tamilkurinji logo
 

நீட் தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் : சிபிஎஸ்இ அறிவிப்பு,CBSE NEET 2018 results releasing today tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

CBSE,NEET,2018,results,releasing,today,tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> தமிழகம்

நீட் தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் : சிபிஎஸ்இ அறிவிப்பு

First Published : Monday , 4th June 2018 11:20:49 AM
Last Updated : Monday , 4th June 2018 11:20:49 AM


நீட் தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் : சிபிஎஸ்இ அறிவிப்பு,CBSE NEET 2018 results releasing today tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளன. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலார் அனில் ஸ்வரூப் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) அடிப்படையில் நடைபெற்று வருகிறது.


இந்த ஆண்டு முதல் ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஹோமியோபதி (ஆயுஷ் - AYUSH) படிப்புகள் மற்றும் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கச் செல்பவருக்கும் நீட் தேர்வு கட்டாயமாக் கப்பட்டுள்ளது.

அதன்படி, நாடுமுழுவதும் 2018-19 கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு நேற்று நடந்தது. தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட 11 மொழிகளில் 136 நகரங்களில் 2,255 மையங்களில் நடந்த நீட் தேர்வை விண்ணப்பித்திருந்த 13 லட்சத்து 26,725 மாணவர்களில் சுமார் 90 சதவீதம் பேர் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோல் தமிழகத்தில் 10 நகரங்களில் 170 மையங்களில் 1 லட்சத்து 7,288 மாணவர்களில், 1 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.

தமிழக அரசு மற்றும் பல் வேறு தனியார் அமைப்புகளின் உதவியால் மிகுந்த சிரமத்துக்கிடையே ரயில்கள், பேருந்துகளில் சென்று மாணவர்கள் தேர்வு எழுதினர்.

இந்நிலையில், நீர் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. முன்னதாக நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படுவதாக இருந்தது. இதனை மாற்றி இன்று வெளியிட சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலார் அனில் ஸ்வரூப் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

நீட் தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் : சிபிஎஸ்இ அறிவிப்பு,CBSE NEET 2018 results releasing today tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema நீட் தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் : சிபிஎஸ்இ அறிவிப்பு,CBSE NEET 2018 results releasing today tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema நீட் தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் : சிபிஎஸ்இ அறிவிப்பு,CBSE NEET 2018 results releasing today tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 விவசாயிகளுக்காக போராடினால் நக்சலைட்டா? பியூஷ் மனுஸ் சகோதரி கேள்வி
கோவையில் சமூக ஆர்வலர் பியூஸ் மனுஸ் சகோதரி ஊர்வசி் லுனியா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது- நேற்று முன்தினம் இரவு பியூஸ்மனுஷ் கைது செய்யப்பட்டது குறித்து குடும்பத்தினருக்கு காவல் துறையினர் முறையான தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. பியூஸ் மனுஷை கடத்தி

மேலும்...

 ரூ.80 கோடி மதிப்புள்ள சாமி சிலைகளை கடத்தியவர் 3 ஆண்டுகளுக்கு பிறகு கைது
காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் திருடு போன ரூ.80 கோடி மதிப்பிலான சுவாமி சிலைகளைக் கடத்தியவரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் நேற்று கைது செய்தனர்.காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அருகில் உள்ள ராமானுஜபுரம் மணிகண்டேஸ்வரர் கோயிலில் இருந்த சிவன், பார்வதி சிலைகள்

மேலும்...

 சென்னை-சேலம் விரைவு சாலைக்கு எதிர்ப்பு - விவசாயிகள் தீக்குளிக்க முயற்சி
சேலம்-சென்னைக்கு 10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி விரைவு சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாலை, காஞ்சீபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. மேலும் 40

மேலும்...

 தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைகிறது
2015-ம் ஆண்டு மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது என்பதில் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே ஒரு முடிவு காணப்படாத நிலை இருந்தது.எய்ம்ஸ்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in