tamilkurinji logo


 

படங்களை எடிட் செய்ய பிக்ஸர் ரீசைஸர்,




படங்களை எடிட் செய்ய பிக்ஸர் ரீசைஸர்

First Published : Wednesday , 4th November 2009 08:51:17 PM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 294

படங்களை எடிட் செய்ய பிக்ஸர் ரீசைஸர்,

உங்களிடம் ஒரு TIFF பார்மட் பைல் உள்ளது. இதனை JPEG அல்லது BMP பார்மட்டில் பைலாக மாற்ற எண்ணினால் என்ன செய்திடலாம். முதலில் எந்த பார்மட்டில் உங்களிடம் பைல் இருந்தாலும் அதனை ஏதேனும் பிக்சர் எடிட்டர் புரோகிராமில் (எம்.எஸ். பெயிண்ட் / அடோப் போட்டோஷாப் போன்றவை) திறக்கவும்.

பின் File , மெனு திறந்து கிடைக்கும் மெனுவில் Save As என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இதில் பைல் சேவ் செய்யப்படும் இடத்தில் பைலின் பெயர் தரும் விண்டோவிற்குக் கீழா பைல் பார்மட்டின் பெயர்கள் வரிசையாகக் கிடைக்கும். இதில் எந்த பார்மட்டில் சேவ் செய்திட விருப்பமோ அதனைத் தேர்ந்தெடுத்து சேவ் செய்திட கிளிக் செய்தால் புதிய பார்மட்டில் சேவ் செய்யப்படும். அநேகமாக அனைத்து பிக்சர் எடிட்டர்களும் இந்த வசதியைக் கொண்டிருக் கின்றன.

நீங்கள் பெரும்பாலும் கேள்விப்படாத புரோகிராம் ஒன்றினைச் சொல்லட்டுமா? இணைய தளத்தில் PIXresizer என்று ஒரு இலவச புரோகிராம் கிடைக்கிறது.

இதனை டவுண்லோட் செய்து இது போன்ற பிக்சர் பார்மட் மாற்றங்களுக்குப் பயன்படுத்தலாம். பார்மட் மாற்றம் மட்டுமின்றி படங்களின் அளவு களை மாற்றவும் இது உதவுகிறது. இவ்வாறு மாற்றப்படும் படங்கள் புதிய தனியான போல்டரில் பதியப்படுகின்றன. ஒரிஜினல் படங்கள் அப்படியே மாற்றம் எதுவும் இல்லாமல் காக்கப்படுகின்றன. படங்களை இமெயிலில் அனுப்பும்போதும், இணைய தளத்தில் பதித்திட திட்டமிடுகையிலும் அவற்றின் அளவுகளை நாம் சுருக்க வேண்டியதிருக்கும். படங்களின் தன்மை கெடாமல் இவற்றைச் சுருக்க இந்த புரோகிராம் உதவுகிறது.

ஒன்றுக்கு மேற்பட்ட படங்களில் ஒரே மாதிரியான பார்மட் மாற்றம் மற்றும் அளவு மாற்றம் மேற்கொள்ள வேண்டும் என்றால் அவை அனைத்தையும் மொத்தமாக குரூப் செய்து ஒரே கட்டளையில் மாற்றுவதற்கும் இது உதவுகிறது. அனைத்தையும் மாற்ற மற்ற பிக்சர் எடிட்டர் புரோகிராம்களைக் காட்டிலும் குறைவான நேரமே எடுத்துக் கொள்கிறது. இந்த புரோகிராமைப் பயன்படுத்த டெக்னிகல் விஷய ங்கள் தெரிந்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. எல்லாமே எளிதாக மேற்கொள்ளும் வகையில் இன்டர்பேஸ் கொடுக் கப் பட்டுள்ளது. புரோகிராமைப் பதிந்து இயக்க 2 எம்பி இடம் இருந்தால் போதும். டிஜிட்டல் போட்டோ கிராபர்களுக்கும் இணையதளத்தில் படங்களை அதிகம் பயன்படுத்துபவர் களுக் கும் இந்த புரோகிராம் மிகவும் பயன் உடையதாக இருக்கும்.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்


படங்களை எடிட் செய்ய பிக்ஸர் ரீசைஸர், படங்களை எடிட் செய்ய பிக்ஸர் ரீசைஸர், படங்களை எடிட் செய்ய பிக்ஸர் ரீசைஸர்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் பின்டு சாட்ஸ் (Pinned Chats) எனும் புதிய வசதி அறிமுகம்
வாட்ஸ்அப் செயலியில் புதிய அப்டேட் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டு உள்ளது. பின்டு சாட்ஸ் என அழைக்கப்படும் இந்த வசதி முன்னதாக பீட்டா பதிப்பில் மட்டும் வழங்கப்பட்டு இருந்தது. புதிய வசதியை கொண்டு குறுந்தகவல்களை சாட் ஸ்கிரீனின் மேல் வைத்து கொள்ள முடியும்.பின் (Pin)

மேலும்...

 வாட்ஸ் அப் மூலம் வீடியோ காலிங் செய்வதில் இந்தியா முதலிடம்:
வாட்ஸ் அப் மூலம் வீடியோ கால் செய்வதில், இந்தியா முதலிடத்தில் இருப்பதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப் மூலம் வீடியோ கால் செய்யும் வசதியை கடந்த ஆண்டு நவம்பரில், வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதன்மூலம், உலகம் முழுவதும்

மேலும்...

 தகவல் தொழில்நுட்பத்தின் அடுத்த புரட்சி: யாஹூ வீடியோ மெசஞ்சர்
தொலைபேசி, பேஜர், கைபேசி, குறுந்தகவல், ஃபேஸ்புக், ஸ்கைப், வாட்ஸ்அப், வீச்சாட், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்டைம் என படிப்படியாக கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு தகவல் தொழில்நுட்பச் சாதனங்கள், நமது நட்பு வட்டாரங்களையும், தொழில்முறையிலான தொடர்புகளையும் விரிவடையச் செய்துகொண்டே போகும் அதேவேளையில் மக்களை மிக நெருக்கமாகவும் கொண்டுவர

மேலும்...

 ஐந்து ஆண்டுகளில் சாலையில் ஓடும் கூகுளின் தானியங்கி கார்
இன்னும் ஐந்தே ஆண்டில் சாலைகளில் ஓட்டுனர் இல்லாத கார்களை அறிமுகப்படுத்துவோம் என்று கூகுள் நிறுவனம் கடந்த வாரம் அறிவித்து பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. கூகுள் கடந்த சில ஆண்டுகளாக நடத்திய சோதனை ஓட்டங்களில் 11 சிறு விபத்துக்களை (மனிதர்கள் யாருக்கும் காயம்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in