tamilkurinji logo
 

நெல்லையில் ஒரு தலை காதல் வாலிபர் வெட்டிக்கொலை,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> தமிழகம்

நெல்லையில் ஒரு தலை காதல் வாலிபர் வெட்டிக்கொலை

First Published : Monday , 6th November 2017 08:12:42 PM
Last Updated : Monday , 6th November 2017 08:12:42 PM


நெல்லையில் ஒரு தலை காதல் வாலிபர் வெட்டிக்கொலை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே உள்ள சிவலிங்காபுரத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து (வயது 38). சிவகிரி மேலரதவீதியைச் சேர்ந்தவர் காளிராஜ் (42). பெட்டிக்கடை நடத்தி வரும் இவர் வீடு, வீடாக பால்பாக்கெட்டும் வினியோகம் செய்து வருகிறார்.


இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு காளிராஜ் வழக்கம் போல பால்போடச் சென்றார். அவர் சிவகிரி-விஸ்வநாதபேரியில் ரோட்டில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அங்கு மறைந்திருந்த காளிமுத்து தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.

இதில் சுதாரித்துக்கொண்ட காளிராஜ் காளிமுத்து கையில் இருந்த அரிவாளை பிடிங்கி அவரை வெட்டினார். இதில் காளிமுத்து தலை கழுத்து பகுதியில் பலத்த வெட்டுக்காயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

காளிமுத்து வெட்டியதில் காளிராஜிக்கு கை, கால்களில் காயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரி கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவலறிந்த புளியங்குடி துணைபோலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், சிவகிரி இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி ஆகியோர் விரைந்து வந்து கொலை நடந்த இடத்தை பார்வையிட்டனர்.


மேலும் கொலை செய்யப்பட்ட காளிமுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிந்து காளிமுத்து கொலை செய்யப்பட்டது ஏன் என விசாரணை நடத்தினர். அதில் பரபரப்பு தகவல் வெளியானது. அதன் விபரம் வருமாறு:-

காளிமுத்துவும் காளிராஜின் மனைவி கற்பகமும் பள்ளியில் ஒன்றாக படித்து வந்துள்ளனர். அப்போது இருந்தே காளிமுத்து கற்பகத்தை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் காளிமுத்து கற்பகத்தை பெண் கேட்டு சென்ற போது அவரது பெற்றோர் பெண் கொடுக்க மறுத்துவிட்டனர்.


மேலும் சில மாதங்களில் கற்பகத்தை அவரது பெற்றோர் காளிராஜூக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர். இதனால் காதலி தனக்கு கிடைக்கவில்லையே என்ற ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு காளிராஜ் வீட்டுக்குள் புகுந்த காளிமுத்து கற்பகத்தை அரிவாளால் வெட்டினார்.

இச்சம்பவம் தொடர்பாக சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து காளிமுத்துவை சிறையில் அடைத்தனர். பின்னர் சிறையில் இருந்து கடந்த வருடம் வெளிவந்த காளிமுத்து தனது காதலியின் கணவரான காளிராஜை கொலைசெய்ய திட்டம் தீட்டி வந்துள்ளார்.

இந்நிலையில் தான் இன்று காலை காளிராஜை கொலை செய்யும் நோக்கில் அரிவாளுடன் வந்த காளிமுத்து கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நெல்லையில் ஒரு தலை காதல் வாலிபர் வெட்டிக்கொலை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
நெல்லையில் ஒரு தலை காதல் வாலிபர் வெட்டிக்கொலை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
நெல்லையில் ஒரு தலை காதல் வாலிபர் வெட்டிக்கொலை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 தினகரனின் தங்கைக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
சசிகலா சகோதரி வனிதாமணியின் மகளும் டிடிவி தினகரனின் தங்கை மற்றும் அவரது கணவருக்கு 3 மற்றும் 5 ஆண்டு சிறை தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.சசிகலாவின் சகோதரி வனிதாமணியின் மகள் சீதளா தேவி, இவர் டிடிவி தினகரனின் சகோதரி ஆவார்.

மேலும்...

 மாணவியை மிரட்டிய நடிகை புவனேஷ்வரியின் மகன் கைது
நடிகை புவனேஷ்வரியின் 23 வயது மகனை சென்னையில் திருமங்கலம் போலீஸார் கைது செய்தனர். 3-வது ஆண்டு பல்மருத்துவம் படிக்கும் பெண்ணை பெட்ரொல் ஊற்றிக் கொளுத்துவேன் என்று மிரட்டியதால் திருமங்கலம் போலீஸார் மிதுன் ஸ்ரீநிவாசனைக் கைது செய்தனர்.திருமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி இதுகுறித்துக்

மேலும்...

 ஒருதலைக்காதல் சென்னையில் இளம்பெண் எரித்துக்கொலை
ஒருதலைக்காதலால் ஆதம்பாக்கத்தில் இளம்பெண் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை செய்யபட்டார் தாய் சகோதரி உயிருக்கு போராடி வருகின்றனர்.ஆதம்பாக்கத்தை  சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி ரேணுகா.  இவர்களுக்கு  2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். முத்த மகள் இந்துஜா (21), இந்துஜா பட்டதாரி பெண்.

மேலும்...

 பள்ளி மாணவியை உயிருடன் எரித்துக்கொலை செய்த காதலன் கைது
கோவை மாவட்டம் நெகமம் அருகே செஞ்சேரிப்புதூரை சேர்ந்தவர் கமலா (வயது 75). இவருடைய பேத்தி ஜான்சிபிரியா (17). இவருக்கு தாய், தந்தை இல்லை. இதனால் பாட்டி கமலா வீட்டில் தங்கி அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பிளஸ்–2 படித்து வந்தார்.அதே ஊரை சேர்ந்த

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match






















மகளிர்































Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in