தொழிலதிபரின் வீட்டில் ரூ.1 கோடி தங்க,வைர நகைகள் திருடிய நேபாள தம்பதி

தொழிலதிபரின் வீட்டில் ரூ.1 கோடி தங்க,வைர நகைகள் திருடிய நேபாள தம்பதி
தமிழக தொழிலதிபரின் வீட்டில் பூட்டை உடைத்து ரூ.1 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகளை கொள்ளையடித்த வழக்கில் நேபாள தம்பதி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


பெங்களூரு பானசவாடி சரகத்திற்குட்பட்ட எச்.பி.ஆர் லே அவுட் 2வது பிளாக் 5வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் நாகராஜ். கடந்த டிச.2ம் தேதி காலை இவர் வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்தினருடன் தமிழக மாநிலம் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு சென்றிருந்தார்.

மர்ம நபர்கள் சிலர், இவரது வீட்டின் சுற்று சுவர் வழியாக பால்கனிக்கு ஏறி, அங்கிருந்த கதவை உடைத்து, தரை தளத்தில் உள்ள வீட்டிற்குள் நுழைந்தனர்.


பின்னர் படுக்கையறைக்குள் நுழைந்த மர்ம நபர்கள், பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகை, பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பியோடிவிட்டனர். டிச.10ம் தேதி நாகராஜின் மருமகன் சைத்தன்யா என்பவர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, கதவுகள் உடைக்கப்பட்டு கிடந்தது.

சந்தேகமடைந்த அவர் உடனே இது குறித்து பானசவாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது சில ஆதாரங்கள் போலீசாருக்கு கிடைத்தது. தனிப்படை அமைத்த போலீசார் இந்த வழக்கில் தொடர்புடையதாக நேபாளத்தை சேர்ந்த தம்பதியை கைது செய்துள்ளனர்.

சோதனையில் கைதானவர்களிடமிருந்து பறிமுதல் செய்த நகைகள் அனைத்தும் உயர் போலீஸ் அதிகாரிகள் பார்வைக்காக பானசவாடி போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தது. இதனை மாநகர போலீஸ் கமிஷனர் சுனில் குமார், கிழக்கு மண்டல டி.சி.பி அஜய் கிலோரி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:  

தனிப்படை போலீசார் நேபாள எல்லையில் வைத்து, தம்பதியை கைது செய்தனர். நேபாளத்தின் கணேஷ்புரா கிராமத்தை சேர்ந்த பீன்பகதூர் சாஹி (46), மீனா சாஹி (44) என்று தெரியவந்தது.

இவர்களுடன் நேபாளத்தை சேர்ந்த தீரஜ் சாஹி, அபில் சாஹி, தீர் சாஹி ஆகியோர் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். தம்பதி சிக்கிக் கொண்ட நிலையில் கூட்டாளிகள் 3 பேரும் சொந்த நாட்டிற்கு தப்பியோடிவிட்டனர்.


அவர்களை கைது செய்ய சிறப்பு படையினர் நேபாளம் சென்றிருந்தனர். நேற்று அபீர் சாஹி என்பவரை போலீசார் கைது செய்தனர்.

கைதானவர்களில் முக்கிய குற்றவாளிகள் இந்த தம்பதிதான் என்று தெரியவந்துள்ளது. 

தம்பதி கொடுத்த தகவலின் பேரில் ரூ.1 கோடி மதிப்பிலான 2 கிலோ வைரம், 94 கிராம் தங்கம், ரூ.29 ஆயிரம் ரொக்கம், வெள்ளி நகைகள், வாட்ச், நேபாள ரூபாய் நோட்டு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைதான 3 பேர் மீதும் பானசவாடி போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர், தப்பியோடிய மேலும் 2 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்  என்று  தெரிவித்தனர்.
https://goo.gl/eU9jz2


19 Feb 2019

குடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை

19 Feb 2019

அ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி

06 Feb 2019

குப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது

03 Jan 2019

கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

02 Jan 2019

கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்

30 Dec 2018

சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

30 Dec 2018

அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்

27 Dec 2018

பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

27 Dec 2018

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய பாடங்களின் தேர்வு நேரத்தில் அரைமணி நேரம் குறைப்பு

25 Dec 2018

குற்றவாளிகளை சுட்டுக் கொல்லும்படி ஆவேசமாக பேசிய முதல் அமைச்சர் குமாரசாமி