tamilkurinji logo


 

நீட் தேர்வு தோல்வி 10-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை,tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> இந்தியா

நீட் தேர்வு தோல்வி 10-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை

First Published : Wednesday , 6th June 2018 08:25:29 PM
Last Updated : Wednesday , 6th June 2018 08:25:29 PM


நீட் தேர்வு தோல்வி   10-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

நீட் தேர்வில் சிறப்பாகச் செயல்படமுடியாததை எண்ணி மனமுடைந்து ஹைதராபாத்தில் 18வயது மாணவி ஒருவர் 10-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து, நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டபின் தற்கொலை செய்து கொண்ட மாணவ, மாணவிகள் எண்ணிக்கை 3-ஆக அதிகரித்துள்ளது.


தமிழகத்தில் பிரதிபா என்ற மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்தார்,டெல்லியில் ஒரு மாணவர் மாடியில் இருந்து விழுந்து இறந்தார். இப்போது 3-வதாக மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

தெலங்கானா மாநிலம், கச்சேகுடா அருகே உள்ள நாராயணகுடாவில் சைதன்யா ஜூனியர் கல்லூரியில் பியோபிக் 2-ம் ஆண்டு படிப்பு படித்து வந்தவர் ஜஸ்லீன் கவுர்(வயது 18). இவரின் தந்தை ரண்வீர் சிங்.


இவர் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். ஜஸ்லீன் கவுர் பரகத்புரா நகரில் உள்ள அவரின் சித்தப்பாவின் வீட்டில் இருந்து தங்கி படித்து வந்தார்.

கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதியும் மருத்துவப்படிப்பில் சேரமுடியவில்லை என்பதால், இந்த முறை தீவிரமாக கவுர் படித்தார். ஆனால், நீட் தேர்வு முடிவில் எதிர்பார்த்த அளவுக்கு கவுருக்கு மதிப்பெண் கிடைக்கவில்லை.


இதையடுத்து, மனமுடைந்து காணப்பட்ட ஜஸ்லீன் கவுர், நேற்று காலை அபிட்ஸ் பகுதியில் உள்ள ஷாப்பிங் காம்ப்பிளஸ் பகுதியின் 10-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஜஸ்லீன் கவுர் தற்கொலை செய்து கொண்டதை அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தடுக்க முயன்றும் முடியவில்லை. இதையடுத்து போலீஸுக்கு தகவல் கொடுத்தனர்.


அதன்பின் போலீஸார் வந்து ஜஸ்லீன் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி அவரின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அவரின் பெற்றோருக்கும் போலீஸார் தகவல் கொடுத்துள்ளனர்.

ஜஸ்லின் கவுர் தற்கொலை செய்து கொண்ட வணிக வளாகத்தில் உள்ள நகைக்கடையில் பணியாற்றும் கோபி என்பவர் கூறுகையில், ‘‘காலையில் மணி 10.20 இருக்கும், மிக்பெரிய சத்தத்தைக் கேட்டேன்.


சுவற்றில் பொருத்தி இருக்கும் ஏசி மெஷின் விழுந்துவிட்டதா அதை எல்லோரும் பார்க்கிறார்களா எனப்பார்த்து வெளியே ஓடினேன் அங்கு கவுர் தற்கொலை செய்து உயிரிழந்திருந்தார்.

அந்த பெண் தற்கொலைசெய்யும் முடிவோடு 10-வது மாடியில் நிற்கும் போது, அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் சத்தம் போட்டு கீழே இறங்கக் கூறியுள்ளனர், சிலர் அந்த பெண்ணைக் காப்பாற்ற மேலே சென்றுள்ளனர். ஆனால், அந்தப் பெண் கண்இமைக்கும் நேரத்தில் விழுந்துவிட்டார்’’ எனத் தெரிவித்தார்.

போலீஸாரிடம் ஜஸ்லீன் கவுரின் உறவினர்கள் கூறுகையில், ‘‘12-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களைத்தான் ஜஸ்லின் எடுத்தார். ஆனால்,நீட் தேர்வில் தேர்வாக முடியவில்லை என்ற வருத்தம் அவருக்கு இருந்து வந்தது.


ஆனால், இந்த முறை நீட் தேர்வில் ஜஸ்லீன் என்ன மதிப்பெண் எடுத்தார் என்பதை எங்களிடம் அவர் கூறவில்லை. அவளின் மதிப்பெண் குறித்து அவளின் தோழிகளிடம் கேட்டுத்தான் தெரிந்து கொண்டோம்’’ எனத் தெரிவித்தனர்.

இதற்கிடையே ஜஸ்லின் தற்கொலை செய்து கொள்வதற்காக மாடியில் ஏறுவது, 10-வது மாடிக்குச் செல்வது போன்ற காட்சிகள் அனைத்தும் வணிக வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது.


மேலும், 10-வது மாடியில் இருந்து கவுர் கீழே விழுந்த காட்சியையும் சிலர் செல்போனில் படம் பிடித்து அதை பரப்பிவிட்டுள்ளனர்.

இது குறித்து போலீஸ் துணை ஆய்வாளர் லட்சுமணய்யா கூறுகையில், ‘‘ஜஸ்லின் கவுர் காலையில் உடற்பயிற்சிக்கூடத்துக்கு சென்றுவிட்டு வருவதாக கூறி வீட்டில் இருந்து 8.45 மணிக்கு புறப்பட்டுள்ளார்.


ஆனால், இந்த வணிக வளாகத்துக்கு இருசக்கர வாகனத்தில் கவுர் வந்துள்ளார். சாலையின் ஓரத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு மாடியில் ஏறி தற்கொலை செய்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்‘‘ எனத் தெரிவித்தார்.

நீட் தேர்வு தோல்வி   10-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema நீட் தேர்வு தோல்வி   10-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema நீட் தேர்வு தோல்வி   10-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது - 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை காரணமாக கேரளா, கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் மேட்டூர் அணை

மேலும்...

 நாடாளுமன்ற தேர்தலில் யாருடனும் கூட்டணிஇல்லை : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜ, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. ஆட்சியை தக்க வைக்க முனைப்பு காட்டி

மேலும்...

 ஜிவாதான் என் மனஅழுத்தத்தைப் போக்குபவள்: தோனி உருக்கம்
என் மகள் ஜிவாதான் என் மனஅழுத்தத்தை போக்கும் மருந்து, மூன்றரை வயதிலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டார் என்று மகேந்திர சிங் தோனி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்தோனியின் மூன்றரை வயது மகள் ஜிவா. சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்

மேலும்...

 கர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை - காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கர்நாடக மாநிலத்தில் பரவலாக பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கனமழையால் அம்மாநில அணைகள் விரைவாக நிரம்பி வருவதால் கபினி அணையில் இருந்து 70,000 கனஅடி, கேஆர்எஸ் அணையில் இருந்து 55,000 கனஅடி என கர்நாடக

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in