பாராளுமன்ற வளாகத்தில் அ.தி.மு.க -தி.மு.க எம்.பி.க்கள் கூட்டாக போராட்டம்

பாராளுமன்ற வளாகத்தில் அ.தி.மு.க -தி.மு.க எம்.பி.க்கள் கூட்டாக போராட்டம்
மேலாண்மை வாரியம் அமைக்க  மத்திய அரசை வலியுறுத்துவது  தொடர்பாக   முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கடந்த மாதம் 22-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.  அனைத்து கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டு ஒருமித்த குரல் கொடுத்தனர்.

கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்பட   3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. காவிரி விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக பிரதமரிடம் நேரில் வலியுறுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அந்த கூட்டத்தில், அனைத்துக்கட்சி தலைவர்கள், விவசாய சங்க தலைவர்கள், அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழுவினர் பிரதமர் மோடியை சந்தித்து, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்குமாறு வற்புறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் பிரதமர் அலுவலகத்தில் இருந்து  மத்திய நீர்பாசன மந்திரியை சந்திக்குமாறு  கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது.  நேற்று மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அ.தி.மு.க- திமு.க உள்ளிட்ட எம்பிக்கள் காவிரி மேலாண்மை வாரியம்  அமைக்க கோரி கோஷங்கள் எழுப்பி அமளியில்  ஈடுபட்டனர்.

காவிரி விவகாரம் தொடர்பாக மக்களவையில் அதிமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதிமுக எம்.பி-க்கள் வேணுகோபால், குமார், அரி, அருண்மொழிதேவன், சத்தியபாமா உள்ளிட்டோர் நோட்டீசை அளித்துள்ளனர்.

இந்த நிலையில் தம்பிதுரை தலைமையில் அதிமுக எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் திமுக  மற்றும் இந்திய கம்யூ. எம்.பி-க்கள் இணைந்து  கொண்டனர்.

சுப்ரீம் கோர்ட்  தீர்ப்பின்படி உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி பதாகைகளை ஏந்தி  எம்.பி-க்கள் கோஷம் எழுப்பினர்.
https://goo.gl/BucFDj






18 Dec 2018

வீடு கட்ட லஞ்சம் கொடுக்க வேண்டுமா?- அதிகாரியிடம் போனில் பேசிய கமல்

14 Dec 2018

நான் உழைத்து முதல்வரானேன்: நீங்கள் அப்பாவின் தயவால் உயர்ந்துள்ளீர்கள்: ஸ்டாலின்மீது எடப்பாடி பாய்ச்சல்

14 Dec 2018

புயலால் 8 மீட்டர் வரை அலை எழும்பும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

14 Dec 2018

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்க வாய்ப்பு என தகவல்

13 Dec 2018

பள்ளியில் 5 மாணவிகள் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி

13 Dec 2018

கழிவறை கேட்டு தந்தை மீது புகார் தந்த 7 வயது சிறுமி.. ஆம்பூர் தூய்மை இந்தியா தூதுவரானார்

13 Dec 2018

காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் : வட தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு

13 Dec 2018

தினகரனை தவிர பிரிந்து சென்றவர்கள் யார் வேண்டுமானாலும் திரும்பி வரலாம் - முதல்வர் பகிரங்க அழைப்பு

11 Dec 2018

குடும்ப வறுமையில் மகனுக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை

11 Dec 2018

கூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு: கல்லூரி மாணவி பரிதாப மரணம்