tamilkurinji logo
 

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் வெந்தயக் கீரை,vendhaya keerai benefits in tamil 5 Top Benefits & Uses Of Fenugreek leaves tamil maruthuvam patti vaithyam

vendhaya,keerai,benefits,in,tamil,5,Top,Benefits,&,Uses,Of,Fenugreek,leaves,,tamil,maruthuvam,patti,vaithyam


நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் வெந்தயக் கீரை

First Published : Wednesday , 22nd June 2016 07:39:54 PM
Last Updated : Wednesday , 22nd June 2016 07:39:54 PM


நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் வெந்தயக் கீரை,vendhaya keerai benefits in tamil 5 Top Benefits & Uses Of Fenugreek leaves  tamil maruthuvam patti vaithyam

இடுப்பு வலி நீங்கும் வெந்தயக் கீரையோடு, நாட்டுக் கோழி முட்டையில் வெள்ளை கரு, தேங்காய் பால், கசகசா, சீரகம், மிளகு, பூண்டு போன்றவற்றை சேர்த்து சிறிதளவு நெய் கலந்து சமைத்து சாப்பிட்டால் இடுப்பு வலி குணமாகும்.

வெந்தயக்கீரையில் இலை, தண்டு, விதை முதலியன பயன் தரும் பாகங்கள். வெந்தயம் வயிற்றுப் போக்கைக் குணப்படுத்தும், தாய்ப்பாலை பெருக்கும். தீப்புண்ணை ஆற்றும். மது மேகத்தை குணமாக்கும். உடலில் ஏற்படும் கட்டிகளை பழுத்து உடையச் செய்யும். வலியை போக்கும் சர்க்கரை வியாதியைக் குறைக்கும்.

பத்து கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்துச் சிறிதளவு சோம்பும், உப்பும் சேர்த்தரைத்து மோரில் கரைத்துக் கொடுக்க வயிற்றுப் போக்கு தீரும். ஐந்து கிராம் வெந்தயத்தை நன்கு வேக வைத்துக் கடைந்து சிறிது தேன் கலந்து கொடுத்து வர தாய்ப்பால் பெருகும்.

வெந்தயத்தை அரைத்துத் தீப்பட்ட இடங்களில் தடவ எரிச்சல் தணிந்து ஆறும். வெந்தயப் பொடியால் மேகம் குணமாகும். வெந்தயத்துடன் சமன் சீமையத்தியின் பழத்தைச் சேர்த்து அரைத்து நீரில் குழைத்துத் தணலில் களி போல் கிளறி கட்டிகளுக்கு வைத்துக் கட்ட அவை பழுத்து உடையும். இரவு சிறிது வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து அதிகாலை வெறும் வயிற்றில் தண்ணீர் மட்டும் குடிக்க நீரிழிவு நோய் சிறிது சிறிதாக குறையும்.

. முடி உதிர்வதைத் தடுக்க வெந்தயத்தை சீயக்காயோடு சேர்த்து அரைத்து சிறிது ஊற வைத்துத் தலை முழுகினால் பலன் கிடைக்கும். முகத்தில் பரு வந்தால் வெந்தயத்தை நன்கு அரைத்து முகத்தில் அப்பினால் எரிச்சல் குறையும், பருவும் குணமடையும்.

உடலில் ஏற்படும் உள்வீக்கம், வெளிவீக்கத்தைப் போக்கும். வெளி வீக்கத்தின் மீது, வெந்தயக்கீரையை அரைத்துக் கிண்டி, வீக்கத்தின் மீது வைத்துக்கட்ட, வீக்கம் குணமாகும். தீப்புண்கள் மீது வைத்துக்கட்ட, காயம் விரைவில் ஆறும். வெந்தயக்கீரையை வேகவைத்துத் தேன் விட்டுக் கலந்து, அளவாகச் சாப்பிட்டுவந்தால், மலம் எளிதாக வெளியேறும்; நெஞ்சு வலி, இருமல், மூலம் மற்றும் செரிமானப் பாதையில் இருக்கும் புண்கள் குணமாகும்.

வெந்தயக்கீரையை ஊறவைத்து, அந்தத் தண்ணீரை எடுத்து வாய் கொப்பளித்துவந்தால் வாய்ப்புண் ஆறும். வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து நிறைந்தது. சர்க்கரை நோயாளிகள் இந்தக் கீரையை அடிக்கடி சமைத்துச் சாப்பிடுவது நல்லது


நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் வெந்தயக் கீரை,vendhaya keerai benefits in tamil 5 Top Benefits & Uses Of Fenugreek leaves  tamil maruthuvam patti vaithyam நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் வெந்தயக் கீரை,vendhaya keerai benefits in tamil 5 Top Benefits & Uses Of Fenugreek leaves  tamil maruthuvam patti vaithyam நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் வெந்தயக் கீரை,vendhaya keerai benefits in tamil 5 Top Benefits & Uses Of Fenugreek leaves  tamil maruthuvam patti vaithyam
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மாதவிலக்கு பிரச்சனைக்கு பாட்டி வைத்தியம்| menses problem tamil
தேவையான பொருட்கள்: முள்ளங்கி விதை, கருஞ்சீரகம், நாட்டு சர்க்கரை, கறிவேப்பிலை. முள்ளங்கி விதையை பொடி செய்து ஒரு ஸ்பூன் எடுக்கவும்.இதனுடன் ஒருபிடி கறிவேப்பிலை, அரை ஸ்பூன் கருஞ்சீரகம், நாட்டு சர்க்கரை அல்லது பனை வெல்லம் சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க

மேலும்...

 மூக்கடைப்பு சரியாக பாட்டி வைத்தியம்| Home Remedies for Nasal Congestion
ஒரு கப் தண்ணீரில்  3   பல்  பூண்டு போட்டு, அத்துடன் 1  ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து, சில நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், மூக்கடைப்பில்  இருந்து நிவாரணம் கிடைக்கும்.தினமும் புதினா, இஞ்சி, ஏலக்காய், துளசி போன்றவற்றை சேர்த்து

மேலும்...

 பெண்களின் பீரியட்ஸ் வலியை நீக்கும் பாட்டி வைத்தியம்|periods pain relief tips
கொட்டை நீக்கிய கடுக்காய்த் தோல்கள் உள்ளங்கையில் பாதியளவு எடுத்துக் கொண்டு, அத்துடன் இரண்டு டம்ளர் நீரை ஊற்றிக் கொதிக்க விடவும். அத்துடன் சிறிது இலவங்கப் பட்டையும் சேர்க்கவும். தண்ணீர் வற்றி ஒரு டம்ளர் என்ற அளவில் வரும்போது, வடிகட்டி பருகி வர,

மேலும்...

 கர்ப்பிணி பெண்களின் வயிற்றுவலி குறைய பாட்டி வைத்தியம் | karpa kala valigal
இரண்டு தேக்கரண்டி சீரகத்தூளை மூன்று தேக்கரண்டி நெய்யில் குழைத்து வெற்றிலையின் பின்புறத்தின் மீது பூசி பின்பு வதக்கி 200 மி.லி தண்ணீர் விட்டு கொதிக்கவைத்து வயிற்றுவலி ஏற்படும் நேரத்தில் ஒருவேளை மட்டும் சாப்பிட்டு வந்தால் கர்ப்பவதியின் வயிற்றுவலி குறையும்.

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in