பாகிஸ்தான் ஐகோர்ட்டில் இந்திய தூதரக அதிகாரியின் செல்போன் பறிப்பு

பாகிஸ்தான் ஐகோர்ட்டில் இந்திய தூதரக அதிகாரியின் செல்போன் பறிப்பு
பாகிஸ்தானில் கோர்ட்டில் இந்திய தூதரக உயர் அதிகாரியின் மொபைல் போன் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவை சேர்ந்த உஸ்மா என்ற பெண், பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் திருமணம் செய்து வைக்கப்பட்டதாக புகார் கூறினார். இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த அவர், இந்திய தூதரகத்தில் தஞ்சம் புகுந்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையானது இன்று இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் நடந்தது. அப்போது உஸ்மா தரப்பில் அவருடைய வழக்கறிஞர் மாலிக் ஷா நவாஸ் நூன் மற்றும் இந்திய தூதரக அதிகாரி பியூஸ் சிங் கோர்ட்டுக்கு வந்தனர்.

அங்கு பியூஸ் சிங்கின் போனை  ஊழியர்கள் பறிமுதல் செய்தனர். அப்போது பியூஸ் சிங், தான் மொபைலில் எஸ்எம்எஸ் அனுப்பியதாகவும், போட்டோ எடுக்கவில்லை எனக்கூறினார். பின்னர் வழக்கு விசாரணை முடிந்த பின்னர் போன் திருப்பி கொடுக்கப்பட்டது. இதற்காக அபராதம் மற்றும் நடவடிக்கை எடுக்கவில்லை. பியூஸ் சிங் கோர்ட் நடவடிக்கைகளை வீடியோ எடுத்ததாக  அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதில் பெரிய பிரச்னை ஏதுமில்லை. அவருக்கு விதிமுறை தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை, தவறுதலாக செல்போனை உள்ளே  எடுத்து வந்து உள்ளார் என தகவல்கள் தெரிவித்து உள்ளன. எல்லையில் இந்திய வீரர்கள் கொலை மற்றும் குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தினால் இருதரப்பு உறவு மோசமாகி உள்ள நிலையில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

https://goo.gl/UhSM1J


03 Aug 2018

1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்

11 Jul 2018

மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.

10 Jul 2018

தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு

06 Jul 2018

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா

02 Jul 2018

குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

24 Jun 2018

சவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது

19 Jun 2018

காரில் மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நடந்த விபரிதம்

18 Jun 2018

டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு

29 May 2018

முன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு தண்டனை

20 Apr 2018

டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே