நாளை ஆசிரியர் தகுதித் தேர்வு

நாளை ஆசிரியர் தகுதித் தேர்வு
பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை (ஜூலை 12) நடைபெறுகிறது.

1,027 மையங்களில் மொத்தம் 6.56 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதுகின்றனர். வியாழக்கிழமை காலை 10.30 மணி முதல் 12 மணி வரை முதல் தாள் தேர்வும், பிற்பகல் 2.30 மணி முதல் 4 மணி வரை இரண்டாம் தாள் தேர்வும் நடைபெறும். இந்தத் தேர்வை நடத்துவதற்காக மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதோடு, தமிழகம் முழுவதும் 5 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்திலும் ஆசிரியர் தேர்வு மைய அதிகாரிகள் தேர்வு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களோடு, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ப.மணி மற்றும் 6 இணை இயக்குநர்களும் ஆசிரியர் தகுதித் தேர்வை கண்காணிக்கும் பணியில் ஈடுபட உள்ளனர்.
இந்தப் பணியில் மொத்தம் 55 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். ஆசிரியர் தகுதித் தேர்வுப் பணிகள் குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் சுர்ஜித் கே. சௌத்ரி நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் கிடைக்கவில்லை என்று புகார்கள் வந்தன. இதுதொடர்பாக நேரில் ஆய்வு நடத்துவதற்காக, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் ஒவ்வொரு மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்துக்கும் அனுப்பப்பட்டனர்.

விண்ணப்பத்தின் நகல், வங்கியில் பணம் செலுத்தியதற்கான ரசீது, விண்ணப்பத்தைச் சமர்ப்பித்ததற்கான சான்று ஆகியவற்றுடன் நேரில் வந்தவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதில் மாநிலம் முழுவதும் 323 பேர் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதத் தகுதியானவர்கள் என்று அவர்கள் அறிக்கையளித்தனர். அதனடிப்படையில், அவர்களுக்கான ஹால் டிக்கெட் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

இந்த ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து அவர்கள் தேர்வில் பங்கேற்கலாம்.

அதோடு, ஆசிரியர் தகுதித் தேர்வை சிறப்பாக நடத்துவதற்காக தமிழகம் முழுவதும் 5 மண்டலங்களாகப் பிரித்து எங்கள் அதிகாரிகளைப் பொறுப்பாளர்களாக நியமித்துள்ளோம்.

இவர்களின் செல்போன் எண்களும் வெளியிடப்படுகின்றன. ஹால் டிக்கெட் கிடைக்காதது உள்ளிட்ட தேர்வு தொடர்பான அனைத்துவிதமான புகார்களையும் இந்த எண்களில் விண்ணப்பதாரர்கள் தெரிவிக்கலாம்.

ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் தேர்வு மையங்களை நேரடியாகப் பார்வையிட உள்ளேன்.

முக்கிய விடைகள் எப்போது? ஆசிரியர் தகுதித் தேர்வு ஓ.எம்.ஆர். விடைத்தாள்களை "ஸ்கேன்' செய்யும் பணி நிறைவடைந்ததும் முக்கிய விடைகள் இணையதளத்தில் வெளியிடப்படும். அதன்பிறகு, தேர்வர்கள் தெரிவிக்கும் புகார்கள் குறித்து நிபுணர் குழு கொண்டு ஆராயப்படும். ஓரு வாரம் கழித்து இறுதியாக முக்கிய விடைகள் வெளியிடப்படும்.

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் ஒரு மாத காலத்துக்குள் வெளியிடப்படும். இந்தத் தேர்வுடன் 40 ஆயிரம் ஆசியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் நிறைவடைகின்றன என்றார் அவர்.

புகார்களுக்கு தொடர்பு கொள்ள...

