tamilkurinji logo
 

பட்டப்பகலில் நீதிமன்றத்திற்கு வெளியே வந்த பிரபல ரவுடி ஓடஓட வெட்டி படுகொலை,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


செய்திகள் >>> தமிழகம்

பட்டப்பகலில் நீதிமன்றத்திற்கு வெளியே வந்த பிரபல ரவுடி ஓடஓட வெட்டி படுகொலை

First Published : Thursday , 30th November 2017 06:59:55 PM
Last Updated : Thursday , 30th November 2017 06:59:55 PM


பட்டப்பகலில் நீதிமன்றத்திற்கு  வெளியே வந்த பிரபல ரவுடி ஓடஓட வெட்டி படுகொலை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news


சென்னை, ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வழக்கில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த பிரபல ரவுடிஓட ஓட வெட்டிக் கொல்லப்பட்டார்.


சென்னை தண்டையார்பேட்டை பல்லவன்நகரை சேர்ந்தவர் விஜயகுமார் (24). பிரபல ரவுடி.  2013ம் ஆண்டு அப்பு என்பவரை வெட்டிக்கொலை செய்ய முயற்சி செய்தது உள்பட பல்வேறு வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளன. இந்த வழக்கின் விசாரணைக்காக விஜயகுமார் நேற்று மதியம் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அப்போது கோர்ட்டுக்கு வெளியே ஜீன்ஸ், டீ சர்ட் அணிந்த 6 வாலிபர்கள் ஆங்காங்கே நின்றுகொண்டு வேவு பார்த்து கொண்டிருந்தனர். இவர்களை கண்காணிக்க ஒருவர் நீல நிற சட்டையில் பைக்கை சாலை ஓரத்தில் நின்று கண்காணித்தபடி இருந்தார். காரில் வந்த மற்றொருவர் இவர்கள் அனைவரையும் மேற்பார்வை செய்துகாண்டிருந்தார்.

விசாரணை முடிந்து விஜயகுமார் வெளியே வந்தபோது நீல சட்டை அணிந்த கூலிப்படையை சேர்ந்த ஆசாமி சிக்னல் காட்டினார். இதையடுத்து 3 பைக்கில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் திடீரென விஜயகுமாரை சுற்றி வளைக்க முயன்றனர். இதைப் பார்த்த விஜயகுமார் அவர்களிடம் இருந்து தப்பி, மண்ணடி பவளக்காரன் தெருவுக்குள் ஓடினார்.

அப்போது ஒருவன் தான் வைத்திருந்த வீச்சரிவாளை வைத்து விஜயகுமாரின் பின்புறம் வெட்டினார். இதில் தடுமாறி விழுந்த விஜயகுமார் தன் உயிரை பாதுகாக்க அங்கிருந்த கடைக்குள் புகுந்தான்.

இதையடுத்து 6 இளைஞர்களையும் உள்ளே சென்று வெட்டும்படி கூலிப்படையை சேர்ந்த தலைவன் ஒருவன் உத்தரவிட்டான். அந்த வாலிபர்கள், விஜயகுமார் பதுங்கிய அறைக்குள் புகுந்து சரமாரியாக வெட்டி சாய்த்தனர்.

இதற்குள் கூலிப்படையை சேர்ந்த மற்றொரு நபர் கொலை நடந்த அறையை எட்டி பார்த்து சிவப்பு டீ சர்ட் அணிந்த நபரிடம் அவன் இறந்துவிட்டானா என்று பார்க்க சொல்கிறார். 

அவனும் தலையில் ஹல்ெமட் அணிந்தபடி உள்ளே சென்று விஜயகுமார் இறந்ததை உறுதி ெசய்கிறார். இதையடுத்து கார் மற்றும் பைக்கில் வந்த கூலிப்படை தலைவர்கள் தங்கள் வாகனங்களை எடுத்துக் கொண்டு பறந்தனர்.

கூலிப்படையை சேர்ந்த 20 முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள் தங்கள் வீச்சரிவாளை கொலை நடந்த அறைக்குள் வீசி எறிந்துவிட்டு தப்பியோடினர். இந்த சம்பவம் நடந்தபோது அருகில் இருந்தவர்களில் பலர் அலறியடித்து ஓடினர்.

பிளாட்பாரத்தில் கடை வைத்திருந்தவர்கள் கடைகளை அப்படியே போட்டுவிட்டு தப்பினர். கொலை நடந்த பக்கத்து கடையை சேர்ந்தவர் உள்ளுக்குள் இருந்தபடி கடையின் ஷட்டரை மூடி தப்பினர்.

இப்படுகொலை சம்பவத்தை சிலர் செல்போனில் பதிவு செய்துள்ளனர். தகவலறிந்து முத்தியால்பேட்டை இன்ஸ்பெக்டர் பிரின்ஸ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து, வந்து விஜயகுமாரின் சடலத்தை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீடியோ காட்சிகளை வைத்து பைக்கில் வந்த மர்ம கும்பல் யார், எதற்காக கொல்லப்பட்டார் என்று விசாரித்து வருகின்றனர்.


பட்டப்பகலில் நீதிமன்றத்திற்கு  வெளியே வந்த பிரபல ரவுடி ஓடஓட வெட்டி படுகொலை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

பட்டப்பகலில் நீதிமன்றத்திற்கு  வெளியே வந்த பிரபல ரவுடி ஓடஓட வெட்டி படுகொலை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

பட்டப்பகலில் நீதிமன்றத்திற்கு  வெளியே வந்த பிரபல ரவுடி ஓடஓட வெட்டி படுகொலை,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 காதல் திருமணம் செய்த மகளை மொட்டையடித்து சித்ரவதை செய்த தந்தை கைது
மதுரை அருகே உள்ள நாகமலை புதுக்கோட்டை தட்டனூரைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் அபிநயா (வயது 19). அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார்.அப்போது ஆட்டோ டிரைவர் வெங்கடேஸ்வரன் (25) என்பவருடன் அபிநயாவுக்கு காதல் ஏற்பட்டது. இது பற்றி

மேலும்...

 எஸ்.எஸ்.எல்.சி ,பிளஸ் 2 பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு
பிளஸ்2, பிளஸ்1, மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.தேர்வு அட்டவணை விவரம்:தேர்வு அட்டவணைபிளஸ்2 பொது தேர்வுமார்ச் 1 : மொழிப்பாடம் முதல் தாள்02: மொழிப்பாடம் 2ம் தாள்05 ஆங்கிலம் முதல் தாள்06 மொழிப்பாடம் 2ம் தாள்09: வணிகவியல், ஹோம்

மேலும்...

 நாமக்கல் அருகே வடமாநில கொள்ளையர்கள் 5 பேர் கைது
கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் ரோடு, டைடல் பார்க் அருகே ஆக்சிஸ் வங்கி உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்துக்குள் கடந்த 10-ந்தேதி அதிகாலையில் கொள்ளையர்கள் நுழைந்து ஏ.டி.எம். எந்திரத்தை கியாஸ் வெல்டிங் மூலம் உடைத்து ரூ. 26 லட்சத்து 70 ஆயிரத்து

மேலும்...

 திருச்செந்தூர் கோயில் மண்டபம் இடிந்து பெண் பலி
திருச்செந்தூர் முருகன் கோயிலில் வள்ளி குகை அருகே பிரகார மண்டபத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது.இதில் மோர் வியாபாரியான ரவி என்பவரது மனைவி பேச்சியம்மாள் என்பவர் மரணமடைந்தார்.2 பேர் காயமடைந்தனர். தொடர்ந்து தீயணைப்பு துறையினர், வருவாய் துறையினர், போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in