில் தோன்றிய அறிவியல் அறிஞர் கலிலியோ என்பவர் உலகம் தட்டை என்பதை மறுத்து உலகம் உருண்டை என்று சொன்னார் என்பதும், தன் கருத்தை மிகுந்த எதிர்ப்புகளுக்கிடையே வரலாற் றில் பதித்து நிறுவினார் என்பதும் தானே உண்மை!

உலகம் உருண்டை என்னும் அறிவுப் பூர்வமான-ஆக்க ரீதியான கலிலி யோவின் ஆராய்ச்சி உண்மைக் கருத்தை ஏற்றுக் கொண்டால் ஏசுநாதரும், கிறித்தவ மதமும், பைபிள் என்னும் விவிலியமும் அடிபட்டு ஆட்டங் கண்டு செத்தொழிந்து மறையுமே என்று எண்ணிய கிறித்தவ மத வெறியர்கள் தங்கள் மதக் கருத்துக் கோட்பாட்டைக் காக்கும் பொருட்டு அறிவியல் ஆய்வ றிஞன் கலிலியோவை அடித்தே கொன் றார்கள் என்பதை எவரே மறுக்க இயலும்?

உலகமதம் என்ற நிலையைப் பெற்ற கிறித்தவ மதத்தின் யோக்கியதையே சந்தி சிரிக்க-ஊர் மதமான இந்து மதத் தின் யோக்கியதை எவ்வாறு இருக்கும்?

குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் இந்து மதம் ஆனாலும் அல்லது உலகம் முழுவதும் நீக்கமற நிறைந்து ஆதிக்கம் செலுத்தும் கிறித்தவ மதம் ஆனாலும், இசுலாமிய மதம் ஆனாலும் மதம் என்று வந்தால் அவை அனைத்தும் மடமையைப் பரப்பும் மூடச் சாதனங்களோ என்பது புலனாகிறது அல்லவா?

தீபாவளி !----- சிந்தனைக்குச் சில வினாக்கள்! ! -2

எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி? எல்லாமும் ஒன்றுதானே! பாம்புக்கு நச்சுத் தன்மை உண்டு என்கிறபோது, அதில் குட்டிப் பாம்பென்ன? குஞ்சுப் பாம்பென்ன? எல்லாமும் ஒன்றுதானே!

தீபாவளிப் பண்டிகை தமிழர்க்கு உரியது அன்று தீபாவளிப் பண்டிகை புராண மதத்தைச் சார்ந்தது என்றும், அசுரர் கொலைக்காகத் தமிழர் மகிழ்ச்சி அடைதல் ஏற்றதன்று என்றும் தமிழ்ப் பெரும்புலவர் பேராசிரியர் சைவப் பெரியார் கா சுப்பிரமணி (பிள்ளை)யன், தாமெழுதிய தமிழர் சமயம் என்ற நூலில் குறிப்பிட்டிருப்பதைப் பக்தத் தமிழா நீ அறிவாயா?

தீபாவளி என்பது வடநாட்டுக் குஜ ராத்தி மார்வாடிகளுக்குப் புத்தாண்டு புதுக்கணக்கு விழாவாகும் என்றும், தீபாவளிக்கும் தமிழர்க்கும், தீபாவளிக் கும் தமிழ் இலக்கியங்களுக்கும் யாதொரு தொடர்பும் கிடையாது என்றும் பேராசிரியர் சைவத் தமிழ் அறிஞர் அ.கி பரந்தாமனார், தாமெழுதிய மதுரை நாயக்கர் வரலாறு என்னும் நூலில் எழுதி இருப்பதைப் பக்தத் தமிழா! நீ அறிவாயா? அதற்கு நீ அளிக்கும் விளக்கம்தான் யாது?

தீபாவளி சமண சமயப் பண் டிகை என்றும், பாவாபுரி நகரிலே அறிவுரை வழங்கிக் கொண்டிருந்த வர்த்தமான மகாவீரர் இறந்த விடியற்காலை தினமே தீபாவளிக்கு ஆதாரம் என்றும், தீபாவளி பற்றிய வரலாற்றுக்கும், நரகாசுரன் கதைக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்றும், தீபாவளி என்பதன் பொருள் (தீபம் விளக்கு ஆவளி வரிசை) விளக்கு வரிசை என்றும் முதுபெரும் வரலாற்று ஆய்வறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி, தாமெழுதிய சமணமும், தமிழும் என்ற நூலில் வெளிப்படுத்தி இருப்பதைப் பக்தத் தமிழா! நீ படித்து அறிந்தது உண்டா?

மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் ஒவ்வொரு மதத்தோடும் தமிழை இணைத்தும், இயைந்தும் ஆய்வு செய்து பல புத்தகங்கள் வெளியிட்ட வரலாற்றுப் புகழ் மிக்க சரித்திரப் பேரறிஞர் என்பது குறிப்பிடத் தக்கது கிறித்தவமும் தமிழும், பவுத்தமும் தமிழும், இசுலாமும் தமிழும், சமணமும் தமிழும் என்பன இவர் எழுதிய அரிய ஆராய்ச்சி நூல்கள் ஆகும்.

ஆரியப் பார்ப்பனர் கட்டுவித்தப் பொய்க் கற்பனைக் கதையே தீபாவளி என்றும், தீபாவளிக்கும், கண்ணன், நரகாசுரனைக் கொன்ற நிகழ்ச்சிக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்றும் சைவத் தமிழ்க்கடல் மறைமலை அடி களார், தாம் எழுதிய தமிழர் மதம் என்ற நூலில் பகர்ந்திருப்பதைப் பக்தத் தமிழா நீ படித்ததுண்டா? பார்த்ததுண்டா?

