தேர்வில் இருந்து தப்பிக்க சிறுவனை கொலை செய்த ப்ளஸ் 1 மாணவன்

தேர்வில் இருந்து தப்பிக்க  சிறுவனை கொலை செய்த ப்ளஸ் 1 மாணவன்
ஹரியானா மாநிலம் குருகிராம் ரியான் சர்வதேச பள்ளியில் 7 வயது சிறுவன் கொல்லப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக ப்ளஸ் 1 மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.


தேர்வில் இருந்து தப்பிக்க சக மாணவன் ஒருவனே சிறுவன் பிரத்யூமன் தாகூரை கொன்றுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 8ம் தேதி 2ம் வகுப்பு மாணவர் பிரத்யூமன் தாகூர், பள்ளி கழிவறையில் கழுத்தறுத்து கொல்லப்பட்டார்.

இதுதொடர்பாக பள்ளி வாகனத்தின் உதவியாளர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், செப்டம்பர் 22ம் தேதி வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் 11ம் வகுப்பு மாணவரை சிபிஐ விசாரித்தபோது பள்ளிக்கு விடுமுறை அளிப்பதற்காக சிறுவன் பிரத்யூமன் தாகூரை, அவன் கொன்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.


சிறுவன் பிரத்யூமன் தாகூரை அவன் கழிவறைக்கு அழைத்து சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருப்பதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

கொலைக்கு முன்னதாக பள்ளி தேர்வு நிச்சயம் தள்ளிவைக்கப்படும் என்றும் இதனால் யாரும் தேர்வுக்கு படிக்க வேண்டாம் என்றும் கைது செய்யப்பட்டுள்ள மாணவன் நண்பர்களிடம் தெரிவித்துள்ளது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தேர்வை தள்ளிவைக்க சக மாணவரே சிறுவனை கொலை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனையடுத்து கைது செய்யப்பட்ட மாணவனின் தந்தை கூறுகையில், கொலை வழக்கு தொடர்பாக எனது மகனை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். அவன் கொலை செய்யவில்லை. பிரத்யுமான் உடலை பார்த்தவுடன், அவன் தோட்டக்காரருக்கும், ஆசிரியர்களுக்கும் தான் தகவல் கொடுத்தான். நான்கு முறை எங்களிடம் விசாரணை நடந்துள்ளது.

 எங்களது வீட்டிற்கு வந்தே விசாரணை நடக்கும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பும் நாங்கள் கொடுத்தோம். ஆனால், நேற்று சிபிஐ அலுவலகத்தில் நள்ளிரவு வரை என்னை அமர வைத்திருந்த அதிகாரிகள், உங்களது மகன்தான் கொலை செய்தார். அவரை கைது செய்தோம் என தெரிவித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.
https://goo.gl/GLHvmS


16 Oct 2018

நாளை நடைதிறப்பு - சபரிமலை கோவிலில் பலத்த பாதுகாப்பு

11 Oct 2018

மசூதியில் பெண்களை தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும்: கேரள முஸ்லிம் பெண்கள் கூட்டமைப்பு

10 Oct 2018

சிறுமி பலாத்காரம் “என்னுடைய மகனை தூக்கிலிடுங்கள், மற்றவர்களை தாக்காதீர்கள்

19 Sep 2018

இந்திய ராணுவ வீரரை கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து கொலை செய்த பாகிஸ்தான் ராணுவம்

18 Sep 2018

தெலுங்கானா கவுரவ கொலை- மகளின் கணவரை கொல்ல கூலிப்படைக்கு ரூ.1 கோடி பேரம் பேசிய தந்தை

14 Sep 2018

பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்றார் மோடி; ஆனால் என் மகளுக்கு பலாத்காரத்துக்கு ஆளான மாணவியின் தாய் கண்ணீர்

14 Sep 2018

8 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட கொடூர கொலை.அதிர்ச்சியளிக்கும் கொலையாளி வாக்குமூலம்

13 Sep 2018

விஜய் மல்லையா நாட்டை விட்டு வெளியேற அருண் ஜெட்லி மறைமுக உதவி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

08 Sep 2018

சர்ச்சையில் சிக்கிய பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் உயிருடன் இருக்கும் நடிகை சோனாலி பிந்த்ரேக்கு இரங்கல்

30 Aug 2018

பள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடிய மாணவர்