tamilkurinji logo


 

தீவிரவாதிகளுக்கு பாலியல் அடிமைகளாகும் பெண்களின் நிலை குறித்து பெண் எம்.பி கண்ணீர்,Isis 'fed baby to its mother and raped a 10-year-old to death', Iraqi MP claims

Isis,'fed,baby,to,its,mother,and,raped,a,10-year-old,to,death',,Iraqi,MP,claims




செய்திகள் >>> உலகம்

தீவிரவாதிகளுக்கு பாலியல் அடிமைகளாகும் பெண்களின் நிலை குறித்து பெண் எம்.பி கண்ணீர்

First Published : Wednesday , 28th June 2017 06:49:05 PM
Last Updated : Wednesday , 28th June 2017 06:49:05 PM


தீவிரவாதிகளுக்கு பாலியல் அடிமைகளாகும் பெண்களின் நிலை குறித்து பெண் எம்.பி கண்ணீர்,Isis 'fed baby to its mother and raped a 10-year-old to death', Iraqi MP claims

சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு பாலியல் அடிமைகளாக துன்புறத்தப்படும் யாசிதி பெண்களின் நிலை குறித்து இராக்கின் பெண் எம்.பி ஒருவர் கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார்.


எகிப்தில் உள்ள தனியார் செய்தி ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ஈராக்கின் பெண் எம்.பி வியான் தேகில் ஐ.எஸ் தீவிரவாதிகள் யாஷ்டி பெண்கள் மீது நடத்தும் கொடூர தாக்குதல் குறித்து வெளியிட்டு கண்ணீர் விட்டுள்ளார்.

ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் சிக்கிய யாஷ்டி இளம்பெண் ஒருவரை 3 நாட்கள் உணவு மற்றும் தண்ணீர் எதுவும் அளிக்காமல் சிறையில் வைத்திருந்துள்ளனர்.

பின்னர் அவருக்கு அரிசி உணவுடன் இறைச்சியும் வழங்கியுள்ளனர். மிகுந்த பசியுடன் இருந்த அந்த யாசிதி இளம்பெண் அந்த உணவு மொத்தமும் தின்று தீர்த்துள்ளார்.

இதனையடுத்து அந்த யாசிதி பெண்ணிடம் ஐ.எஸ் தீவிரவாதிகள் கூறியது கொடூரத்தின் உச்சம் என்று வியான் தேகில்தெரிவித்துள்ளார்.

குறித்த யாஷ்டி பெண்ணுடன் கடத்தப்பட்ட அவரது ஒருவயது மகனை கொன்று சமைத்துள்ளதாகவும், அந்த மாமிச உணவையே யாஷ்டி பெண்ணுக்கு வழங்கியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி, 10 வயதேயான யாசிதி சிறுமி ஒருவரை கடத்திய ஐ.எஸ் தீவிரவாதிகள், அவரது சகோதரி மற்றும் தந்தையின் முன்னிலையில் கூட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கி சித்திரவைதை செய்து கொன்றுள்ளனர்.

இதுவரை பல நூறு யாஷ்டி பெண்கள் சிறுமிகள் என கடத்திச் சென்று தங்களது பாலியல் அடிமைகளாக வைத்துக் கொண்டுள்ளனர் ஐ.எஸ் தீவிரவாதிகள்.

மட்டுமின்றி இந்த ஆண்டு துவக்கத்தில் யாஷ்டி இளம்பெண் ஒருவரை கடத்திச் சென்ற ஐ.எஸ், 40 பேர் கொண்ட கும்பலால் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு பின்னர் கொலை செய்துள்ளனர்.

ஐ.எஸ் தீவிரவாதிகளை பொறுத்தமட்டில் யாஷ்டிகளை இஸ்லாமியர்களாகவோ அரேபியர்களாகவோ ஏற்றுக் கொள்வதில்லை. அவர்களை சாத்தான் வழிபாட்டாளர்கள் என்றே அழைக்கப்படுகின்றனர்.

இதனாலேயே யாஷ்டி பெண்கள் மீது ஐ.எஸ் கொடூர தாக்குதல்களை ஏவுகின்றது என சமூக ஆர்வலர்களும் அரசியல் நோக்கர்களும் தெரிவிக்கின்றனர்.

தீவிரவாதிகளுக்கு பாலியல் அடிமைகளாகும் பெண்களின் நிலை குறித்து பெண் எம்.பி கண்ணீர்,Isis 'fed baby to its mother and raped a 10-year-old to death', Iraqi MP claims தீவிரவாதிகளுக்கு பாலியல் அடிமைகளாகும் பெண்களின் நிலை குறித்து பெண் எம்.பி கண்ணீர்,Isis 'fed baby to its mother and raped a 10-year-old to death', Iraqi MP claims தீவிரவாதிகளுக்கு பாலியல் அடிமைகளாகும் பெண்களின் நிலை குறித்து பெண் எம்.பி கண்ணீர்,Isis 'fed baby to its mother and raped a 10-year-old to death', Iraqi MP claims
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in