tamilkurinji logo
 

நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் பாடல் மீது வழக்குப் பதிவு,Priya Prakash​ Varrier complaint: Muslims in Hyderabad lodge police

Priya,Prakash​,Varrier,complaint:,Muslims,in,Hyderabad,lodge,police,


நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் பாடல் மீது வழக்குப் பதிவு

First Published : Wednesday , 14th February 2018 07:51:31 PM
Last Updated : Wednesday , 14th February 2018 07:51:31 PM


நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் பாடல் மீது வழக்குப் பதிவு,Priya Prakash​ Varrier complaint: Muslims in Hyderabad lodge police

ஒரு அடார் லவ்’ மலையாளப் படப் புகழ் நாயகி பிரியா பிரகாஷ் வாரியர் பாடல் மீது ஹைதராபாத் போலீஸில் முஸ்லிம் அமைப்புகள் அளித்த புகாரையடுத்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தில் வரும் ‘மணிகயா மலரயா பூவே’ பாடலில் பிரியா பிரகாஷின் முக பாவனைகளை முஸ்லிம் மதத்துக்கு எதிராக இருப்பதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமர் உலு இயக்கத்தில் விரைவில் திரைக்கு வர இருக்கும் படம் ‘ஒரு அடர் லவ்’ படமாகும். இந்த படத்தின் நாயகி பிரியா பிரகாஷின் பாடல் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரலானது. ஒரு சில நாட்களில் இணையத்தில் பெரும்பாலானவர்களை இவரின் பாடல் கவர்ந்து இழுத்தது.

இந்நிலையில், இந்தப் பாடல் படமாக்கிய விதம் முஸ்லிம் மக்களின் உணர்வுகளை புண்படுத்தவாகக் கூறி ஐதராபாதில் உள்ள பளாக்னமா போலீஸ் நிலையத்தில் முஸ்லிம் அமைப்பைச் சேர்ந்த சிலர் புகார் அளித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தில் வரும் மணிகயா மலரயா பூவே பாடல், இறைத்தூதர் நபிகள் நாயகத்தை தொடர்புபடுத்தி வருவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து போலீஸில் புகார் அளித்த அதான் ஓமர் கூறுகையில், ‘ஒரு அடார் லவ்’ திரைப்படத்தின் இயக்குநர் ஒரு முஸ்லிம், அவர் அதில் வரும் பாடலான மணிகயா மலரயா பூவே பாடலை நபிகள் நாயகத்துடன் தொடர்பு படுத்தி படமாக்கியுள்ளார். நபிகள் நாயகத்துக்கும் அவரின் மனைவி கதிஜியாவுக்கும் இடையிலான காதலைக் குறிக்கும் வகையில் அந்த பாடல் இருக்கிறது. இது இறைத்தூதரை அவமானப்படுத்தும் பாடலாக அமைந்து இருக்கிறது.

இது தொடர்பாக 57 பேர் கையொப்பமிட்ட புகாரை போலிஸில் அளித்து இருக்கிறோம். பிரியா பிரகாஷ் மீது புகார் கொடுக்கவில்லை. இயக்குநர் மீதுதான் புகார் அளித்துள்ளோம்’ எனத் தெரிவித்தார்.

இது குறித்து பளாக்னுமா மண்டல போலீஸ் துணை ஆணையர் சயீத் பயாஸ் கூறுகையில் “ முஸ்லிம் அமைப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில், சட்ட ஆலோசனை செய்ததன் அடிப்படையில், ஐபிசி பிரிவு 295 ஏ பிரிவின் கீழ் திரைப்படத்தின் இயக்குநர் ஓமர் லுலு மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம்.

நாங்கள் முஸ்லிம் மதகுருக்களின் ஆலோசனையை கேட்க இருக்கிறோம். அவர்கள் அளிக்கும் பதிலின் அடிப்படையில் இயக்குநர் மீது நடவடிக்கை எடுப்போம்” எனத் தெரிவித்தார்.

நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் பாடல் மீது வழக்குப் பதிவு,Priya Prakash​ Varrier complaint: Muslims in Hyderabad lodge police நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் பாடல் மீது வழக்குப் பதிவு,Priya Prakash​ Varrier complaint: Muslims in Hyderabad lodge police நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் பாடல் மீது வழக்குப் பதிவு,Priya Prakash​ Varrier complaint: Muslims in Hyderabad lodge police
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 நடிகர் சத்யராஜின் பேச்சுக்கு பார்த்திபன் பதிலடி
 சென்னை சைதாப்பேட்டையில் நடந்த விழாவில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டார்.அப்போது அவர் பேசும் போது நடிகர்கள் அரசியலுக்கு வருவது அன்றாட செய்தியாகிவிட்டது. பிரபல நடிகர்கள் என்பதால் அவர்கள் (ரஜினி, கமல்) எல்லாம் தெரிந்தவர்கள் என்று மக்கள் நம்பிவிட வேண்டாம். அவ்வாறு நினைப்பது

மேலும்...

 அரசியல் பயணத்தை தொடங்கிய கமல்ஹாசனுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து
திரை உலகில் ‘உலகநாயகன்’ எனும் அடையாளத்துடன் வலம் வரும் நடிகர் கமல்ஹாசன் தற்போது அரசியல் களத்தில் குதித்து உள்ளார். தனது கட்சியின் பெயரை வருகிற 21-ந்தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்.நடிகர் கமல்ஹாசன் வருகிற 21-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் உள்ள முன்னாள்

மேலும்...

 ‘என்னையும் ஏமாற்றினார் நிரவ் மோடி’- நடிகை பிரியங்கா சோப்ரா
நிரவ் மோடியின் நகைக்கடைகளுக்கு சர்வதேச அளவில் விளம்பரத் தூதராக இருந்த பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு விளம்பரத்தில் நடத்த பணத்தை தராமல் நிரவ் மோடி ஏமாற்றிவிட்டார் என பிரியாங்கா புகார் தெரிவித்துள்ளார்.பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 280 கோடி மோசடியும், சட்டவிரோதமாக

மேலும்...

 3 தலைமுறைகளுக்கு பயன்படும் கட்சியை தொடங்கப் போகிறேன்” நடிகர் கமல்ஹாசன்
அமெரிக்கா சென்றுள்ள நடிகர் கமல்ஹாசன் பாஸ்டன் நகரில் உள்ள தமிழர்களை நேற்று சந்தித்து பேசியதாவது:  எனது கட்சியின் கொடி, வர்ணம், சின்னம் உள்ளிட்டவைகளை எனது மையம் இணையதளத்தில் வரும் 21ம் தேதி வெளியிட உள்ளேன். எனது பணியில் உங்கள் பங்கும் இருக்க

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in