பள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடிய மாணவர்

பள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடிய  மாணவர்
உத்தரப் பிரதேசத்தில் மாணவர் ஒருவர் வன்முறையில் ஈடுபட்டதால் அவரை பள்ளியில் இருந்து முதல்வர் வெளியேற்றினார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர், பள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் பிஜானோரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்த மாணவர் ஒருவர் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சக மாணவர்களை தாக்கியதுடன், ஆசிரியர்களையும் அடித்துள்ளார்.


உள்ளூர் ரவுடி கும்பலுடன் தொடர்பில் இருந்த அந்த மாணவர், அதைக் கூறி மற்றவர்களை மிரட்டி வந்துள்ளார். மாணவரின் அராஜகம் வரம்பு மீறவே, முதல்வர், அவரை பள்ளியில் இருந்து வெளியேற்றினார்.

பள்ளியில் இருந்த நீக்கப்பட்ட மாணவர், மாற்றுச்சான்றிதழ் பெற்றுக் கொள்ளதாக கூறி, தனது தாயுடன் வந்து பள்ளி முதல்வரை சந்தித்துள்ளார். அப்போது தனது மகனின் கல்வி வீணாக வேண்டாம், அவரை மீண்டும் பள்ளியில் சேர்த்துக் கொள்ளுமாறு மாணவரின் தாய் கூறியுள்ளார். ஆனால் முதல்வர் மறுத்துள்ளார்.

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தபோதே, அந்த மாணவர் தன் கையில் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியால் முதல்வரை நோக்கி சரமாரியாக சுட்டார். ஆனால் துப்பாக்கி குண்டுகள் ஆசிரியரின் தோள்பட்டையை உரசிக் கொண்டு சென்றன. இதற்குள் வெளியே இருந்த காவலாளிகள் ஓடி வந்தனர். அதற்குள் அந்த மாணவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். முதல்வரின் உடலில் குண்டுகள் படாததால் அவரது உயிருக்கு ஆபத்து இல்லை.

இருப்பினும் காயம்பட்டதால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் காவல்நிலையம் சென்று அவர் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய மாணவரை தேடி வருகின்றனர்.

https://goo.gl/2hAH2u


02 Jan 2019

ரபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமரை காப்பாற்ற அதிமுக எம்பிக்கள் முயற்சி - ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு

24 Dec 2018

தலித் இளைஞரை திருமணம் செய்த மகளை எரித்துக்கொன்ற தந்தை கைது

21 Dec 2018

ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 6 வயது சிறுவன் எரித்துக் கொலை

21 Dec 2018

15 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் பீகார் எம்.எல்.ஏ.வுக்கு ஆயுள் தண்டனை

18 Dec 2018

ஐபிஎல் ஏலம் : அதிக விலை போன இந்திய பந்து வீச்சாளர்கள்

14 Dec 2018

4 வது மாடியில் இருந்து குதித்து பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை

13 Dec 2018

தெலங்கானா முதல்வராக தொடர்ந்து 2-வது முறையாக சந்திரசேகர் ராவ் பதவி ஏற்றார்

11 Dec 2018

பா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு

11 Dec 2018

பா.ஜ.க. செல்வாக்கு இழந்து விட்டதையே 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது - ரஜினி

10 Dec 2018

பா.ஜனதாவை வீழ்த்த 14 கட்சி கூட்டணி- டெல்லியில் இன்று முக்கிய ஆலோசனை