tamilkurinji logo
 

தூத்துக்குடி சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோதிகளை ரஜினி அடையாளம் காட்ட வேண்டும் : ஸ்டாலின்,MK Stalin: Rajinikanth'tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

MK,Stalin:,Rajinikanth'tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> தமிழகம்

தூத்துக்குடி சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோதிகளை ரஜினி அடையாளம் காட்ட வேண்டும் : ஸ்டாலின்

First Published : Thursday , 31st May 2018 11:37:13 AM
Last Updated : Thursday , 31st May 2018 11:37:13 AM


தூத்துக்குடி சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோதிகளை ரஜினி அடையாளம் காட்ட வேண்டும் : ஸ்டாலின்,MK Stalin: Rajinikanth'tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

தூத்துக்குடி கலவரத்திற்கு சமூக விரோதிகளே காரணம் என கூறும் நடிகர் ரஜினி, அவர்கள் யார் என்பதை நாட்டிற்கு அடையாளம் காட்ட வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்  சமூக விரோதிகளை, ரஜினி அடையாளம் காட்டுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றார்.

போராட்டம் இல்லாத வாழ்க்கையே இல்லை. தூத்துக்குடி கலவரம் தொடர்பான ரஜினியின்  குரல், பாரதிய ஜனதாவின் குரலா அல்லது அதிமுக-வின் குரலா என கேள்வி எழுப்பியுள்ளார். 


மேலும் பேசிய அவர் தமிழகத்திற்கு மறுக்கப்பட்ட ஜல்லிக்கட்டு உரிமையானது மாபெரும் போராட்டம் நடத்தி தான் பெறப்பட்டது என்பது ரஜினிக்கு நன்றாகவே தெரியும் என்றும் கூறினார்.

இதே போல ரஜினியின் கருத்துக்கு பதில் தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடக்கூடாது என்பதற்காகவே போராடி வருகிறோம் என்றார்.

தூத்துக்குடி போராட்டத்தில் ஊடுருவிய சமூக விரோதிகள் யார் என்பதை, நடிகர் ரஜினிகாந்த் தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக நேற்று தூத்துக்குடி சென்ற ரஜினிகாந்த், துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்து விட்டதாக ஆவேசமாக பேட்டியளித்தார்.

மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும், ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களின் குடியிருப்புகளை எரித்தது பொதுமக்கள் இல்லை, சமூக விரோதிகளே என்று என  ரஜினிகாந்த் குற்றம்சாட்டினார். அவரது இந்த கருத்துக்கு பொதுமக்கள் கடும் கண்டனத்தை சமூகவலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ரஜினியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோதிகளை ரஜினி அடையாளம் காட்ட வேண்டும் : ஸ்டாலின்,MK Stalin: Rajinikanth'tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema தூத்துக்குடி சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோதிகளை ரஜினி அடையாளம் காட்ட வேண்டும் : ஸ்டாலின்,MK Stalin: Rajinikanth'tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema தூத்துக்குடி சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோதிகளை ரஜினி அடையாளம் காட்ட வேண்டும் : ஸ்டாலின்,MK Stalin: Rajinikanth'tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in