நடிகையின் கள்ளக்காதலன் கழுத்தறுத்து படுகொலை

நடிகையின் கள்ளக்காதலன் கழுத்தறுத்து படுகொலை
துணை நடிகையின் கள்ளக்காதலனை கொடைக்கானலில் வைத்து, கூலிப்படையை ஏவி கொலை செய்த தந்தை தலைமறைவானார். இதில் கைதானவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் உகார்தே நகரில் கேட்பாரின்றி நின்ற காரை கடந்த 25ம் தேதி போலீசார் மீட்டனர். காரில் ரத்தமும், தூவப்பட்டிருந்த மிளகாய் பொடியும் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.  விசாரணையில், இந்த கார் கொடைக்கானலை சேர்ந்த பிரபாகரனுக்கு (28) சொந்தமானது என தெரிந்தது. இவரே கார் டிரைவராகவும் இருந்துள்ளார்.

ஆகஸ்ட் 24ம் தேதி இரவு வாடகைக்கு செல்வதாக கூறி சென்ற பிரபாகரன் வீடு  திரும்பவில்லை. சிட்டி டவர் என்ற வனப்பகுதியில் 50 அடி பள்ளத்தில் பிரபாகரனின் உடல், கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், கடைசியாக பிரபாகரன் செல்போனுக்கு பேசியது அவரது நண்பரான மற்றொரு கார் டிரைவர் செந்தில்குமார்(37) என்பது தெரிந்தது.

இதனால் அவரைப் பிடித்து போலீசார் விசாரித்ததில்,  தனது நண்பர்களுடன் சேர்ந்து பணத்துக்காக பிரபாகரனை கொலை செய்ததை ஒப்பு கொண்டார். செந்தில்குமாரை கைது செய்த போலீசார், அவர் கொடுத்த தகவலின் பேரில் கொலையில் தொடர்புடைய மணிகண்டன் (28), முகமது  சல்மான் (20), அவரது தம்பி ஆகியோரை கைது செய்தனர்.

 கைதான செந்தில்குமார் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் வருமாறு:சென்னை, திருவான்மியூர் வால்மீகி நகரை சேர்ந்தவர் ரமேஷ்கிருஷ்ணன். அவரது மனைவி, துணை நடிகை விஷ்ணுபிரியா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். விஷ்ணுபிரியா, நடிகர் சூர்யா நடித்த ‘மாயாவி’ என்ற படத்தில்  ஒரு பாடல் காட்சியில் நடித்துள்ளார். விஷ்ணுபிரியாவின் தந்தை தொழிலதிபர் சூரியநாராயணன் ஐதராபாத்தில் உள்ளார்.

இவருக்கு கொடைக்கானலில் வீடு, நிலம் இருக்கிறது. மனநிலை பாதிப்பில் இருக்கும் ரமேஷ்கிருஷ்ணனை கொடைக்கானலில் உள்ள ஒரு  விடுதியில் தங்கவைத்து, சிகிச்சை அளிக்கின்றனர். அவரை பார்க்க விஷ்ணுபிரியா அடிக்கடி கொடைக்கானல் வந்து சென்றுள்ளார்.சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் வந்து செல்லும் விஷ்ணுபிரியாவை கொடைக்கானலுக்கு அழைத்து வரவும், மீண்டும் விமானநிலையம் அழைத்துச் செல்லவும் பிரபாகரன் தனது காரை எடுத்துச் செல்வார்.

இதில்  இருவருக்கும் இடையே நெருக்கமான பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிரபாகரனுக்கு சொந்தமாக கார் வாங்கிக் கொடுக்கும் அளவிற்கு பழக்கம் அதிகரித்து, ₹15 லட்சம் வரை பிரபாகரனுக்கு விஷ்ணுபிரியா கொடுத்திருப்பதாக தெரிகிறது.

 ஒரு மாதத்துக்கு முன்பு விஷ்ணுபிரியா கொடைக்கானல் வந்தபோது, ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தவர், அருகில் பிரபாகரனை வைத்துக் கொண்டு, தனது தந்தை சூரியநாராயணனை செல்போனில் தொடர்பு  கொண்டு பேசியுள்ளார். அப்போது, பிரபாகரனை விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக தந்தையிடம் கூறியுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த சூரியநாராயணன், பிரபாகரனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.


இதைத்தொடர்ந்து என்னிடம் அவர் பேசினார். கொடைக்கானலில் சூரியநாராயணன் வீடு கட்டிக் கொடுத்த கான்ட்ராக்டருக்கு நான் டிரைவராக  இருந்தேன். அப்போது என்னை அவருக்கு தெரியும். எனவே பிரபாகரனை கொலை செய்ய ₹3 லட்சம், 13 சென்ட் நிலம் தருவதாக பேரம் பேசினார்.


இதன்பேரில் நான், மணிகண்டன் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து பிரபாகரனை  கொலை செய்ய திட்டமிட்டோம். மணிகண்டன் வங்கி கணக்கில் சூரியநாராயணன் முன்தொகை ₹50 ஆயிரம் செலுத்தினார். மீதியை பிறகு தருவதாக கூறினார்.

ஆகஸ்ட் 24ம் தேதி இரவில் நான் போனில் தெரிவித்தபடி, பிரபாகரன் குறிஞ்சி ஆண்டவர் கோயிலருகே வந்தார். அவரை அழைத்து சென்று மதுகுடிக்க வைத்து, குடிபோதையில் இருந்த அவரை காருக்குள் வைத்து கண்ணில்  மிளகாய் பொடியை தூவி, கத்தியால் அவரது கழுத்தை அறுத்து கொன்றோம். உடலை வனப்பகுதியிலுள்ள பள்ளத்தில் வீசினோம். காரை உகார்தே நகரில் நிறுத்திவிட்டுச் சென்றோம்.இவ்வாறு அவர் தெரிவித்தாக போலீசார் கூறினர்.

தலைமறைவான சூரியநாராயணனை தேடி தனிப்படை போலீசார் ஐதராபாத் விரைந்துள்ளனர். கள்ளக்காதலனை, நடிகையின் தந்தையே கூலிப்படை ஏவி கழுத்தை அறுத்து  கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
https://goo.gl/vhSZaJ






19 Feb 2019

குடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை

19 Feb 2019

அ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி

06 Feb 2019

குப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது

03 Jan 2019

கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

02 Jan 2019

கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்

30 Dec 2018

சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

30 Dec 2018

அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்

27 Dec 2018

பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

27 Dec 2018

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய பாடங்களின் தேர்வு நேரத்தில் அரைமணி நேரம் குறைப்பு

25 Dec 2018

குற்றவாளிகளை சுட்டுக் கொல்லும்படி ஆவேசமாக பேசிய முதல் அமைச்சர் குமாரசாமி