பள்ளி வகுப்பறையில் மாணவனை கத்தியால் குத்திய சக மாணவன்

பள்ளி வகுப்பறையில் மாணவனை  கத்தியால் குத்திய சக மாணவன்
  நெல்லை மாவட்டம் களக்காடு மீனவன்குளத்தை சேர்ந்தவர் பேச்சிமுத்து. இவரது மகன் கண்ணன் (வயது14). இவன் களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான். அதே வகுப்பில் களக்காடு மேலபத்தையை சேர்ந்த நியூட்டன் மகன் சேன்ஸ்சியோஸ் (14) என்பவனும் படித்து வருகிறான்.

கண்ணன் வகுப்பு மாணவர் தலைவனாக உள்ளார். இதில் கண்ணனுக்கும், சேன்ஸ்சியோசுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது.

இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் பள்ளி வகுப்பறை செயல்பட்டு கொண்டிருந்தது. அப்போது திடீரென கண்ணனுக்கும், சேன்ஸ்சியோசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த சேன்ஸ்சியோஸ், தான் வைத்திருந்த கத்தியை எடுத்து கண்ணனை சரமாரியாக குத்தி விட்டு தப்பியோடி விட்டான்.

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த களக்காடு போலீசார், படுகாயம் அடைந்த மாணவன் கண்ணனை மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய மாணவன் சேன்ஸ்சியோஸசை தேடி வருகின்றனர்


18 Dec 2018

வீடு கட்ட லஞ்சம் கொடுக்க வேண்டுமா?- அதிகாரியிடம் போனில் பேசிய கமல்

14 Dec 2018

நான் உழைத்து முதல்வரானேன்: நீங்கள் அப்பாவின் தயவால் உயர்ந்துள்ளீர்கள்: ஸ்டாலின்மீது எடப்பாடி பாய்ச்சல்

14 Dec 2018

புயலால் 8 மீட்டர் வரை அலை எழும்பும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

14 Dec 2018

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வாய்ப்பு என தகவல்

13 Dec 2018

பள்ளியில் 5 மாணவிகள் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி

13 Dec 2018

கழிவறை கேட்டு தந்தை மீது புகார் தந்த 7 வயது சிறுமி.. ஆம்பூர் தூய்மை இந்தியா தூதுவரானார்

13 Dec 2018

காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் : வட தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு

13 Dec 2018

தினகரனை தவிர பிரிந்து சென்றவர்கள் யார் வேண்டுமானாலும் திரும்பி வரலாம் - முதல்வர் பகிரங்க அழைப்பு

11 Dec 2018

குடும்ப வறுமையில் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை

11 Dec 2018

கூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு: கல்லூரி மாணவி பரிதாப மரணம்