நாட்டுகோழி சுக்கா / Nattu Kozhi sukka

நாட்டுகோழி சுக்கா / Nattu Kozhi sukka
தேவையான பொருட்கள்
நாட்டு கோழி சிக்கன்   – அரை கிலோ
சின்ன வெங்காயம் – 30
இஞ்சி பூண்டு விழுது – 1  ஸ்பூன்
மல்லித்தூள் – 3 ஸ்பூன்
மிளகாய்  தூள் – 1 ஸ்பூன்
மிளகு  - 1 ஸ்பூன்
சீரகம்   -  1 ஸ்பூன்
கரம்மசாலா தூள்  - 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை  ஸ்பூன்
உப்பு  - தேவைாயன அளவு

அரைக்க

தேங்காய் துருவியது – 5 ஸ்பூன்
கசகசா – 1 ஸ்பூன்
 முந்திரிபருப்பு – 5

தாளிக்க
நல்லெண்ணெய்  -  5  ஸ்பூன்
பட்டை – 2 துண்டு
கிராம்பு – 2

செய்முறை :
சிக்கனை   எலும்பு  நீக்கி  சின்னதாக  வெட்டிக் கொள்ளவும்.

பின்பு மிளகு ,சீரகத்தை மிக்சியில் போட்டு நன்கு பொடித்து வைத்து கொள்ளவும்

வெங்காயத்தை  பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அரைக்க கொடுத்தவற்றை பரபரப்பாக அரைத்து கொள்ளவும்.

கடாயில்   எண்ணெய் ஊற்றி சூடாக்கிய‌ எண்ணெயில்   பட்டை , கிராம்பு    போட்டு தாளித்து  நறுக்கிய வெங்காயம்,சேர்த்து நன்றாக வதக்கவும்.


நன்றாக வதக்கிய பின் இஞ்சி, பூண்டு, சேர்த்து வதக்கவும்   இஞ்சி பூண்டு வதக்கியவுடன்  கோழிக்கறி சேர்த்து பிரட்டவும்

பின்பு மசாலா தூள்கள் அனைத்தையும்  சேர்த்து  நன்கு வதக்கவும்.

மசாலா பொருட்கள் அனைத்தும் சேர்த்து நன்கு பிரட்டி 2  டம்ளர் தண்ணீர் சேர்த்து தேவையான உப்பு போட்டு   குக்கரை  மூடி 3 விசில் வரை   வேக விடவும். 

 10 நிமிடம்  கழித்து திறந்து குக்கரில் இருந்தவற்றை  கடாயில்  ஊற்றி  நன்கு வற்ற விடவும்.

 ஓரளவு  கெட்டியானவுடன்     அரைத்த  மசாலா   பொடித்து வைத்துள்ள மிளகு சீரகத்தை போட்டு    நன்கு  பிரட்டி விடவும்.   
நன்றாக சுண்டி கோழிக்கறி   நன்கு  வெந்து வந்ததும்   இறக்கி  நறுக்கிய மல்லி இலை தூவவும். சுவையான சூப்பர் சிக்கன் சுக்கா ரெடி.
https://goo.gl/ESi4QT


14 Nov 2018

முட்டை சிக்கன் கறி | EGG CHICKEN CURRY

18 Jun 2018

சில்லி சிக்கன் கிரேவி | chilli chicken gravy

23 May 2018

பிச்சு போட்ட கோழி வறுவல் | Pichu Potta Kozhi Varuval -

16 Apr 2018

மதுரை நாட்டுக்கோழி மிளகு வறுவல் | madurai nattu koli varuval

10 Apr 2018

சிக்கன் முந்திரி கிரேவி | Chicken munthiri gravy

08 Mar 2018

சுவையான ஸ்பைசி சிக்கன் குழம்பு | spicy chicken kulambu

03 Jan 2018

டிராகன் சிக்கன் | Dragon chicken

20 Nov 2017

கார சாரமான சிக்கன் வறுவல்.chicken pepper fry

22 Aug 2017

மொஹல் சிக்கன் கிரேவி | mughlai chicken gravy

17 Jul 2017

சிக்கன் வடை | chicken vadai