பாலியல் தொல்லை கொடுத்த கார் டிரைவர் மதுவில் விஷம் கலந்து கொலை

பாலியல் தொல்லை கொடுத்த  கார் டிரைவர் மதுவில் விஷம் கலந்து கொலை
 பாலியல் தொல்லை தந்த கார் டிரைவர் மதுவில் விஷம் கலந்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது கள்ளக்காதலி மற்றும் நண்பரை போலீசார் கைது செய்தனர்.  

சென்னை மதுரவாயல், ஓம்சக்தி நகர், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (36). கால்டாக்சி டிரைவர். இவரது மனைவி நளினி (32). ராஜேஷுக்கு குடிப்பழக்கம் உள்ளது.  கடந்த 15ம் தேதி இரவு வேலை முடிந்து நள்ளிரவாகியும் ராஜேஷ் வீடு திரும்பாததால், அவரது செல்போனுக்கு நளினி தொடர்பு கொண்டார்.

அப்போது ராஜேஷின் செல்போனை எடுத்து பேசிய அதே பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவர், அவர் குடிபோதையில் காருக்குள் மயங்கி கிடப்பதாக நளினிக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு நளினி வந்து, குமரேசனின் உதவியுடன் காரில் ராஜேஷை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.

அவரை வீட்டிற்குள் அழைத்து வரமுடியாததால் மனைவி நளினி கணவர் ராஜேஷை காரிலேயே படுக்க வைத்து விட்டார். இந்நிலையில் காருக்குள்ளேயே போதையில் மயங்கிக் கிடந்த கணவர் ராஜேஷை மறுநாள் காலையில் நளினி பார்த்தபோது வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜேஷின் சடலத்தை அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். பிரேத பரிசோதனை முடிந்து உடல் அடக்கம் செய்யப்பட்டது.


இந்நிலையில், ராஜேஷின் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று முன்தினம் மதுரவாயல் போலீசாருக்கு கிடைத்தது. அதில், ராஜேஷ் குடித்த மதுவில் விஷம் கலந்திருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து, ராஜேஷை காரில் கொண்டு வந்த குமரேசனை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த பத்மாவதி (30) என்ற பெண்ணுடன் ராஜேஷுக்கு கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.
இவர் அடிக்கடி மதுபோதையில் வந்து பத்மாவதிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.


இதுகுறித்து தனது மற்றொரு ஆண் நண்பரான குமரேசனிடம் கூறி, அவரை கொல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார். இதையடுத்து, ஆலப்பாக்கம் பிரதான சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் ராஜேஷ் மது அருந்தியபோது, அங்கு வந்த குமரேசன், ராஜேஷ் குடித்த மதுவில் விஷத்தை கலந்துவிட்டதாக போலீசில் குமரேசன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து மதுரவாயல் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து, குமரேசன், பத்மாவதி ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், இறந்துபோன ராஜேஷின் சடலத்தை நேற்று காலை மதுரவாயல் தாசில்தார் செந்தில்குமார் முன்னிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவர்கள் தோண்டி எடுத்து சம்பவ இடத்திலேயே மீண்டும் பிரேத பரிசோதனை செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவர் மற்றும் ராஜேஷின் உறவினர்கள் அங்கு குவிந்திருந்ததால், மதுரவாயல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

https://goo.gl/UkyGzS






19 Feb 2019

குடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை

19 Feb 2019

அ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி

06 Feb 2019

குப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது

03 Jan 2019

கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு

02 Jan 2019

கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்

30 Dec 2018

சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

30 Dec 2018

அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்

27 Dec 2018

பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

27 Dec 2018

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய பாடங்களின் தேர்வு நேரத்தில் அரைமணி நேரம் குறைப்பு

25 Dec 2018

குற்றவாளிகளை சுட்டுக் கொல்லும்படி ஆவேசமாக பேசிய முதல் அமைச்சர் குமாரசாமி