பாகிஸ்தானில் சிறுமிக்கு ஏ.கே. 47- துப்பாக்கியை பயன்படுத்த கற்றுக் கொடுக்கும் தந்தை! இந்தியாவிற்கு மிரட்டல்

பாகிஸ்தானில் சிறுமிக்கு ஏ.கே. 47- துப்பாக்கியை பயன்படுத்த கற்றுக் கொடுக்கும் தந்தை! இந்தியாவிற்கு மிரட்டல்
பாகிஸ்தானில் மகளுக்கு  ஏ.கே. 47 ரக துப்பாக்கியை எப்படி பயன்படுத்துவது என்று தந்தை கற்பிக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

கடந்த 18–ந் தேதி காஷ்மீரின் உரி ராணுவ முகாமில் ஜெய்ஷ் இ– முகமது இயக்கத்தின் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

ஒரு குறிப்பிட்ட நாடு (பாகிஸ்தான்) பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்வதாகவும், இதுபோன்ற நாடுகளை தனிமைப்படுத்தவேண்டும் எனவும் ஐ.நா. சபையில் இந்தியா குரல் எழுப்பியது. ஐ.நா.சபையில் இருநாட்டு தலைவர்களும் வார்த்தை போரில் ஈடுபட்டனர்.

இன்றளவும் சமூக வலைதளங்களில் உரி பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கவேண்டும் என்ற கோரிக்கையானது பலமாக எதிரொலித்து வருகிறது.


இதற்கிடையே சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அது என்னவென்றால் பாகிஸ்தானில் ஒன்றும் அறியாத சிறுமிக்கு அவளது தந்தை ஏ.கே. 47-ரக துப்பாக்கியை எப்படி பயன்படுத்துவது என்ற காட்சிதான்.

குழந்தைகளை வன்முறைக்கு செல்லவேண்டாம் என்று பெற்றோர்கள் அறிவுரை கூறி வளர்க்கும் பெற்றோர்களுக்கு மத்தியில் பாகிஸ்தானை சேர்ந்த தந்தை, ஒன்றும் தெரியாத குழந்தையின் மனதில் நஞ்சை விதைக்கும் காட்சியாகதான் உள்ளது இது.

இருநாடுகள் இடையே பதட்டமான சூழ்நிலை எழுந்து உள்ளநிலையில் இந்த வீடியோவானது வைரலாக பரவிவருகிறது. சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகிறது இவ்வீடியோ.

ஏ.கே. 47 ரக துப்பாக்கியை பயன்படுத்த முயற்சி செய்யும் சிறுமி, இந்திய பிரதமர் மோடியின் பெயரை இருமுறை உச்சரிக்கிறார். அவளது தந்தையும் எதையோ பேசுகிறார். சிறுமி துப்பாக்கியால் சுடவும் செய்கிறார்.

பாகிஸ்தானின் டெய்லி டைம்ஸ் பத்திரிக்கையின் முன்னாள் கட்டுரையாளர் முகமது தக்வி இந்த வீடியோவை பகிர்ந்து உள்ளார்.

”தீவிர தேசியவாதம் இப்போது குழந்தைகள் மீதும் தெளிக்கப்பட்டு வருகிறது. இந்த வெறுக்கத்தக்க தந்தை, ஏ.கே. 47 ரக துப்பாக்கியை பயன்படுத்துவது எப்படி என்று கற்றுக் கொடுக்கிறார், சிறுமி மோடியையும், இந்தியாவையும் மிரட்டுகிறார்,” என்று எழுதி உள்ளார்.

அவரது இந்த டுவிட் செய்திக்கு 3 நாட்களுக்கு: 1000-த்திற்கும் மேற்பட்ட பதில் டுவிட்கள் பதிவாகிஉள்ளது. அதில் இது ஏற்றுக் கொள்ள முடியாதது என்று எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

சிலர் தைரியமான பாகிஸ்தான் சிறுமி இந்தியாவிற்கு மிரட்டல் விடுக்கிறாள் என்று பெருமை அடித்து உள்ளனர்.

மேலும், “இது முற்றிலும் வெறுப்பூட்டும் செயல், இது நாட்டுப்பற்று கிடையாது. இது கீழ்த்தரமானது மற்றும் அபத்தமானது,” என்றும் பதில் டுவிட் செய்யப்பட்டு உள்ளது.

பாகிஸ்தானில் குழந்தைகளுக்கு ’யாரையாவது வெறுப்பதையே தேசிய அடையாளமாக’ கடந்த 60 ஆண்டுகளாக கற்பிக்கப்படுகிறது என்று முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி ஹினா ரப்பானி கார் சமீபத்தில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
https://goo.gl/b6kSs7


03 Aug 2018

1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்

11 Jul 2018

மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.

10 Jul 2018

தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு

06 Jul 2018

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா

02 Jul 2018

குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

24 Jun 2018

சவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது

19 Jun 2018

காரில் மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நடந்த விபரிதம்

18 Jun 2018

டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு

29 May 2018

முன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு தண்டனை

20 Apr 2018

டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே