பாகிஸ்தானை சுருட்டிய தென் ஆப்பிரிக்கா

பாகிஸ்தானை சுருட்டிய தென் ஆப்பிரிக்கா
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பைக்கான நேற்றைய விளையாட்டு போட்டியில் பாகிஸ்தான்-தென்ஆப்பிரிக்கா இடையே பிரிட்டன் பிர்மிங்காமில் நடைபெற்றது.

டாசில் வெற்றிபெற்று முதலில் ஆட்டத்தை தொடங்கிய தென் ஆப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர்களாக இங்ராம் மற்றும் ஆம்லா ஆகிய வீரர்கள் களமிறங்கினர்.

இதில் ஆம்லா மிகச்சிறப்பாக விளையாடி 81 ரன்கள் சேர்த்தார். பின்னர் ஆம்லா பாகிஸ்தானின் சயீத் அஜ்மல் வீசிய பந்துக்கு முகமது ஹபீசிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறினார். அதனையடுத்து விளையாடிய டீ வில்லியர்ஸ் 31 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சிறப்பாக விளையாடவில்லை.

இந்நிலையில் 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு தென் ஆப்பிரிக்கா 234 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பாகிஸ்தானின் இம்ரான் பர்ஹத் மற்றும் நசீர் ஜம்ஷெத் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இதில் பர்ஹத், அறிமுக வீரரான மோரிஸ் வீசிய பந்துக்கு 2 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார்.

பின்னர் நசீரும், மிஸ்பா உல் ஹக் ஆகியோர் முறையே 42, 55 ரன்கள் எடுத்து அவுட் ஆகி வெளியேறினர். மற்றவர்கள் யாரும் சிறப்பாக விளையாடாததால் சொற்ப ரன்களிலேயே அவுட் ஆகினர். இதனால் 45 வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 சொற்ப ரன்களிலேயே பாகிஸ்தான் சுருண்டது.

இதனால் 67 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் பாகிஸ்தான் தோல்வியை தழுவியது. தென் ஆப்பிரிக்காவின் எச்.எம். ஆம்லா ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்க பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா இரு புள்ளிகள் பெற்றுள்ளது. நடைபெற்ற இரு போட்டிகளில் தோல்வியை தழுவியதால் பாகிஸ்தானுக்கு ஒரு புள்ளி கூட கிடைக்கவில்லை.
https://goo.gl/wMHNXW


15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்