tamilkurinji logo


 

நடன நிகழ்ச்சிக்கு ஐபிஎல்லைவிட சிறந்த இடம் இல்லை -நடிகை தமன்னா ,PL 2018 Opening Ceremony: Parineeti Chopra might not be performing, but Tamannaah Bhatia definitely will

PL,2018,Opening,Ceremony:,Parineeti,Chopra,might,not,be,performing,,but,Tamannaah,Bhatia,definitely,will
நடன நிகழ்ச்சிக்கு ஐபிஎல்லைவிட சிறந்த இடம் இல்லை -நடிகை தமன்னா

First Published : Saturday , 7th April 2018 12:00:18 PM
Last Updated : Saturday , 7th April 2018 12:00:18 PM


நடன நிகழ்ச்சிக்கு ஐபிஎல்லைவிட சிறந்த இடம் இல்லை -நடிகை  தமன்னா ,PL 2018 Opening Ceremony: Parineeti Chopra might not be performing, but Tamannaah Bhatia definitely will

நடன நிகழ்ச்சிகள் வழங்க ஐபிஎல்லைவிட சிறந்த இடமில்லை என்று தொடக்க விழாவில் பங்கேற்பதைப் பற்றி தமன்னா உற்சாகம் கொப்பளிக்க கூறியுள்ளார்.

இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ள தொடக்க விழாவுக்கான இறுதி ஒத்திகையில் ஈடுபடுவதற்கு முன் நேற்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசியது:

''நிறைய விருதுவழங்கும் விழாக்களில் பங்கேற்று எனது நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளேன்.. இதற்காக பல சுற்றுப்பயணங்களும் மேற்கொண்டுள்ளேன். ஆனால் ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பது இதுவே முதல் முறை.

இதற்குமுன் இப்படி நான் எப்போதும் விளையாட்டு நிகழ்ச்சி தொடர்பான விழாக்களில் பங்கேற்றது இல்லை. விளையாட்டுத் திடலில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் நீங்கள் ஏறும்போது ஒருவித நடுக்கமும் கூடவே உற்சாகமும் தொற்றிக்கொள்ளும் இல்லையா அத்தகைய பரவசம் இப்போது எனக்கு.

ஸ்டேடியத்தில் ரசிகர்களுக்கு உற்சாக உணர்வுகளைத் தட்டியெழுப்பும் ஒரு நிகழ்ச்சி அளிப்பவராக பங்கேற்பது என்பது மிகவும் மாறுபட்டது.

ஐபிஎல் போன்று உற்சாகம் தரும் வேறெந்த விழாக்களிலும் நாங்க பங்கேற்றதில்லை என்பதாலேயே நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். தொடக்க நாள் இரவில் நாம் அனைவரும் கிரிக்கெட்டைக் கொண்டாடுவோம்.

மும்பை, சென்னை, ஹைதராபாத் ஆகிய ஊர்களை எனது சொந்த ஊராகத்தான் நினைக்கிறேன். இந்த அனைத்து நகரங்களிலும் நான் இருந்திருக்கிறேன்.

தற்போது, இதில், என்னுடைய ஆடல் பாடல் நிகழ்ச்சி கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி ஆகிய நான்கு மொழிகளிலும் நான்கு பாடல்கள் நிகழ்த்தப்பட உள்ளன. எனவே இது இந்தியா முழுவதும் வலம் வரப் போகிறது'' என்றார்.

எந்த அணிக்கு உங்கள் ஆதரவு என்று கேட்டபோது, ''சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆடுகிறது. இதில் பங்கேற்கும் தோனிக்கு நான் மிகப்பெரிய ரசிகை. அதனால் அவர் விளையாடப் போவதை நான் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்'' என்றார் மிகவும் ஆர்வமாக.

இன்று நடைபெற உள்ள ஐபில் தொடக்க விழாவில் தமன்னா, ஹ்ருத்திக் ரோஷன், ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் வருண் தவான் ஆகியோரும் இந்த தொடக்கநாள் விழாவில் பங்கேற்று ரசிகர்களை மகிழ்வித்து உற்சாகப்படுத்த இருக்கிறார்கள்.

தமன்னா தற்போது கங்கணா ரனாவத்தின் 'குயின்' ரீமேக் படமான 'குயின் ஒன்ஸ் எகெய்ன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தேசிய விருது பெற்ற இயக்குநர் நீலகண்டா இயக்கி வருகிறார்.

நடன நிகழ்ச்சிக்கு ஐபிஎல்லைவிட சிறந்த இடம் இல்லை -நடிகை  தமன்னா ,PL 2018 Opening Ceremony: Parineeti Chopra might not be performing, but Tamannaah Bhatia definitely will நடன நிகழ்ச்சிக்கு ஐபிஎல்லைவிட சிறந்த இடம் இல்லை -நடிகை  தமன்னா ,PL 2018 Opening Ceremony: Parineeti Chopra might not be performing, but Tamannaah Bhatia definitely will நடன நிகழ்ச்சிக்கு ஐபிஎல்லைவிட சிறந்த இடம் இல்லை -நடிகை  தமன்னா ,PL 2018 Opening Ceremony: Parineeti Chopra might not be performing, but Tamannaah Bhatia definitely will
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கேரளாவுக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்கும் சூர்யா, கார்த்தி
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக ஒரே நேரத்தில் 22 அணைகள் திறந்து விடப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு

மேலும்...

 ஜோதிகாவின் ‘காற்றின் மொழி’: அக்டோபர் 18-ம் தேதி ரிலீஸ்
ஜோதிகா நடித்துள்ள ‘காற்றின் மொழி’ படம், அக்டோபர் 18-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.ஜோதிகா நடிப்பில் உருவாகிவரும் படம் ‘காற்றின் மொழி’. ராதாமோகன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், விதார்த், லட்சுமி மஞ்சு, எம்.எஸ்.பாஸ்கர், இளங்கோ குமரவேல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சிம்பு,

மேலும்...

 ராம் இயக்கியுள்ள பேரன்பு படத்தின் உருக்கமான டீசர் வெளியீடு
கற்றது தமிழ், தங்க மீன்கள் எனப் படத்துக்குப் படம் தமிழ் ரசிகர்களின் பரவலான பாராட்டுகளைப் பெற்று வருபவர் இயக்குநர் ராம். இவரின் அடுத்தப் படமாக உருவாகியுள்ள பேரன்பு வெளிவருவதற்கு முன்பே பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், படம் சர்வதேச

மேலும்...

 நல்ல பழக்கங்களை கடைபிடியுங்கள்; குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள்: நடிகர் சூர்யா
நல்ல பழக்கங்களை கடைபிடியுங்கள், குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா அறிவுரை வழங்கியிருக்கிறார்.இன்று (ஜூலை 23) தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யா. இதற்காக சில தினங்களுக்கு முன்பு தனது ரசிகர்களை சந்தித்து

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in