பஸ் கட்டண உயர்வை கண்டித்து 13-ந்தேதி கண்டன கூட்டம்: திமுகவின் அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்

பஸ் கட்டண உயர்வை கண்டித்து 13-ந்தேதி கண்டன கூட்டம்: திமுகவின் அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்
சென்னையில் திமுக தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் பிப்ரவரி 13-ம் தேதி கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறையில் உள்ள மாணவர்கள், அரசியல் கட்சியினரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 மேலும் கைது செய்யப்பட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் அனைத்துக்கட்சியினர் பங்கேற்பார்கள் என்று திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முன்னதாக மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் அறிவாலயத்தில் தொடங்கியது. பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து ஆலோசனை நடந்தது.


இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்கள் ஆலோசனையில் பங்கேற்றன. திருநாவுக்கரசர், வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணனுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.  


https://goo.gl/Gh3P2F






19 Feb 2019

குடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை

19 Feb 2019

அ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி

06 Feb 2019

குப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது

03 Jan 2019

கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

02 Jan 2019

கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்

30 Dec 2018

சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

30 Dec 2018

அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்

27 Dec 2018

பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

27 Dec 2018

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய பாடங்களின் தேர்வு நேரத்தில் அரைமணி நேரம் குறைப்பு

25 Dec 2018

குற்றவாளிகளை சுட்டுக் கொல்லும்படி ஆவேசமாக பேசிய முதல் அமைச்சர் குமாரசாமி