தெண்டுல்கரின் சுயசரிதை புத்தகம் நாளை வெளியீடு

தெண்டுல்கரின் சுயசரிதை புத்தகம் நாளை வெளியீடு
கிரிக்கெட்டின் சகாப்தம் என்று அழைக்கப்படுவர் சச்சின் தெண்டுல்கர். பல்வேறு உலக சாதனைகளை புரிந்த அவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வு பெற்றார். தெண்டுல்கர் தனது கிரிக்கெட் வாழ்க்கை பற்றி ’பிளேயிங் இட் மை வே’ (எனது வழியில் விளையாடுகிறேன்) என்ற பெயரில் சுயசரிதை எழுதியுள்ளார். இந்த சுயசரிதை புத்தகம் உலகம் முழுவதும் நாளை (6–ந்தேதி) வெளியாகிறது.

416 பக்கங்களை கொண்ட இந்த புத்தகத்தின் விலை ரூ.599 ஆகும். முதல் பக்க அட்டையில் அவர் கடைசியாக விளையாடிய போட்டியில் இருந்து வெளியேறி செல்லும் படம் இடம் பெற்றுள்ளது.

தனது 24 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டை அவர் தனது சுயசரிதையில் குறிப்பிட்டு இருக்கிறார்.

தெண்டுல்கரின் சுயசரிதை வெளியிடும் முன்பே அதில் இடம் பெற்றுள்ள சர்ச்சைகள் வெளியே தெரியவந்தன.

பயிற்சியாளராக இருந்த ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் கிரேக் சேப்பல் பற்றி அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதோடு டிராவிட்டை கேப்டன் பதவியில் இருந்து நீக்க நினைத்து என்னை கேப்டனாக்க முயற்சித்தார் என்றும் தெண்டுல்கர் தனது சுயசரிதையில் குறிப்பிட்டு இருக்கிறது.

மேலும் கேப்டன் பதவியால் தான் மனவேதனை அடைந்து கிரிக்கெட்டை விட்டே விலக முடிவு செய்து இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதவிர பல்வேறு மனம் திறந்த கருத்துக்களை சுயசரிதையில் தெண்டுல்கர் தெரிவித்து இருக்கிறார். புத்தகம் வெளியிடும் போது மேலும் பல்வேறு விஷயங்கள் தெரியவரும்.
https://goo.gl/bbRR6B


15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்