tamilkurinji logo
 

பாலியல் தொந்தரவு புகாரில் பிரபல பாடகர் கஜல் சீனிவாஸ் கைது ,Ghazal Srinivas arrested for sexually harassing radio jockey-tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

Ghazal,Srinivas,arrested,for,sexually,harassing,radio,jockey-tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news




பாலியல் தொந்தரவு புகாரில் பிரபல பாடகர் கஜல் சீனிவாஸ் கைது

First Published : Wednesday , 3rd January 2018 01:07:55 PM
Last Updated : Wednesday , 3rd January 2018 01:07:55 PM


பாலியல் தொந்தரவு புகாரில்  பிரபல பாடகர் கஜல் சீனிவாஸ்  கைது ,Ghazal Srinivas arrested for sexually harassing radio jockey-tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

பெண் வர்ணணையாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரபல பாடகர் கஜல் சீனிவாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல தெலுங்கு பாடகர் கேசிராஜு சீனிவாஸ். இவர் கஜல் பாடல்கள் பாடி புகழபெற்றதால் கஜல் சீனிவாஸ் என்று அழைக்கப்படுகிறார்.

இவர் ‘ஆலயவாணி’ என்ற பெயரில் ‘வெப் ரேடியோ’ நடத்தி வருகிறார். இங்கு 29 வயது பெண் ரேடியோ வர்ணணையாளராக பணியாற்றி வந்தார்.

இவர் ஐதராபாத் பஞ்சகுட்டா போலீஸ் நிலையத்தில் பாடகர் சீனிவாஸ் மீது பரபரப்பு புகார் கொடுத்தார். அதில் சீனிவாஸ் தன்னை நீண்ட நாட்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருவதாக தெரிவித்து இருந்தார்.

புகாரை பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர் . இன்று அதிகாலையில் சீனிவாஸ் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பாடகர் சீனிவாஸ் கடந்த 2008-ம் ஆண்டு காந்தி நினைவு நாளில் நடந்த நிகழ்ச்சியில் 76 மொழிகளில் பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.



பாடகர் சீனிவாஸ் “ஏ பிலிம் பை அரவிந்த்” என்ற தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார்.

புகார் பற்றி பாடகர் சீனிவாஸ் கூறுகையில், “அந்த பெண் என் மகள் போன்றவர். சமீபத்தில் விபத்தில் இடது தோள்பட்டையில் அவருக்கு காயம் ஏற்பட்டதால் என்னை மசாஜ் செய்து விடச் சொன்னார். இதற்கு என்னிடம் மருத்துவ ஆதாரம் இருக்கிறது. அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தவில்லை” என்றார்.

புகார் கொடுத்த பெண் கூறுகையில், “சீனிவாஸ் என்னிடம் கடந்த 8 மாதங்களாகவே தவறாக நடந்து வருகிறார். பலமுறை கண்டித்தும் அவர் மாறவில்லை. சமீபத்தில் அவரது தொந்தரவு எல்லை மீறிப் போகவே புகார் செய்தேன்” என்றார்.

பாலியல் தொந்தரவு புகாரில்  பிரபல பாடகர் கஜல் சீனிவாஸ்  கைது ,Ghazal Srinivas arrested for sexually harassing radio jockey-tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

பாலியல் தொந்தரவு புகாரில்  பிரபல பாடகர் கஜல் சீனிவாஸ்  கைது ,Ghazal Srinivas arrested for sexually harassing radio jockey-tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

பாலியல் தொந்தரவு புகாரில்  பிரபல பாடகர் கஜல் சீனிவாஸ்  கைது ,Ghazal Srinivas arrested for sexually harassing radio jockey-tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கோவை அருகே பிரபல கன்னட நடிகர் துனியா விஜய் கைது
கடந்த வருடம் அக்டோபர் மாதம் படப்பிடிப்பின்போது 2 துணை நடிகர்கள் அணையில் இருந்து தவறி விழுந்து இறந்தனர். இது தொடர்பாக அந்த படத்தின் தயாரிப்பாளர் சுந்தர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.இந்த நிலையில் கோர்ட்டில் ஆஜராகாததால் தயாரிப்பாளர்

மேலும்...

 ஆறுதல் கூறுவது எப்படி என விஜயிடம் இருந்து ரஜினி கற்க வேண்டும் : அமீர் விமர்சனம்
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்வது எப்படி என்பதை விஜயிடம் இருந்து ரஜினிகாந்த் கற்றுக்கொள்ள வேண்டும் என்று இயக்குநர் அமீர் குறிப்பிட்டுள்ளார். கடந்த மாதம் 22ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். மேலும்

மேலும்...

 காலா’ பட திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் - முதல் அமைச்சர் குமாரசாமி
கர்நாடகாவில் புதிய மந்திரிகள் பதவி ஏற்புக்கு பின், மந்திரிசபை கூட்டம் முதல்–மந்திரி குமாரசாமி தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘காலா’ படத்திற்கு கர்நாடகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதனால் அந்த படத்தை

மேலும்...

 ஜோதிகா நடிப்பில் உருவாகும் `காற்றின் மொழி' படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம்
 ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகும் `காற்றின் மொழி' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியிருக்கிறது. ஜோதிகா நடிப்பில் கடைசியாக வெளியான `நாச்சியார்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் `செக்கச் சிவந்த வானம்' படத்திலும்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in