tamilkurinji logo


 

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகல்: டிரம்ப் அறிவிப்பு,Paris Climate Deal Not Tough Enough On India, China: Donald Trumtamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

Paris,Climate,Deal,Not,Tough,Enough,On,India,,China:,Donald,Trumtamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news




செய்திகள் >>> உலகம்

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகல்: டிரம்ப் அறிவிப்பு

First Published : Friday , 2nd June 2017 12:00:40 PM
Last Updated : Friday , 2nd June 2017 12:00:40 PM


பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகல்: டிரம்ப் அறிவிப்பு,Paris Climate Deal Not Tough Enough On India, China: Donald Trumtamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாசுபாடு தொடர்பாக ஐ.நா. சபையில் உள்ள நாடுகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாரிஸ் நகரில் ஒன்று கூடி ஒருமனதாக வரைவு ஒப்பந்தம் ஒன்றினை உருவாக்கினர்.


அந்த ஒப்பந்தத்தின் படி, வளர்ச்சியடைந்த நாடுகள் தங்களிடம் உள்ள நிலக்கரி மற்றும் அனல் மின்நிலையங்களை மொத்தமாக மூடுவது என்றும், வளரும் நாடுகள் படிப்படியாக மூடுவதென்றும் முடிவு செய்யப்பட்டது.

இந்த பாரீஸ் சுற்றுச்சூழல் மாறுபாடு ஒப்பந்தத்திற்கு பல்வேறு நாடுகளும் தொடர்ச்சியாக ஒப்புதல் அளித்த வண்ணம் இருந்தன.


அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவும் ஒப்புதல் அளித்திருந்தார். ஆனால், தற்போதைய அதிபர் டிரம்ப் பாரீஸ் ஒப்பந்தத்திற்கு எதிரான மனநிலையை தொடக்கம் முதலே கொண்டிருந்தார்.

பாரீஸ் ஒப்பந்தத்திற்கு அமெரிக்க தொழிலதிபர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், இந்த ஒப்பந்தத்தை ஏற்பதா? வேண்டாமா? என்ற குழப்பநிலையிலேயே டிரம்ப் இருந்து வந்தார்.

 இந்நிலையில், இந்த ஒப்பந்தத்திலிருது அமெரிக்கா வெளியேற முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியானது.


இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் பாரிஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும், பருவ நிலை ஒப்பந்தம் தொடர்பாக  இந்தியா, சீனா ஆகிய நாடுகள் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

பில்லியன் கணக்கில் வெளிநாட்டு நிதியை இந்தியா பெற்று இந்த ஒப்பந்தத்தில் பங்கு பெற்றுள்ளதாக சாடிய டிரம்ப், கூடுதலாக நூற்றுக்கணக்கான நிலக்கரி சுரங்கங்களை கட்ட சீனாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாகவும், நிலக்கரி உற்பத்தியை இரட்டிப்பாக்க இந்தியாவுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகல்: டிரம்ப் அறிவிப்பு,Paris Climate Deal Not Tough Enough On India, China: Donald Trumtamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகல்: டிரம்ப் அறிவிப்பு,Paris Climate Deal Not Tough Enough On India, China: Donald Trumtamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகல்: டிரம்ப் அறிவிப்பு,Paris Climate Deal Not Tough Enough On India, China: Donald Trumtamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்
உலகின் மிக முக்கியமான தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், நியூயார்க் பங்குச்சந்தையில் ஜூன் காலாண்டில் 11.5 பில்லியன் டாலர் அளவிலான லாபத்தைப் பெற்றிருந்தது. இது மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில், ஜூன் காலாண்டில் 30 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. அதேபோல் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாயும்

மேலும்...

 மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.
ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் உள்ள ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தவர் அய்யூமி குபோகி (வயது 31).இவர், 2016-ம் ஆண்டு வரை அந்த ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தார். அதன் பிறகு திடீரென வேலையை விட்டு நின்று விட்டார்.அவர் நர்சாக பணியாற்றிய

மேலும்...

 தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு
தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் என்ற குகையை பார்ப்பதற்காக கடந்த ஜூன் 23-ம் தேதி சென்ற கால்பந்து வீரர்களான 11 வயது முதல் 16 வயதுடைய 12 சிறுவர்களும், அவரது பயிற்சியாளரும் சென்றனர். அவர்கள் சென்ற நேரம்

மேலும்...

 விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா
இலங்கையில் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவரும், குழந்தைகள் நலத்துறை இணை மந்திரியாக இருந்தவருமான விஜயகலா பரமேஸ்வரன் (வயது 45), வடக்கு மாகாணத்தை சேர்ந்தவர். இலங்கையின் ஒரே தமிழ் பெண் மந்திரியான இவர் கடந்த 2–ந் தேதி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in