நாளை முதல் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும்- சென்னை வானிலை மையம்

நாளை முதல் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும்- சென்னை வானிலை மையம்
நாளை தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை முடிவடைந்து வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி தமிழகம் காத்துக் கொண்டிருந்தது.


இந்நிலையில் கடந்த 21-ஆம் தேதி தொடங்குவதாக கூறப்பட்ட நிலையில் அது தாமதமானது. இதையடுத்து அக்டோபர் 26-ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும் தொடங்கவில்லை.


இந்நிலையில் நேற்று முதல் சென்னையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மேலும் குளிர்ந்த காற்றும் நிலவுகிறது.


இது வடகிழக்கு பருவமழையின் முன்னோட்டம் என எதிர்பார்க்கப்பட்டது.

இது குறித்து சென்னை வானிலை மையத்தின் இயக்குநர் பாலசந்திரன் கூறுகையில், தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது.

இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை தொடங்கும். பின்னர் படிப்படியாக மற்ற மாவட்டங்கள், கேரளம், தென் கர்நாடகம் ஆகிய இடங்களில் பெய்யும். மழை பெய்யும் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்யும்.


இன்று காலை நிலவரப்படி எண்ணூர், மாமல்லபுரம், பொன்னேரி ஆகிய பகுதிகளில் 5 செ.மீ. மழை பெய்துள்ளது. அக்டோபர் மாதம் இந்த ஆண்டு இயல்பை விட 12 சதவீதம் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது. அக்டோபர் மாதத்தில் எதிர்பார்த்ததை விட 11 சதவீதம் குறைவான மழை பெய்தது.

https://goo.gl/h4P1nf


14 Dec 2018

நான் உழைத்து முதல்வரானேன்: நீங்கள் அப்பாவின் தயவால் உயர்ந்துள்ளீர்கள்: ஸ்டாலின்மீது எடப்பாடி பாய்ச்சல்

14 Dec 2018

புயலால் 8 மீட்டர் வரை அலை எழும்பும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

14 Dec 2018

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வாய்ப்பு என தகவல்

13 Dec 2018

பள்ளியில் 5 மாணவிகள் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி

13 Dec 2018

கழிவறை கேட்டு தந்தை மீது புகார் தந்த 7 வயது சிறுமி.. ஆம்பூர் தூய்மை இந்தியா தூதுவரானார்

13 Dec 2018

காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் : வட தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு

13 Dec 2018

தினகரனை தவிர பிரிந்து சென்றவர்கள் யார் வேண்டுமானாலும் திரும்பி வரலாம் - முதல்வர் பகிரங்க அழைப்பு

11 Dec 2018

குடும்ப வறுமையில் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை

11 Dec 2018

கூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு: கல்லூரி மாணவி பரிதாப மரணம்

10 Dec 2018

கிராமங்களுக்கு மின்சாரம் கிடைத்த பின்னர் தான் சென்னை செல்வேன்- அமைச்சர் விஜயபாஸ்கர்