தென்னாப்பிரிக்காவுடனான கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி

தென்னாப்பிரிக்காவுடனான கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி
தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.மார்ச் முதலாம் தேதி தொடங்கிய இப்போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 494 ரன்களும் இரண்டாவது இன்னிங்சில் 303 ரன்களும் எடுத்து வெற்றி இலக்காக 510 ரன்களை நிர்ணயித்தது.

முதல் இன்னிங்சில் 287 ரன்கள் எடுத்த தென்னாப்பிரிக்கா நேற்று 71 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது.கடின இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்க அணியினர் தங்களது விக்கெட்டுகளை விரைவில் இழந்தனர்.அந்த அணியின் டிவில்லியர்ஸ் 43 ரன்களும் ,டூ பிளிசஸ் 47 ரன்களும் எடுத்தனர்.முடிவில் அந்த அணி 265 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.பொறுப்பாக விளையாடிய பிலாண்டர் 51 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆஸ்திரேலியா தரப்பில் ஹாரிஸ் 4 விக்கெட்டுகளும் ஜான்சன் 3 விக்கட்டுகளும் வீழ்த்தினர்.இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.தொடர் நாயகன் மற்றும் ஆட்ட நாயகன் விருதை ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் தட்டிச் சென்றார். 
https://goo.gl/hWUbGE






15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்