பணத்துக்கு கணக்கு கேட்ட கணவரை எரித்து கொன்ற மனைவி

பணத்துக்கு கணக்கு கேட்ட கணவரை எரித்து கொன்ற மனைவி
வெளிநாட்டில் சம்பாதித்து அனுப்பிய பணத்துக்கு கணக்கு கேட்ட கணவரை எரித்துக் கொன்ற மனைவியை போலீஸார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் சோழதரம் அருகே உள்ள புடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (48). லாரி ஓட்டுநரான இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். அங்கு சம்பாதித்த பணத்தை தனது மனைவி ஜான்சிராணிக்கு (38) அனுப்பி வைத்தார்.

இந்நிலையில் கடந்த மாதம் சொந்த ஊருக்கு திரும்பிய நடராஜன், ஜான்சிராணியிடம் வெளிநாட்டில் இருந்து அனுப்பிய பணத்துக்கு கணக்கு கேட்டுள்ளார்.

எல்லா பணத்தையும் செலவழித்து விட்டதாக கூறியுள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நடராஜன் வீட்டுக்கு பின்புறம் குளிக்க சென்றுள்ளார்.

அப்போது ஆவேசமடைந்த ஜான்சிராணி, சணல் சாக்குகளில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து அதை எடுத்துச் சென்று குளித்துக் கொண்டிருந்த நடராஜன் மீது வீசினார். இதில் அவர் உடல் முழுவதும் தீக்காயம் அடைந்தார்.

அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து சோழதரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடராஜன் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

இதையடுத்து சோழதரம் போலீஸார் அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி ஜான்சிராணியை கைது செய்தனர்.
https://goo.gl/MqybvJ






19 Feb 2019

குடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை

19 Feb 2019

அ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி

06 Feb 2019

குப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது

03 Jan 2019

கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

02 Jan 2019

கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்

30 Dec 2018

சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

30 Dec 2018

அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்

27 Dec 2018

பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

27 Dec 2018

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய பாடங்களின் தேர்வு நேரத்தில் அரைமணி நேரம் குறைப்பு

25 Dec 2018

குற்றவாளிகளை சுட்டுக் கொல்லும்படி ஆவேசமாக பேசிய முதல் அமைச்சர் குமாரசாமி