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான புகார்களுக்கு தொடர்புகொள்ள வேண்டிய அதிகாரிகள், அவர்களின் செல்போன் எண்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
தமிழகம் 5 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்துக்கும் இவர்கள் பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் விவரம்:

1. ஏ.சங்கர், ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் (ஆசிரியர் தகுதித் தேர்வு) - 94447 04635 - திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், அரியலூர்.
2. க.அறிவொளி, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் (பள்ளிக் கல்வி) - 94440 28268 - சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, விழுப்புரம், கடலூர்.
3. எஸ்.அன்பழகன், ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்-செயலர் - 89396 75004 - கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம்.
4. டி.உமா, ஆசிரியர் தேர்வு வாரிய கூடுதல் உறுப்பினர் - 1 - 94441 37396 - கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர்.
5. எஸ்.சேதுராமவர்மா, ஆசிரியர் தேர்வு வாரிய கூடுதல் உறுப்பினர் - 2 - 91506 42680 - மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம்.

தேர்வர்களுக்கான அறிவுரைகள்...

* தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தை முன்னதாகவே சென்று பார்வையிடுவது நல்லது. வேலை நாளில் தேர்வு நடைபெறுவதால், முகவரியைத் தேடுதல் உள்ளிட்ட வேலைகளை தேர்வு நாளன்று குறைக்கலாம்.
* தேர்வு அறைக்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாகவே சென்று தேர்வர்கள் விடைத் தாள் விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும். எனவே, கடைசி நேர பரபரப்பைத் தவிர்க்கும் வகையில், தேர்வு மையங்களுக்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே தேர்வர்கள் செல்ல வேண்டும்.
* தேர்வு நடைபெறும்போது தேர்வறையை விட்டு வெளியேறுவதற்கு யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
* அனைத்துத் தேர்வர்களும் தேர்வு எழுதி முடித்த பிறகே, அவர்களுக்கான ஓ.எம்.ஆர். விடைத் தாள் நகல் வழங்கப்படும்.
* ஓ.எம்.ஆர். விடைத் தாளில் விடையளிக்கும் வகையில் கறுப்பு அல்லது நீல நிற பால் பாயின்ட் பேனாவைக் கொண்டுவர வேண்டும்.
* பென்சில், கால்குலேட்டர், செல்போன் போன்றவை தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டாது.
* தேர்வு முடிந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் வரை, இந்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட், விடைத் தாள் நகல் ஆகியவற்றை தேர்வர்கள் பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.
* விண்ணப்பத்தில் தங்களது பெயரை தவறாகக் குறிப்பிட்டுள்ளவர்கள், தேர்வு நடைபெறுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே சென்று முதன்மைக் கண்காணிப்பாளரைச் சந்திக்க வேண்டும். அவரிடம் தங்களது சரியான பெயருக்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
https://goo.gl/mT8ESo


04 Mar 2013

குரூப் 2 தேர்வு முடிவு 100 பேருக்கு நிறுத்தி வைப்பு

27 Feb 2013

வி.ஏ.ஓ. பணிக்கு 4&வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல்

05 Jan 2013

கூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர்கள் நியமனம் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு 23-ந் தேதி முதல் 31 வரை நடைபெறும்

03 Jan 2013

குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப 2-வது கட்ட கவுன்சிலிங்

03 Jan 2013

குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும்

27 Dec 2012

VAO பணிக்கு 3-ந்தேதி கவுன்சிலிங் தொடக்கம்

17 Dec 2012

1870 விஏஓக்கள் தேர்வுக்கு இம்மாத இறுதியில் கவுன்சலிங்

30 Nov 2012

கிராம நிர்வாக அதிகாரிகள் தேர்வு முடிவு வெளியீடு

25 Aug 2012

தகுதித்தேர்வு மூலம் நிரப்பப்படும் பாடவாரியான ஆசிரியர் காலி இடங்கள் விவரம்

09 Aug 2012

வருமானவரி ரிட்டன் கணக்கு தயார் செய்ய 5 ஆயிரம் பேர் நியமனம்