தந்தை பெரியாரின் தன்மானப் பகுத்தறிவியக்கத்திற்குச் சிறிதும் தொடர்பில்லாத நூற்பெரும் நற்றமிழ் அறிஞர்கள் தீபாவளியை மறுத்துள்ள னரே ஒருவருக்கொருவர் மாறுபட்ட, வேறுபட்ட, முரண்பட்ட கருத்துகளை யும், கதைகளையும் சொல்லுகின்றனரே! ஏ தமிழா! குதர்க்கத்திற்கும், குழப்பத்திற் கும் வழிகோலுகின்ற தீபாவளிப் பண்டிகை உனக்கு ஒரு கேடா?

மலம் தின்னும் பன்றி

பூமியும், பன்றியும் புணர்ந்து கலவி செய்ய முடியுமா? பூமிக்கும், பன்றிக்கும் புணர்ச்சியின் விளை வால் குழந்தை பிறக்குமா? அப்படிப் பிறந்த குழந்தை பூமியின் சாயல் உடையதா? அன்றி, பன்றியின் சாயல் உடையதா?

உலகத்தில் இருப்பது ஒரு பூமி தானே! அப்படி இருக்க இந்த வரலாற் றுக் கதை மற்ற நாட்டவர்களால் ஏற்றுக் கொண்டு அனுசரிக்கப்படவில்லையே! எப்படி எனில் தமிழ்ப் பூமிஎன்று தனியாக ஒன்று இருந்ததா? பூமிஒன்றுதான் நாடுகளே பலப்பலஅப்படி இருக்க இரண்யாட்சதன் சுருட்டியது ஒருமித்த உலக பூமியையா? அல்லது உலக பூமியில் அங்கம் வகிக்கும் தனித்த ஒரு நாட்டையா?


அது எப்படி உலக பூமியில் அங்கம் வகிக்கும் தனித்த ஒரு நாட்டை மட்டும் தனியாகப் பிரித்து சுருட்ட முடியும்?

மகாவிஷ்ணு பன்றி அவதாரம் எடுத் தார் என்றால், ஆஞ்சநேய அனுமார் குரங்குக் குட்டிச் சாமிக்குக் கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்து கும்பிட்டு மகிழ்ந்து கும்மாளம் அடிக்கும் பக்தர் கூட்டம், பன்றிக்கும் கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்து கும்பிட்டு மகிழத்தானே வேண்டும்.

பக்தர் குழாமே! உங்கள் மன்னிப்பை வேண்டி இவ்வினாவைத் தொடுகின்றேன் மகாவிஷ்ணு எடுத்த அவதார மாகிய பன்றி மலம் தின்னுகிறது என்றால் மகாவிஷ்ணுவை வணங்கும் பக்தர்களும், தீபாவளி கொண்டாடி மகிழும் தமிழர்களும் மலம் தின்னுவதில் தவறில்லை அல்லவா? தின்னுவார்களா? தின்னத் தயாரா?

சைவப் பெரியார் சிங்காரவேலு முதலியார் தொகுத்து எழுதி வெளியிட்ட அபிதான சிந்தாமணியில் பக்கம் 93 இல் நராகாசுரன் வராக (பன்றி) உருக் கொண்ட மகாவிஷ்ணுவிற்கும், பூதேவிக்கும் பிறந்த அசுரன் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறாரே!

ராட்சசனா?

கடவுள் பெறுவது ராட்சசனா? மகாவிஷ்ணுவுக்கும், பூமாதேவிக்கும் பிறந்த குழந்தை எப்படி அரக்கனாக-அசுரனாக-ராட்சசனாக இருக்கமுடியும்? மகாவிஷ்ணுவோ மக்களைக் காக்கும்படி அளக்கும் பரந் தாமக் கடவுள், பூமாதேவியாகிய நில மகளோ துச்சனர்களையும் பொறுத்துக் கொண்டு தாங்குகிற பொறுமைக் குணமும், தாய்மைக் குணமும் கொண்ட பேரறப் பெருந்தெய்வம் இவர்களுக்குப் பிறக்கும் குழந்தை எங்ஙனம் கொடூரம் மிக்கதாக இருக்கமுடியும்?

எதற்கெடுத்தாலும் திருக்குறளை ஆதாரப்படுத்த முந்துகிறவாழ்வியல் நூல் என்று வள்ளுவத்தைக் காட்டி மகிழ்கிற மூத்த குடியாம் தமிழினமே! தீபாவளி பற்றிய கருத்துக்கு வள்ளுவத் திருக்குறளாம் உலகப் பொதுத் தமிழ் மறையில் ஆதாரம் ஏதும் உள்ளதோ?

குடந்தய் வய்.மு. கும்பலிங்கன் --“விடுதலை”
https://goo.gl/Q16xQM


21 Aug 2014

பணிவோம், உயர்வோம்!

19 Jun 2014

மனஅழுத்தத்தை விரட்டி எப்போதும் சந்தோஷமாக இருக்க சில டிப்ஸ்

23 Mar 2014

திருமணத்திற்கு பின் பெண்களின் உடல் குண்டாவது ஏன்

15 Mar 2014

முதுமை பற்றிய பொன் மொழிகள்

09 Mar 2014

சுவாமி விவேகானந்தர் பொன் மொழிகள்

09 Mar 2014

பொன் மொழிகள்

23 Jan 2014

விரதம் என்றால் என்ன?விரதம் இருப்பதற்கான காரணம் என்ன?

15 Dec 2013

முதுமையின் பொன் மொழிகள்

19 Nov 2013

யோகாசனம்( yogasana )

29 Oct 2013

தீபாவளி --- சிந்தனைக்குச் சில வினாக்கள்!!