நீங்கள் நடத்துவது அரசியல் அல்ல, வியாபாரம் - ரஜினிக்கு சத்யராஜ் பதிலடி

நீங்கள் நடத்துவது அரசியல் அல்ல, வியாபாரம் - ரஜினிக்கு சத்யராஜ் பதிலடி

தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்ட நடிகர் சத்யராஜ், ரஜினியின் ஆன்மிக அரசியலுக்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

பெரியார் திடலில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு நடிகர் சத்யராஜ் பேசியதாவது:-

நீங்கள் அரசியலில் குதித்து விட்டீர்கள். அப்படியே உள்ளே இறங்குவற்கு பெயர்தான் அரசியல். நீங்கள் வியாபாரத்துக்கு உள்ளே வந்துவிட்டு அதுக்கு ஏதோ ஒரு பெயர் வைக்க கூடாது.

அந்த வியாபாரத்துக்கு ஆன்மீக அரசியல் அப்படின்னு பெயர். அந்த வியாபாரத்துக்கு, எனக்கும் கூட, நான் நினைத்த வரைக்கும் ஆன்மீக அரசியல்னா என்னான்னு எனக்கு தோணுதுன்னா... இரும்புக்கரம் கொண்டு அடக்குவதல்ல ஆன்மீக அரசியல். அன்புக்கரம் கொண்டு அடக்குவதுதான் ஆன்மீக அரசியல்.

எனக்கு தெரிந்து ஆன்மீகம் என்றால் அன்பு. நாம் நிம்மதியைத் தேடி மலைக் கெல்லாமா போகிறோம். நமக்கு தெளிவாக இருக்கிறது. இந்த பெரியார் திடலில் படித்தவர்கள் நாம். இப்படியே நிம்மதியாகத்தான் இருப்பேன்.

எனக்கு எங்கேயும் போக வேண்டாம். காலையில் பல் விலக்கும் போது நிம்மதியாக விலக்குவேன். ஷேவ் பண்ணும் போதும் நிம்மதியாக ஷேவ் செய்வேன். இட்லி-தோசை சாப்பிட்டாலும் நிம்மதியாக சாப்பிடுவேன்.

தெளிவாக இருக்கிறேன். அய்யா கொடுத்த அறிவு. தந்தை பெரியார் கொடுத்த அறிவு. ஒரு பஞ்ச் டயலாக் கூட அய்யாவை வைத்துத்தான் பேசுவேன். எனக்கு தலையில் முடி இல்லையேன்னு சொன்னாங்க. நாங்கள் எல்லாம் தலைக்கு மேல இருக்கிறதை நம்பி வாழ்றவங்க இல்லை.

தலைக்கு உள்ளே இருக்கிறதை நம்பி வாழ்றவங்க. தலைக்கு மேல இருக்கிறது என்பது பரம்பரை. ஆனால் உள்ளே இருக்கிறது அய்யா கொடுத்தது. அது கொட்டாது, வளர்ந்துகிட்டே தான் இருக்கும்.


தன் வாழ்க்கையையே அர்ப்பணித்து தான் நம்பிய கொள்கைக்காக தான் நம்பிய சுயமரியாதை கொள்கைக்காக அப்படியே களத்தில் இறங்கி, நம் எதிர்காலம் என்னாகும், நம் தொழில் என்னாகும், சிறைக்கு போவோமா, மாட்டோமா, அப்படிங்கிறதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் வருவதற்கு பெயர்தான் அரசியல்.

அதுதான் சமூக சேவை. திட்டம் போட்டு கணக்கு போட்டு அரசியலுக்கு வருவது அரசியல் அல்ல. அதுக்கு பெயர் வியாபாரம். கடைசியாக இருக்கிற நீதியும் கைவிட்டு விடும் போதுதான் சமுதாயம் புரட்சி மீது நம்பிக்கை வைக்கிறது.

போராட்டத்தின் மீது நம்பிக்கை வைப்பது ஒரு நாடு சுடுகாடாக மாறுவதற்காக அல்ல. நாடு சுடுகாடாக மாறாமல் இருப்பதற்காகத் தான் போராட வேண்டியது இருக்கிறது.
https://goo.gl/PfydqD


18 Feb 2019

மகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்

06 Feb 2019

பிரபல நடிகை தற்கொலை; செல்போன் பேச்சுக்கள் குறித்து போலீஸ் விசாரணை

02 Jan 2019

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்” - பிரகாஷ்ராஜ் அறிவிப்பு

27 Dec 2018

ஜெயலலிதா வாழ்க்கைப்படம் - சசிகலா வேடத்தில் சாய் பல்லவி

27 Dec 2018

பிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் காலமானார்

21 Dec 2018

நடிகை ஹன்சிகா மீது நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சி புகார்.

18 Dec 2018

மாரியில் ரோபோ ஷங்கர் வேண்டாம் என்று ஒத்த காலில் நின்றேன்: தனுஷ்

18 Dec 2018

மகள் நினைவாக பாடகி சித்ரா கட்டிய கீமோ’ சிகிச்சை மையம்

13 Dec 2018

நடன இயக்குனரை மணந்தார் நடிகை சாந்தினி

13 Dec 2018

நடிகை சுருதி ஹரிகரன் மீ டூ’வால் பட வாய்ப்புகள் இழந்தேன்