பாகிஸ்தானை தீவிரவாதத்திற்கு ஆதரவான நாடாக அறிவிக்க அமெரிக்க பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல்

பாகிஸ்தானை தீவிரவாதத்திற்கு ஆதரவான நாடாக அறிவிக்க அமெரிக்க பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல்
அமெரிக்க பாராளுமன்றத்தின் பிரதிநிதி சபை எம்.பி.க்களான குடியரசு கட்சி உறுப்பினர் டெட் போ மற்றும் ஜனநாயக கட்சி உறுப்பினர் டனா ரோஹ்ராபச்சர் ஆகியோர் பாகிஸ்தானை தீவிரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி அமெரிக்க பாராளுமன்றத்தில்  மசோதா தாக்கல் செய்துள்ளனர்.

அந்த ம்சோதாவில் பாகிஸ்தான் நம்பிக்கைக்கு உகந்த நாடாக இல்லை என்பதுடன், அமெரிக்காவின் எதிரிகளை பல ஆண்டுகளாக தூண்டிவிட்டும் வருகிறது.

தீவிரவாதம் தொடர்பான பாராமுக நடவடிக்கைகளுக்காக தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடான பாகிஸ்தானுக்கு நிதியுதவி செய்வதை நாம் நிறுத்திக் கொண்டு, அந்நாட்டை தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடாக அறிவிக்க வேண்டும்.
    
ஹக்கானி தீவிரவாத குழுக்களை ஆதரிப்பது, சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் அளித்தது ஆகிய நடவடிக்கைகள் மூலம் தீவிரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தான் அமெரிக்காவின் பக்கம் இல்லை என்பதுடன், அந்நாடு யாருக்கு ஆதரவாக உள்ளது? என்பதை நிரூபிக்க நம்மிடம் தேவைக்கு அதிகமான ஆதாரங்கள் உள்ளன.

சர்வதேச தீவிரவாதத்துக்கு பாகிஸ்தான் துணை போகிறதா? இல்லையா? என இன்னும் 90 நாட்களுக்குள் அதிபர் பராக் ஒபாமா அறிக்கை வெளியிட வேண்டும்.

அதைத்தொடர்ந்து, அடுத்த 30 நாட்களுக்குள் பாகிஸ்தான் தீவிரவாத நாடுதான் என்றோ, அல்லது, அந்த வரையறைக்குள் பாகிஸ்தானை நிறுத்த போதுமான காரணங்கள் இல்லை என்றோ அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஜான் கெர்ரி விரிவான மற்றொரு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
https://goo.gl/fLhJDn


03 Aug 2018

1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்

11 Jul 2018

மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.

10 Jul 2018

தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு

06 Jul 2018

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா

02 Jul 2018

குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

24 Jun 2018

சவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது

19 Jun 2018

காரில் மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நடந்த விபரிதம்

18 Jun 2018

டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு

29 May 2018

முன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு தண்டனை

20 Apr 2018

டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே