பாரபட்சமான தீர்ப்பால் தேம்பி அழுத சரிதா வெண்கலப் பதக்கத்தை பெற மறுப்பு

பாரபட்சமான தீர்ப்பால் தேம்பி அழுத சரிதா வெண்கலப் பதக்கத்தை பெற மறுப்பு
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான குத்துச்சண்டையில் லைட்வெயிட் பிரிவின் (60 கிலோ) அரையிறுதியில் அனுபவம் வாய்ந்த இந்தியாவின் எல்.சரிதாதேவியும், தென்கொரியாவின் ஜினா பார்க்கும் நேற்று கோதாவில் இறங்கினர். 4 சுற்றுகளை கொண்ட இப்போட்டியில் பெரும்பாலும் சரிதாதேவியின் ஆதிக்கமே இருந்தது.

அவரது தாக்குதலை ஜினா பார்க் சமாளிக்க முடியாமல் தடுமாறியதை அனைவரும் பார்த்துக்கொண்டுதான் இருந்தனர். ஆனால், இறுதியில் தென்கொரிய வீராங்கனை வெற்றி பெற்றதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால் அவருக்கு வெண்கலப் பதக்கமே கிடைத்தது.

இதனால் வேதனையடைந்த சரிதா தேவி கண்ணீர் விட்டு அழுதார். இந்த பாரபட்சமாக தீர்ப்பை சரிதாவின் கணவர் கண்டித்தார். நடுவரின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடும் செய்யப்பட்டது. அதையும் சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் தொழில்நுட்ப கமிட்டி நிராகரித்து விட்டது.

இந்நிலையில் இறுதிப்போட்டி முடிந்து இன்று பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அழுதபடியே மேடை ஏறிய சரிதா தேவி, அவருக்கு வழங்கப்பட்ட வெண்கலப் பதக்கத்தை அணிந்துக் கொள்ள மறுத்துவிட்டார். இதனால், அதிகாரிகளும், பார்வையாளர்களும் அதிர்ச்சியடைந்தனர். சரிதாவுக்கு வழங்கப்பட வேண்டிய வெண்கலப் பதக்கம் தற்போது போட்டி அமைப்பாளர்களிடமே உள்ளது.
https://goo.gl/h1vjUQ


15 May 2017

IPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

14 May 2017

IPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி

09 May 2017

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி

09 May 2017

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி

17 Jan 2016

3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி

12 Jul 2015

ஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

01 Jun 2015

கெய்ல் அதிரடி சதம் வீண்

28 May 2015

நீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்

25 May 2015

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதல் தயார்

25 May 2015

ஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்