பத்திக்கிட்டு எரியும் பெட்ரோல் பிரச்சனை - சுழல் நாகராஜ்

பத்திக்கிட்டு எரியும் பெட்ரோல் பிரச்சனை - சுழல் நாகராஜ்
இன்றைய மக்கள் தங்களின் போக்குவரத்துக்கு பெரும்பாலும் பயன்படுத்தும் வாகனங்களாக டூவிலரும்,காரும் உள்ளன. அதுவும் டூவீலர் இல்லாத குடும்பங்களே இல்லையெனக்கூறலாம். ஆதலால் பெட்ரோலின் தேவைப்பாடு அதிகரித்துள்ளது. ஆனால் பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போவதால் எல்லோருக்கும் டீசல் கார்களை வாங்கும் எண்ணம் வந்துவிட்டது. எனவே இனி வரும் மாதங்களில் டீசல் சப்ளையை விஞ்சி தேவை அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பெட்ரோல் கார்களைவிட டீசல் காரின் விற்பனை அதிகரித்துள்ளது.

டீசல் பயன்பாடு எல்லை மீறி அதிகரிக்கும் நிலை உருவாகி உள்ளதால் எதிர்காலத்தில் டீசல் பற்றாக்குறை ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஒரு லிட்டர் டீசல் விற்பனையில் ரூபாய். 13.50 வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்பது இந்த இடத்தில் நினைவு கூற வேண்டும்.

ஆக டீசல் விற்பனை அதிகரிக்க அதிகரிக்க பொதுத்துறை நிறுவனங்களின் வருவாய் இழப்பும் அதிகரித்துக் கொண்டே போகும். இதனால் மத்திய அரசின் மானியச் சுமையும் கடுமையாக உயர்ந்து நிதிப் பற்றாக்குறையும் அதிகரித்து விடும். என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எனவே மத்திய அரசு டீசல் பயன்பாடு அதிகரிக்கும் போது டீசல் விலையை அதிகப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும். அப்போழுது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து மக்கள் சிரமத்திற்கு ஆளாகக் கூடும். எனவே மத்திய அரசு பெட்ரோலின் விலையேற்றத்தைக் கட்டுபடுத்தி டீசல் மற்றும்  பெட்ரோல் விலையின்   மாறுபாடு அதிகம் இல்லமல் இருந்தால் பெட்ரோலின் உபயோகம் அதிகமாய் விடும்.

இது இப்படியிருக்க பெட்ரோல் கிணறுகள் வேறு வறண்டு வருவாதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

பெட்ரோல் இன்னும் எத்தனை நாளைக்கு?

உலகம் முழுவதும் இது வரை கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் வளத்தையும் அதன் சாராசரி உற்பத்தியையும் ஒப்பிட்டுப் பாக்கும் போது இன்னும் 40 வருடங்களுக்கு எண்ணெய் கிடைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

உலகம் எங்கும் சுமார் 1.24 லட்சம் கோடி பீப்பாய் எண்ணெய் இருப்பு உள்ளது. இதில் சவுதி அரேபியா 21.03 சதவீதமும் ஈரான் 11.2 சதவீதமும் இருப்பு வைத்துள்ளன. பெட்ரோல் உற்பத்தியில் சவுதி அரோபியா முன்னிலையில் உள்ளது.

உலகம் முழுவதும் உற்பதியாகும் மொத்த பெட்ரோலில் 25%அமெரிக்கா பயன்படுத்துகிறது. சீனா 9.3 %, ஜப்பான் 5.8%, இந்தியா 3.3%, ரஷ்யா 3.2%, ஜெர்மனி 2.8 %, பிரேசில் 2.4 % என்ற கணக்கில் பெட்ரோல் பயன்படுத்தப்படுகின்றன. வறண்டு வரும் பெட்ரோல் கிணறுகளை மனதில் வைத்து மாற்று எரிபொருள் சக்தி கண்டுபிடித்தால் தான் இனிவரும் சந்ததியர்களுக்கு மோட்டர் வாகனங்களின் பயன்பாடு இருக்கும். இல்லையென்றால் நம் மூதையர்கள் போல் இனிவரும் சந்ததியர்களும் மாட்டு வண்டிகட்டித் தான் அலுவலகம் போகவேண்டியது வரும்.
https://goo.gl/mhT3y7


21 Aug 2014

பணிவோம், உயர்வோம்!

19 Jun 2014

மனஅழுத்தத்தை விரட்டி எப்போதும் சந்தோஷமாக இருக்க சில டிப்ஸ்

23 Mar 2014

திருமணத்திற்கு பின் பெண்களின் உடல் குண்டாவது ஏன்

15 Mar 2014

முதுமை பற்றிய பொன் மொழிகள்

09 Mar 2014

சுவாமி விவேகானந்தர் பொன் மொழிகள்

09 Mar 2014

பொன் மொழிகள்

23 Jan 2014

விரதம் என்றால் என்ன?விரதம் இருப்பதற்கான காரணம் என்ன?

15 Dec 2013

முதுமையின் பொன் மொழிகள்

19 Nov 2013

யோகாசனம்( yogasana )

29 Oct 2013

தீபாவளி --- சிந்தனைக்குச் சில வினாக்கள்!!