பயங்கர பவுன்சரில் காயமடைந்த ஆஸி. வீரர் பிலிப் ஹியூஸ் உயிருக்குப் போராட்டம்

பயங்கர பவுன்சரில் காயமடைந்த ஆஸி. வீரர் பிலிப் ஹியூஸ் உயிருக்குப் போராட்டம்
கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆஸி. உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் ஆடிய பில் ஹியூஸ், பவுன்சர் ஒன்று தாக்கியதில் தலையில் அடிபட்டு மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.


அவர் அபாய கட்டத்தை தாண்டவில்லை என்று ஆஸ்திரேலிய செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவர் பின்னால் இடம்பெறலாம் என்ற நிலை இருந்தது. இந்த நிலையில் தெற்கு ஆஸ்திரேலியா அணிக்காக 63 ரன்களில் ஆடி வந்த பில் ஹியூஸ், நியூசவுத் வேல்ஸ் பவுலர் ஷான் அபோட் வீசிய பயங்கர பவுன்சர், இடது காதையொட்டி மண்டையில் பந்து பயங்கரமாகத் தாக்க அவர் சிறிது நேரம் முழங்காலில் தன் கையை ஊன்றி தள்ளாடினார்.

ஆனால் உடனடியாக பிட்சில் மயங்கி விழுந்தார். உடனடியாக மைதானத்திற்கு உதவி வாகனம் வரவழைக்கப்பட்டு, அவர் செயிண்ட் வின்செண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடனேயே அவருக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.
அடிபட்டதினால் மூளையில் ஏற்பட்டுள்ள அழுத்தம் அல்லது அதிர்ச்சியை குறைக்க மருத்துவர்கள் போராடி வருகின்றனர். அறுவை சிகிச்சையின் விளைவுகள் தெரிய 24 மணி முதல் 48 மணி நேரங்கள் ஆகலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.


ஆஸ்திரேலிய வீரர்கள் இவர் உயிர் பிழைக்க தங்கள் வேண்டுதல்களை எற்கெனவே ட்விட்டரில் பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர்.
https://goo.gl/RbkfSR


15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்