tamilkurinji logo
 

பங்குச்சந்தைகள் கடும் சரிவு முதலீட்டாளர்களுக்கு ரூ.5 லட்சம் கோடி வரை இழப்பு ,Market rout: Rs 5 lakh crore investor wealth eroded in two days .tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

Market,rout:,Rs,5,lakh,crore,investor,wealth,eroded,in,two,days,.tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> இந்தியா

பங்குச்சந்தைகள் கடும் சரிவு முதலீட்டாளர்களுக்கு ரூ.5 லட்சம் கோடி வரை இழப்பு

First Published : Tuesday , 6th February 2018 01:37:30 PM
Last Updated : Tuesday , 6th February 2018 01:37:30 PM


பங்குச்சந்தைகள் கடும் சரிவு முதலீட்டாளர்களுக்கு ரூ.5 லட்சம் கோடி வரை இழப்பு ,Market rout: Rs 5 lakh crore investor wealth eroded in two days .tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதில் இருந்து இந்திய பங்குச்சந்தைகள் சரிவைச் சந்தித்துவருகின்றன. 


பங்குச்சந்தை சார்ந்த ஓராண்டுக்கு மேற்பட்ட முதலீட்டு ஆதாயத்திற்கு 10 சதவீத வரி விதிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது.

நிதி பற்றாக்குறை அதிகரிக்கும் என்ற தகவலானது பங்குச்சந்தையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்த சூழ்நிலையில் சர்வதேச பங்குச்சந்தைகளில் இன்று கடும் சரிவு காணப்பட்டது. இதன் தாக்கம் இந்திய சந்தைகளிலும் எதிரொலித்தது. அத்துடன், இந்திய பட்ஜெட் தாக்கமும் சேர்ந்துகொண்டது.

இதன் காரணமாக இன்று காலை இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் தொடங்கியது முதலே பங்குகள் கடுமையாக சரிவடைந்தன.

மும்பை பங்குச்சந்தையில் காலை 10 மணி நிலவரப்படி 1053 புள்ளிகள் சரிந்து(3.03 சதவீதம்), 33703 என்ற அளவில் வர்த்தகம் நடைபெற்றது. இதேபோல் தேசிய பங்குச் சந்தையில் நிப்டி 318 புள்ளிகள் சரிந்து 10348 என்ற அளவில் வர்த்தகம் நடைபெற்றது.

ஒருகட்டத்தில் சென்செக்ஸ் 1300 புள்ளிகளும், நிப்டி 350 புள்ளிகளும் சரிந்தன. இது 2015-க்குப் பிறகு மிகப்பெரிய வீழ்ச்சியாகும். அதன்பின்னர் சற்று உயர்வடைந்தது.

இன்றைய வர்த்தகத்தில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் பங்குகள் கூட  சரிவடைந்தன. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சுமார் ரூ.5 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டது. இதனால் முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

பங்குச்சந்தைகள் கடும் சரிவு முதலீட்டாளர்களுக்கு ரூ.5 லட்சம் கோடி வரை இழப்பு ,Market rout: Rs 5 lakh crore investor wealth eroded in two days .tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
பங்குச்சந்தைகள் கடும் சரிவு முதலீட்டாளர்களுக்கு ரூ.5 லட்சம் கோடி வரை இழப்பு ,Market rout: Rs 5 lakh crore investor wealth eroded in two days .tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
பங்குச்சந்தைகள் கடும் சரிவு முதலீட்டாளர்களுக்கு ரூ.5 லட்சம் கோடி வரை இழப்பு ,Market rout: Rs 5 lakh crore investor wealth eroded in two days .tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 நீரவ் மோடியை போல இன்னொரு தொழிலதிபர் 5 வங்கியில் 800 கோடி மோசடி
மேலும் ஒரு தொழில் அதிபர் வங்கிகளில் ரூ.800 கோடி மோசடி செய்துவிட்டு, வெளிநாடு தப்பி ஓடிவிட்டார்.மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணியாற்றும் சில அதிகாரிகள் துணையுடன் வங்கி உத்தரவாத கடிதத்தை போலியாக பெற்று சர்வதேச

மேலும்...

 3வது திருமணம் செய்து கொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான்
முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் பாகிஸ்தான் தெஹ்ரீக் ஈ இன்சாப் கட்சி தலைவரான இம்ரான் கான் 3வது முறையாக திருமணம் செய்து கொண்டார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் இம்ரான் கான்.  கடந்த 1992ம் ஆண்டு உலக கோப்பையை இவரது

மேலும்...

 நிரவ் மோடியின் ரூ.5,100 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள் பறிமுதல்
குஜராத்தை சேர்ந்த வைர நகை வியாபாரியான நிரவ் மோடி உலகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் தனது நகை ஷோரூம்களை வைத்துள்ளார். இதற்கிடையே, பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் இருந்து சுமார் 11 ஆயிரத்து 400 கோடி ரூபாய் சட்டவிரோதமாக பரிமாற்றம்

மேலும்...

 ரூ.11,600 கோடி மோசடி: யார் இந்த நிரவ் மோடி
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.280 கோடி மோசடியும், ரூ.11 ஆயிரத்து 600 கோடி சட்டவிரோத பரிவர்த்தனையும் செய்த வகையில் இன்று நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படும் நபராக வைர வியாபாரி நிரவ் மோடி(வயது47) மாறியுள்ளார்.ரூ.11 ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் உடையவர்,

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in